Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 20 ஸ்மார்ட் நகரங்கள் பற்றிய சுவையான தகவல்கள் !!

இந்தியாவின் 20 ஸ்மார்ட் நகரங்கள் பற்றிய சுவையான தகவல்கள் !!

By Naveen

மத்திய அரசால் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல்கட்டமாக 20 இந்திய நகரங்கள் 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியாகியிருக்கிறது. இந்த 20 நகரங்களிலும் 24மணிநேரமும் இடைவிடாத மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி, மேம்படுத்தப்பட்ட சுகாதார மேலாண்மை, நேர விரையத்தை தவிர்க்க e-governance வசதிகள் போன்றவை மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது.

முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி, சென்னை போன்ற அதிமுக்கியமான நகரங்களும், கொச்சி, ஜெய்பூர் போன்ற வளரும் நகரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. வாருங்கள், இன்னும் சில ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டியாக மாறப்போகும் நகரங்கள் எவைஎவை என்பதையும், அந்த நகரங்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.

ஜெய்பூர்

ஜெய்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூர் இந்தியாவில் மிக அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக திகழ்கிறது. 'பிங்க் சிட்டி' என்றழைக்கப்படும் இந்நகரில் ஹவா மஹால், அம்பர் கோட்டை, சிட்டி பேலஸ் போன்ற பாரம்பரியம் மிக்க பழங்கால மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் மற்றும் மாளிகைகள் ஏராளமாக இருக்கின்றன.

இந்தியாவில் நாம் நிச்சயம் சென்றுபார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும் இந்த ஜெய்பூர்.

கோயம்பத்தூர்:

கோயம்பத்தூர்:

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ச்சியடைந்த நகரமான கோயம்பத்தூர் தமிழகத்தில் இருந்து ஸ்மார்ட் சிட்டியாக கட்டமைக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகரங்களில் ஒன்றாகும்.

கோயம்பத்தூர் பஞ்சாலைகளுக்கும், இரும்பு மற்றும் அதுசார்ந்த கனரகர பொருட்கள் உற்பத்திக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கும் பெயர்போனதாகும். மருதமலை முருகன் கோயில், வெள்ளியங்கிரி மலை, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் போன்றவை இங்கிருக்கும் முக்கியமான ஆன்மீக ஸ்தலங்களாகும்.

புவனேஸ்வர்

புவனேஸ்வர்

கலிங்க தேசமான ஓடிஸா மாநிலத்தின் தலைநகராக இருக்கும் புவனேஸ்வர் நகரும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பெரும் வரலாறு கொண்ட புவனேஷ்வர் நகருக்கு வெகு அருகில் தான் புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் ஆலயமும், கோனார்க் சூரிய தேவர் ஆலயமும் அமைந்திருக்கிறது.

புனே:

புனே:

மகாராஷ்டிர மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் என்ற பெருமைக்குரிய இடம் தான் புனே ஆகும். மராத்திய மன்னன் சிவாஜியின் முக்கிய அதிகார மையங்களில் ஒன்றாக இருந்த இந்த புனே நகரம் தான் மகாராஷ்டிராவின் கலாசாரத் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது.

சூரத்

சூரத்

குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத் நகரை இந்தியாவின் வைர நகரம் என்று சொல்லலாம். தாப்தி நதிக்கரையில் அமைந்திருக்கும் சூரத் நகரில் தான் இந்தியாவிலேயே அதிகளவிலான வைரம் பட்டைதீட்டும் தொழிற்சாலைகள் இருக்கின்றன.

சூரத்தில் இருக்கும் டுமாஸ் என்ற கடற்கரையில் அமானுஷ்ய சக்திகள் உலாவருவதாகவும் அதனால் தான் அந்த கடற்கரையின் மணல் கருப்பு நிறத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

கொச்சி:

கொச்சி:

பல நூற்றாண்டுகளாக இந்தியாவிற்கும் வெளியுலகுக்கும் கடல்வழி தொடர்புக்கு பாலமாக இருந்த நகரம் கேரள மாநிலத்தில் அரபிக் கடலோரத்தில் அமைந்திருக்கும் கொச்சி ஆகும்.

சீனர்களும், ஐரோப்பியர்களும் கொச்சியின் வாயிலாகத்தான் இந்தியாவினுள் வந்திருக்கின்றனர். 'அரபிக்கடலின் அரசி' கொச்சி பழமையும், புதுமையும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தை இங்குவருபவர்களுக்கு அளிக்கிறது. கேரளாவில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடமாகும் இது.

