» »பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

Written By: Staff
ரோஜா படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

ரஹ்மான் இசையில் பாம்பே படத்தில் வரும் 'உயிரே,உயிரே' பாடல் படமாக்கப்பட்ட கோட்டை கேரள மாநிலத்தில் காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கள் என்ற ஊரில் கோட்டையில் படம்பிடிக்கப்பட்டது. பழமையான கோட்டைகள் மற்றும் கோயில்கள், தங்கத்துகள்கள் போன்ற மணல் இருக்கும் கடற்கரை போன்றவை இருக்கும் இன்னமும் அதிகம் வெளியே அறியப்படாத அற்புதமான சுற்றுலாத்தலமாகும்.  

அனந்தபுர கோயில்: 

ரோஜா படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

Vinayaraj

திருவனந்தபுரத்தில் இருக்கும் உலகின் பணக்கார கடவுளான அனந்தபத்மநாபசுவாமியின் உண்மையான இருப்பிடம் பேக்களில் இருக்கும் இந்த அனந்தபுர கோயில் ஆகும்.அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ஏரியின் உள்ளே அமைந்திருக்கும் வெகுசில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலை சுற்றியுள்ள ஏரியில் முதலை ஒன்று இருக்கிறதாம். இது பூசாரிகள் கொடுக்கும் சைவ உணவை மட்டுமே உண்டு வாழ்கிறது என்பதும் வியப்பை ஏற்படுத்தும் தகவலாகும்.

பேக்கள் கடற்கரை: 

ரோஜா படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

Soman 

சற்றும் மாசுபடாத தங்கத்துகள்கள் போன்ற மணலை உடைய பேக்கள் கடற்கரை சுற்றிப்பார்க்க அற்புதமான இடமாகும். நகரத்தில் இரைச்சல் இல்லாமல் அமைதியாக, காலாற கடற்கரையில் நடைபோட்டபடியே சுகமாக ஒரு மாலைப்பொழுதை செலவிடலாம்.

பேக்கள் கோட்டை:  

ரோஜா படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

Riju K

அரபிக்கடலில் வரும் எதிரிக்கப்பல்களை தாக்கி அழிக்க ஏதுவாக கட்டப்பட்டது தான் இந்த பேக்கள் கோட்டை ஆகும். சிராக்கள் வம்சத்தினரின் ஆட்சி காலத்தில் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறது. ஆயுதக்கிடங்கு, அக்காலத்து பீரங்கி போன்றவற்றை இங்கே பார்க்கலாம். 

கப்பில் கடற்கரை:  

ரோஜா படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

Ikroos

பேக்கள் கோட்டையை ஒட்டியே அமைந்திருக்கும் கடற்கரையாகும். மற்ற கடற்கரைகளை போல இல்லாமல் இங்கே கடற்கரையிலேயே சிறிய சிறிய ஏரிகள் போல நீர் தேங்கியிருக்கிறது. இந்த கடற்கரைக்கு அருகில் உள்ள கொடை என்ற சிறிய குன்றின் மீது ஏறி இந்த பகுதியின் மொத்த அமைப்பையும் கண்டு ரசிக்கலாம்.  

எப்படி அடைவது?:  

ரோஜா படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

Prasad Pai

மங்களூர் விமான நிலையம் இங்கிருந்து 70கி.மீ தொலைவில் தான் உள்ளது. விமானம் மூலம் மங்களூர் வந்து ஒன்றரை மணிநேர பயணத்தில் பேக்களை அடையலாம். காசர்கோட் ரயில் நிலையம் இங்கிருந்து வெறும் 12கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வழியாக வரும் அனைத்து ரயில்களும் இங்கே நின்று செல்கின்றன. 

பெங்களூரு மற்றும் கேரளத்தின் அனைத்து முக்கிய பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

நம்ம தமிழ்நாடு எவ்வளவு அழகானது தெரியுமா?

தேக்கடி அருகேயிருக்கும் சூப்பர் இடங்கள்!!

செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

கூர்க் சுற்றுலாவின போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

குதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா

Read more about: kerala, kasargod, forts