Search
  • Follow NativePlanet
Share
» »திரிபுராவில் இத்தனை அழகான சுற்றுலாவா? வாருங்கள்!

திரிபுராவில் இத்தனை அழகான சுற்றுலாவா? வாருங்கள்!

அகர்தலா–அரண்மனைகள் மற்றும் கோயில்களின் அழகு நகரம்!

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் 'அகர்தலா நகரம்' கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும் நகர நிர்வாகப்பரப்பு ஆகியவற்றை பொறுத்து இது இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். பங்களாதேஷிலிருந்து 2 கி.மீ தூரத்திலேயே உள்ள அகர்தலா ஒரு கலாச்சார கேந்திரமாகவும் விளங்குகிறது.

திரிபுரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் வீற்றிருக்கும் இந்நகரத்தின் வழியாக ஹரோவா ஆறு ஓடுகிறது. பொழுதுபோக்கு, சாகச அம்சங்கள் மற்றும் கலாச்சார அம்சங்கள் போன்ற யாவும் நிறைந்த ஒரு சுற்றுலா நகரமாக அகர்தலா பெயர் பெற்றிருக்கிறது. காட்டுயிர் வளம் மற்றும் தாவரச்செழுமை ஆகியவற்றை கொண்டிருப்பதால் சுவாரசியமான இயற்கை எழில் அம்சங்களுக்கும் குறைவில்லை.

கோயில்களின் அழகு நகரம்

கோயில்களின் அழகு நகரம்


புவியியல் ரீதியாகவும் இப்பகுதியிலுள்ள இதர மாநில தலைநகரங்களிடமிருந்து அகர்தலா வேறுபட்டு காட்சியளிக்கிறது. பங்களாதேஷை நோக்கி நீண்டு செல்லும் கங்கை-பிரம்மபுத்திரா சமவெளிப்பிரதேசத்தின் மேற்கு முனையில் இந்த நகரம் அமைந்திருப்பதே இதற்கு காரணம். அடர்த்தியான கானகப்பகுதியை கொண்டிருப்பது இதன் முக்கியமான சுற்றுலாச்சிறப்பம்சங்களில் ஒன்று.

Shivam22383

கோயில்களின் அழகு நகரம்

கோயில்களின் அழகு நகரம்


மாநில தலைநகரமாக விளங்கினாலும் பரபரப்பில்லாத உல்லாச பொழுதுபோக்கு நகரம் போன்றே அகர்தலா காணப்படுகிறது. மற்ற பெருநகரங்களை போன்ற பரபரப்பான சூழலை இங்கு பார்க்க முடிவதில்லை. இதன் அமைதியான, சந்தடியற்ற சூழல் சுற்றுலா அனுபவத்திற்கு மிகவும் ஏற்றாற் போல் காட்சியளிக்கிறது.

Piyushozarde

 முக்கிய சுற்றுலா அம்சங்கள்

முக்கிய சுற்றுலா அம்சங்கள்


அகர்தலா நகரத்தை சுற்றி ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. பழமையான கலாச்சாரத்தை தக்க வைத்துக்கொண்டு நவீனமயமாகவும் வளர்ந்திருக்கும் முக்கியமான வடகிழக்குப்பிரதேச நகரங்களில் இது முக்கியமான நகரமாகும். சமஸ்தான மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் போன்றவறை ஏராளமாக கொண்டுள்ள இந்த நகரத்தில் நவீனக்கட்டிடங்களும் ஒன்றாக கலந்து வண்ணமயமான தோற்றத்தை அளிக்கின்றது. அகர்தலா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது கீழ்க்கண்ட இடங்களை தவறாமல் பார்த்து ரசிப்பது சிறந்தது.

Soman

உஜ்ஜயந்தா அரண்மனை:

உஜ்ஜயந்தா அரண்மனை:

மஹாராஜா ராதா கிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அகர்தலா நகரத்தில் முக்கியமாக பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும் 1901ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனை தற்போது மாநில சட்டப்பேரவையாக பயன்படுத்தப்படுகிறது.

Koshy Koshy

 நீர்மஹால்:

நீர்மஹால்:

பிரதான நகரத்திலிருந்து 53 கி.மீ தூரத்தில் உள்ள நீர்மஹால் எனும் இந்த கம்பீர அரண்மனை மஹாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. ருத்ராசாகர் ஏரியின் வடபகுதியில் வீற்றுள்ள இந்த அரண்மனை ஒரு கோடை வாச மாளிகையாக கட்டப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் ஹிந்து கட்டிடக்கலை பாணிகளின் கலவையான அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த அரண்மனை அகர்தலா நகரின் அடையாளமாக புகழ் பெற்றிருக்கிறது.

Sharada Prasad CS

 ஜகந்நாத் கோயில்:

ஜகந்நாத் கோயில்:

அகர்தலா நகரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றான இந்த ஜகந்நாத் கோயில் ஒரு அற்புத கட்டிடக்கலை அதிசயமாகும். எண்கோண வடிவில் அமைந்துள்ள இந்த கோயிலின் கருவறையைச்சுற்றி அழகான பிரதட்சிணப்பாதை காணப்படுகிறது.

Sharada Prasad CS

 மஹாராஜா பீர் பிக்ரம் காலேஜ்:

மஹாராஜா பீர் பிக்ரம் காலேஜ்:

பெயரிலிருந்தே இந்த கல்லூரி பீர் பிக்ரம் அவர்களால் கட்டப்பட்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ளலாம். தனது ராஜ்ஜியத்தின் இளைய தலைமுறையினருக்கு தரமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கல்லூரியை அவர் நிர்மாணித்துள்ளார். இது 1947ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது.