அகமதாபாத்:

அகமதாபாத்:

போர்ப்ஸ் பத்திரிக்கையால் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நகரமாக பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த அகமதாபாத் நகரம் குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் முன்னாள் தலைநகரமான அகமதாபாத்தில் தான் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் அமைந்திருக்கிறது.

ஜபல்பூர்

ஜபல்பூர்

நர்மதா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள ஜபல்பூர், மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகும். பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்நகரம், மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.

பளிங்குக்கல் பாறைகள் அதிக அளவில் காணப்படும் பேடகாட் என்ற இடம் இங்கு அமைந்துள்ளதனால், ஜபல்பூர் இந்தியாவின் பளிங்குக்கல் நகரமாக அறியப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த ஊரில் தான் இன்று உலக அளவில் பிரபலமான ஸ்நூக்கர் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் விசாகப்பட்டினம் இந்தியாவின் பரபரப்பான துறைமுக நகரமாகும். 'இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் ஆபரணம்' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் விசாகப்பட்டினத்தில் அற்புதமான கடற்கரைகளும், கோயில்களும் இருக்கின்றன.

ராமகிருஷ்ணா மிஷன் பீச்,யாராதா பீச்,பொர்ரா குகைகள், சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில் போன்ற இடங்களுக்கு கட்டாயம் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும்.

சோலாப்பூர்

சோலாப்பூர்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று சோலாப்பூர். இதன் மாவட்டம் 14,850 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்துக்கு வடக்கில் ஓஸ்மானாபாத், அஹ்மத்நகர் மாவட்டங்களும் மேற்கில் சதாரா புனே மாவட்டங்களும் தெற்கில் பீஜாபுர் சாங்க்லி மாவட்டங்களும் கிழக்கில் குல்பர்கா மாவட்டமும் அமைந்துள்ளது.

தக்‌ஷிண் காசி என்று அழைக்கப்படும் பந்தர்பூர் ஸ்தலத்துக்காக சோலாப்பூர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்குள்ள விட்டோபா கடவுளின் கோயிலுக்காக இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமக இந்தியா முழுவதும் அறியப்பட்டுள்ளது. கார்த்திகை மற்றும் ஆஷாதி ஏகாதசி போன்ற திருவிழாக்களின் போது இங்கு நான்கிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வரை இங்கு கூடுகின்றனர்.

இந்தூர்:

இந்தூர்:

மத்தியப் பிரதேசத்தின் மாளவ பீடபூமியில் உள்ள இந்தூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அமைவிடம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பார்வையிடங்கள் என்ற அனைத்து சிறப்புகளும் நிறைந்த இந்தூர், மத்தியப் பிரதேசத்தின் இதயம் என்று மிகவும் பொருத்தமான பெயரைப் பெற்றுள்ள இடமாகும்.

லைநயமிக்க அரண்மனைகள், அற்புதமான நினைவுச் சின்னங்கள் மற்றும் அழகான மதத்தலங்கள் ஆகியவற்றின் கலவையாகவே இந்தூர் விளங்குகிறது.

புது டெல்லி:

புது டெல்லி:

இந்தியாவின் தலைநகரான புதுடில்லியும் ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. மகாபாரத காலத்தில் இருந்தே டெல்லியின் வரலாறு துவங்குகிறது. இத்தனை ஆயிரம் ஆண்டுகளும் எண்ணற்ற படையெடுப்புகளுக்கு ஆளாகியிருக்கும் டெல்லி நவீன இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறது.

என்னதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் தன்னுடைய விலைமதிப்பில்லாத பழமையையும் போற்றிப்பாதுகாக்கிறது டெல்லி நகரம்.

உதய்பூர்:

உதய்பூர்:

இரண்டாம் மகாராணா உதய் சிங் என்னும் மன்னரால் 1559ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் ராஜஸ்தானில் இருந்து 403கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மேவார் அரசின் தலை நகராக விளங்கிய இந்நகரம் 'மேவாரின் அணிகலன்' என்னும் புனைப்பெயருடன் அழைக்கப்பட்டிருக்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரிகள், அற்புதமாக கட்டப்பட்ட அரண்மனைகள், கோயில்கள் என ஒரு சிறந்த சுற்றுலாத்தலத்திற்க்கான அனைத்து அம்சங்களும் இங்கே உள்ளன.

உதய்பூர் அரண்மனை,ஷஹிளியோன்-கி-பாரி,பதெஹ் சாகர் ஏரி போன்ற இடங்கள் நாம் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்களாகும்.

Read more about: chennai coimbatore jaipur udaipur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X