» »அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் ஜெயின்டியா மலைகள்

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் ஜெயின்டியா மலைகள்

Written By: Udhaya

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை. ஜெயின்டியா மலைகளுக்கான சுற்றுலாப் பயணம் இயற்கையழகை மட்டும் கவர்ச்சியாக கொண்டிருக்காமல், இன்றைய பங்களாதேஷ் நாட்டுன் தொடர்புடைய வளமான வரலாற்றையும் கொண்டுள்ளது.

தற்போதைய பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஜெயின்டியாபூர் என்ற நகரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த ஜெயின்டியா அரசர், நார்டியாங் என்ற சிறிய கிராமத்தை தன்னுடைய கோடைக்கால தலைநகரமாக பயன்படுத்தினார். இதன் காரணமாக இந்த பகுதிக்குள் எளிதில் சென்று வருவதும், கலாச்சார பரிமாற்றங்களும் அதிகமாகி விட்டன. வாருங்கள் சென்று வரலாம்.

ஜெயின்டியா மலைகள்

ஜெயின்டியா மலைகள்

ஜெயின்டியா மலைகள் என்பது மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய இரு மாவட்டங்களையும் குறிக்கும். மேற்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக ஜோவாய் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக க்லீஹ்ரியாட் ஆகியவை உள்ளன ஜெயின்டியா மலைகளில் உள்ள நார்டியாங் பகுதியில் மிகப்பெரிய ஒற்றைகற் சிற்பங்களின் சேகரிப்புகள் உள்ளன. இங்கிருக்கும் துர்கா தேவி கோவிலும் மிகவும் முக்கியமான பார்வையிடமாகும்.

Arkadeep Bhattacharya

போக்குவரத்து

போக்குவரத்து

ஜெயின்டியா மலைகளை அடையும் வழிகள் மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் ஷில்லாங்கில் இருந்து 65 கிமீ தொலைவில் ஜோவாய் உள்ளது. இந்த இரு நகரங்களுக்கும் இடையில் சுமார் 2 மணி நேர பயண தூரம் மட்டுமே! ஜெயின்டியா மலைகளுக்கு செல்ல சாலை போக்குவரத்து தான் முதன்மையான வசதியாக உள்ளது.

anas shaikh

ஜோவா

ஜோவா

ஜெயின்டியா மலைகளின் சுற்றுலாத் தலங்களை காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள் ஜோவாயில் தங்கலாம். ஜெயின்டியா மலைகளின் பருவநிலை ஜெயின்டியா மலைகளில் மழைக்காலங்களில் கனமான மழைப்பொழிவு இருக்கும். கோடைக்காலத்தில் மகிழ்ச்சியான சீதோஷ்ணமும் மற்றும் குளிர்காலத்தில் குளிராகவும் இவ்விடம் இருக்கும். மழைப்பொழிவு குறைவாக இருக்கும் கோடைக்காலங்களில் இங்கே சுற்றுலாப் பயணிகள் வரலாம். ஜெயின்டியா மலைகளை அடையும் வழிகள் ஜெயின்டியா மலைகள் சாலைப் போக்குவரத்தால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

Tymphew

தாட்லஸ்கெய்ன் ஏரி

தாட்லஸ்கெய்ன் ஏரி

ஜெயின்டியா மலைகளில் உள்ளவர்களிடமும் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடமும் தாட்லஸ்கெய்ன் ஏரி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.

இந்த பகுதியை ஆண்டு வந்த ஜெயின்டியாபூர் அரசரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டாக சஜ்ஜார் நியாங்லி கிராமத்தைச் சேர்ந்த 290 வகையான பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய அம்புகளின் முனைகளைக் கொண்டு இந்த ஏரியைத் தோண்டியதாக கதைகளில் சொல்லப்பட்டுள்ளது.

 ஐயலோங் பூங்கா

ஐயலோங் பூங்கா

ஐயலோங் பூங்கா, ஜோவோய் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. புனிதமான வழித்தடத்தை கொண்டிருப்பதால் பார்க்க வேண்டிய பூங்காவாக இருக்கும் இந்த இடம், பின்தோவா பள்ளத்தாக்கின் அழகிய காட்சிகளையும் காட்டும் இடமாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட DRDA சுற்றுலா திட்டத்தின் வாயிலாக இந்த பூங்கா தொடர்ச்சியாக புனரமைக்கப்பட்டும், அழகுபடுத்தப்பட்டும் வந்துள்ளது.
Psihrishi

Read more about: travel temple forest

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்