Pinakpani

 லட்சுமிநாராயண் கோயில்:

லட்சுமிநாராயண் கோயில்:

இது அஹர்தலா நகரத்திலுள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும். கிருஷ்ணானந்த செவயாத் என்பவரால் இது கட்டப்பட்டிருக்கிறது.

Shivam22383 .

 ரபீந்த் கானன்:

ரபீந்த் கானன்:

ராஜ் பவன் மாளிகையின் உள்ளே இருக்கும் இந்த ரபீந்த் கானன் ஒரு பரந்த பசுமையான தோட்டப்பூங்காவாகும். இது எல்லா வயதினராலும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு பூங்கா என்று பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது.

அகர்தலா

அகர்தலா


தற்போது ஒரு நவீன நகரமாக வளர்ந்து வருவதால் அகர்தலா நகரத்தில் நவீன வசதிகளுக்கு குறைவில்லை. உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள் மற்றும் சிக்கனமான தங்கும் விடுதிகள் போன்ற யாவும் நகர மையத்திலேயே அமைந்திருக்கின்றன. சர்வதேச, சீன மற்றும் இந்திய உணவுவகைகள் போன்ற யாவும் இங்குள்ள உணவகங்களில் கிடைக்கின்றன. எல்லா வசதிகளுடனும் குறைந்த வாடகையுடன் இங்கு தங்கும் விடுதிகள் சேவைகளை வழங்குகின்றன.

Scorpian ad

அகர்தலா

அகர்தலா

கடந்த பத்தாண்டுகளில் அகர்தலா நகரம் ஒரு வணிகக்கேந்திரமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. வடகிழக்குப்பகுதியிலிருந்து அரிசி, எண்ணெய் வித்துக்கள், தேயிலை மற்றும் சணல் போன்றவை இங்கு பெருமளவில் வியாபாரம் செய்யப்படுகின்றன. இந்த நகரத்திலுள்ள மார்க்கெட் பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்வது அவசியம். மேலே சொல்லப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாமல் பலவகையான கைவினைப்பொருட்கள் மற்றும் உல்லன் துணிவகைகளை இந்த மார்க்கெட் பகுதியில் வாங்கலாம்.

Sharada Prasad CS

 எப்படி செல்வது அகர்தலாவிற்கு

எப்படி செல்வது அகர்தலாவிற்கு


விமான மார்க்கமாக

அகர்தலா நகரத்தில் உள்ள சிங்கெர்பீல் விமான நிலையம் நகர மையத்திலிருந்து 12 தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் குவஹாத்தி மற்றும் கல்கத்தா வழியாக விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் நகரத்துக்குள் வரலாம்.

ரயில் மார்க்கம்

அகர்தலா நகர ரயில் நிலையம் நகர மையத்திலிருந்து 5.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அகர்தலாவிற்கு ரயில் மூலம் பயணம் செய்ய வேண்டுமானால் குவஹாத்தியில் ரயில் மாற வேண்டியுள்ளது. அங்கிருந்து அகல ரயில் பாதை லும்டிங் எனும் இடத்திற்கு வந்து பின்னர் அகர்தலாவிற்கான இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் வழியாக இங்கு வரலாம். தெற்கு அஸ்ஸாமிலுள்ள சில்ச்சார் எனும் இடத்திலிருந்து நேரடி ரயில் மூலம் இங்கு வரலாம்.

சாலை மார்க்கம்

அகர்தலா நகரமானது தேசிய நெடுஞ்சாலை எண் 44 மூலமாக அஸ்ஸாம் மாநிலத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 44 மற்றும் 44 ஏ ஆகிய இரண்டும் இந்த நகரத்தை சில்ச்சார், குவஹாத்தி மற்றும் ஷில்லாங் போன்ற இதர நகரங்களோடு இணைக்கின்றன. இந்நகரத்திலிருந்து பங்களாதேஷின் தலைநகரான டாக்காவுக்கு பேருந்து சேவையும் உள்ளது. பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் இப்பகுதியில் சாலைப்போக்குவரத்து தேவைகளுக்காக அதிகம் இயக்கப்படுகின்றன.

பருவநிலை

பருவநிலை

அகர்தலா நகரம் ஈரப்பதம் நிரம்பிய உப வெப்பமண்டல பருவநிலையை பெற்றுள்ளதுடன் வருடம் முழுதும் கடுமையான மழைப்பொழிவை பெறும் பிரதேசமாக காணப்படுகிறது.

கோடைக்காலம்

அகர்தலா நகரத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரியாக 28°C வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்திலும் மழைப்பொழிவு காணப்படுவதால் ஈரமான சூழலுடனும் வெப்பத்துடனும் இப்பகுதி காட்சியளிக்கிறது.

மழைக்காலம்

புவியியல் ரீதியாக மழைப்பிரதேச அமைப்பை கொண்டிருப்பதால் வருடம் முழுதுமே அதிகமான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

செப்டம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நிலவும் குளிர்காலத்தின்போது அகர்தலா நகரம் சற்றே உலர்வான குளுமையான சூழலை பெறுகிறது. காணப்படுகிறது. இக்காலத்தில் சராசரியாக 18°C வெப்பநிலை நிலவுகிறது.

PC: Abhinav

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X