ஒவ்வொரு கோவிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு பெற்றதாகத்தான் உள்ளது. நம் நாட்டில் நம்மைச் சுற்றி எண்ணற்ற அதிசயங்கள் முந்தைய காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆன்மீகம் ஆகட்டும், அமானுசியமாகட்டும் நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில், சிந்தனைக்கு அப்பாற்பட்ட எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. இவ்வாறு, நம் ஊரில் நடைபெற்ற, தற்போதும் நடந்துவரும் ஒரு அதிசயக் கோவிலைப் பற்றிதான் இந்தக் கட்டுரை வாயிலாக நாம் பார்க்கப் போகிறோம்.

வினைதீர்க்கும் திருத்தலம்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் அமைந்துள்ள இந்த திருத்தலம் 98-ஆவது சிவத்தலமாகு உள்ளது. இங்கு ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியினை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வியாழக்கிழமைகளில் திரளாக வந்து வழிபடுவது வழக்கம்.
Ssriram mt

எங்கே உள்ளது ?
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டைக்கு உட்பட்ட ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில். புதுக்கோட்டையில் இருந்து சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தை பேருந்து வாயிலாக பயணம் செய்தால் எளிதில் அடையலாம். நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக விளங்குகிறது.
Rasnaboy

கோவில் வரலாறு
குரு தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சோழ மன்னர்களால் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த தலத்தில் உள்ள அம்மையாரின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை ஆகும். மேலும், விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம் என்று ஓர் கதையும் உள்ளது. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் என்பது இக்கோவிலின் மேலும் ஒரு சிறப்பு.
Ssriram mt

ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்
ஊரின் மையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. இக்கோவிலின் உள்ளே நுழைந்தால் முதலில் நம் கண்ணில் அகப்படுவது அம்மன் சன்னதி. அடுத்தாக மூலவர் சன்னதியும், பிறகு குரு சன்னதியும் தான்.
Bernard Gagnon

தட்சிணாமூர்த்தி
ஆபத்சகாயர் என்றழைக்கப்படும் தட்சிணாமூர்த்தியின் சந்நிதி கிழக்கே நோக்கியவாறு அமைந்துள்ளது. மூலவரான குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். குருதட்சிணாமூர்த்தியின் வழிபாடு இக்கோவிலில் பிரசிதிபெற்றது என்பதால் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என பிரபலமாகப் போற்றப்படுகிறது.
Wikipedia

நாகதோஷம் நீக்கும் ஆபத்சகாயர்
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் இப்பகுதியில் தோஷம் நீக்கும் கோவிலாகவும் வழிபடப்படுகிறது. குறிப்பாக, நாகதோஷம் உடையோர் இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள விநாயகரை வேண்டிச் சென்றால் தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை. மேலும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவற்றிலும் இக்கோவில் புகழ்பெற்றது. வேண்டிய காரியம் நிறைவேறியதும் இறைவனுக்கு சிறப்பு பூஜை செய்து படையலிடுவதை இங்கு வருவோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
Ravn

திருவிழா
இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் பங்கேற்று வழிபடுவதன் மூலம் குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும் என நம்பிக்கை உள்ளது.
Mai-Linh Doan

நெய் தீபம்
வாழ்வில் முன்னேற்றமில்லையா..? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை 24 முறை சுற்றிவந்த பின் நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மை விளையும். மேலும், முல்லைப் பூ அர்ச்சனை, சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் மற்றும் பாலாபிஷேகம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவானின் அருள் பெருகும்.
Sreekumar K. S.

நடை திறப்பு
ஒவ்வொர வாரமும் வியாழக்கிழமை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களிலும் குரு பகவானை வழிபடுவது சிறந்தது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்திருக்கும்.
Ssriram mt

எப்படிச் செல்லலாம் ?
சென்னையில் இருந்து 318 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குடியை சென்றடைய செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக உளுந்தூர்பேட்டையை அடைந்து விருதாச்சலம் வழியாக ஆலங்குடியை அடையலாம். அல்லது திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி வழியாக கும்பகோணம் வழியாகவும், உளுந்தூர்பேட்டையில் இருந்து அரியலூர், திருவையாறு வழியாகவும் ஆலங்குடியை அடையலாம். இந்த வழித்தடங்கள் பயண நேரத்தை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications





