» »இந்த இடத்த புடிச்சா போதும் காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் - சோழர்களின் சாமர்த்தியம்

இந்த இடத்த புடிச்சா போதும் காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் - சோழர்களின் சாமர்த்தியம்

Written By: Udhaya

காவிரி பிரச்சினைக்கு தலைமுறை தலைமுறையாக நாம் தீர்வுகாணாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் உலகின் பாதியை ஆண்டதாக கூறப்படும் சோழர்கள் பல தலைமுறைக்கு முன்னரே ஒரு வழியை தந்துவிட்டு போயிருக்கின்றனர். காவிரி ஓடும் பாதைகள் இரு தேசங்களுக்கு சொந்தமாக இருந்தால் நிச்சயம் தண்ணீர் பிரச்சனை வரும் என்பதை அவர்கள் தெரிந்தே வைத்துள்ளனர். மேலும், அப்போது காவிரி ஓடும் தேசங்கள் என்பது மூன்று தேசங்களாக இருந்தது. குடகு தேசத்தில் உருவாகி கர்நாடக தேசத்தில் பாய்ந்தோடி சோழ தேசத்தில் கடலில் கலந்தது காவிரி நதி. இதனால்தான் சோழர்கள் காவிரியின் ஆதியை பிடித்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

ஒருவேளை அவர்களின் யோசனைப்படி, மொழிவாரி மாநிலங்கள் பிரிந்திருந்தால், இன்று காவிரி தமிழ்நாட்டுக்கு சொந்தமாகியிருக்கும். அல்லது குறைந்த பட்சம் இந்த இடத்தை பிடித்திருந்தால் போதும்.. அது எந்த இடம் தெரியுமா?

கல்லணை கட்டிய சோழன்

கல்லணை கட்டிய சோழன்


நீர்த் தேவைக்காக காவிரியில் கல்லணையைக் கட்டியவன் சோழன். அவனின் தீராத முயற்சியினால் காவிரி டெல்டா பகுதி என்றழைக்கப்படும் இந்த அணைக்கட்டு இருக்கும் பகுதி இன்றுவரை உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது. ஆனாலும் காவிரியில் நீர் வர நாம் கர்நாடகத்தைச் சார்ந்து இருக்கவேண்டியிருக்கிறது.

காவிரி என்பது சுற்றுலாத் தளமாக மட்டுமில்லாமல் பல மக்களின் வாழ்வாதாரமாகவே திகழ்கிறது. இந்த காவிரி உற்பத்தியான உடனடியாகவே பெரிய ஆறாக மாறிவிடவில்லை. அது உற்பத்தியாகும் இடத்தில் வெறும் பொய்கையாகவே பிறக்கிறது காவிரி நதி. பின் சில கிமீகள் அமைதியாக பாய்ந்து பின் அசுர வேகம் எடுக்கிறது. இந்த குறிப்பிட்ட இடங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன. அந்த இடம் மட்டும் தமிழகத்துக்கு கிடைத்தால்.....!?

காவிரி உற்பத்தியாகும் இடம் முதல் தமிழகத்துக்குள் நுழையும் இடம் வரை மிகச்சிறந்த பகுதிகளாக உள்ளன. வாருங்கள் அது பற்றி விரிவாக காண்போம்.

புகைப்படம்: Ashwin Kumar

 சென்னை டு பெங்களுரு:

சென்னை டு பெங்களுரு:


சென்னையில் இருந்து பெங்களுரு 326 கி.மீ தூரமாகும். இந்த பயணம் குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். NH4 வழியாக ராணிபேட்டை வந்து அங்கிருந்து சித்தூர் வழியாக இல்லாமல் வேலூர் கிருஷ்ணகிரி வழியாக செல்வது சிறந்தது. விரும்புவோர் வேலூரில் புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணியை சுவைத்துவிட்டு பயணத்தை தொடரலாம். கிருஷ்ணகிரியில் இருந்து ஹோசூர் வந்து அங்கிருந்து பெங்களுருவை சுலபமாக அடையலாம். இந்த சாலை நெரிசல் இல்லாமல் சீக்கிரம் செல்லக்கூடிய வகையில் உள்ளது.

வேலூர்:

வேலூர்:


பெங்களுருவை அடையும் முன்பாக எங்கேனும் ஒரு சின்ன சுற்றுலா செல்லலாம் என நினைப்பவர்கள் வரும் வழியான வேலூரில் ஒரு சிற்றுலா செல்லலாம் . அங்கு உள்ள பழமைவாய்ந்த வேலூர் கோட்டை, அதனுள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ஏலகிரி மலை ஆகியவை உள்ளன. தமிழ் நாட்டில் பாராகிளைடிங் ஏலகிரி மலையில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரில் கிடைக்கும் உலகப்புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணி அதி சுவையானது. அதனை ஒரு பிடி பிடிக்க மறந்து விடாதீர்கள். வேலூரில் இருக்கும் தங்க கோயில் தமிழ் நாட்டின் அதிசயங்களில் ஒன்று. முடிந்தால் அங்கும் சென்று வாருங்கள்.

Bhaskaranaidu

பெங்களுரு:

பெங்களுரு:

பெங்களுருவில் இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் பெங்களுருவை சுற்றிப்பார்க்க கிளம்புங்கள். பெங்களுருவில் அமைதியாக சுற்றிப்பார்க்கவும் சரி, நண்பர்களுடன் கொண்டாடவும் சரி ஏராளமான இடங்கள் உண்டு. வோண்டேர் லா, லால் பாக் மலர் பூங்கா, பநேர்கட்டா தேசிய பூங்கா, கிப்பன் பூங்கா மற்றும் பல ஷாப்பிங் மால்கள் என முழுமையான ஒரு அனுபவத்தை பெங்களுருவில் நீங்கள் பெறலாம்.

Image Source: Wikipedia

பெங்களுரு - மைசூர்:

பெங்களுரு - மைசூர்:


பெங்களுருவை சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்தபடியாக மைசூர் நோக்கி பயணப்படுங்கள். பெங்களுருவில் இருந்து கூர்க் செல்ல மூன்று முக்கிய வழிகள் உள்ளன அதில் கனகபுரா மைசூர் வழியாக NH209இல் கூர்க்கை அடையும் வழியே சிறந்தது. மொலுமொலுப்பான அந்த சாலையில் பயணித்தால் 6 மணி நேரத்தில் நாம் கூர்க்கை அடைந்துவிட முடியும். இதை தவிர இருக்கும் மற்ற இரண்டு சாலைகளில் சென்றால் தூரம் குறைவு என்றாலும் மோசமான சாலைகளை கொண்டவை அவை. நாம் செல்லும் NH209 சாலையில் சுற்றிப்பார்க்கவும் நல்ல இடங்கள் உள்ளன.

 மைசூர்:

மைசூர்:

கனகபுராவில் இருந்து மலவல்லி, பானூர் வழியாக அளனஹள்ளியை அடைந்து அங்கிருந்து மைசூரை எளிதாக அடையலாம். மைசூரில் கண்டிப்பாக சுற்றிபார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. குறைந்தது ஒரு நாளேனும் மைசூரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
புகைப்படம்: Suchana Seth

மைசூரில் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள்:

மைசூரில் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள்:

கர்நாடகாவின் முக்கிய சுற்றுலா நகரமான மைசூரில் மைசூர் அரண்மனை, பிருந்தாவன் கார்டென், அற்புதமான இயற்கை காட்சிகளை வழங்கும் குக்கரஹல்லி ஏரி போன்றவை உள்ளன. மைசூரில் இருந்து சற்று தொலைவில் நூற்றுக்கணக்கான பறவைகள் வரும் ரங்கனதிட்டா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. குழந்தைகளுடன் சுற்றிப்பார்க்க நல்ல இடமாக மைசூர் திகழ்கிறது. Image Source: Flickr

மைசூர் டு கூர்க்:

மைசூர் டு கூர்க்:


பயணத்தின் இறுதி கட்டமாக மைசூரில் இருந்து கூர்க் வரையிலான இறுதிகட்ட பயணத்தை துவங்கலாம். மைசூரில் இருந்து மாநில நெடுஞ்சாலை 88 வழியாக நேராக கூர்க்கை அடையலாம். 130 கி.மீ தொலைவுள்ள இந்த பயணத்தை முடிக்க குறைந்தது இரண்டரை மணி நேரமாவது ஆகும்.

 கூர்க் என்கிற குடகு

கூர்க் என்கிற குடகு

இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

Gaurav Vasare

கூர்கின் சுற்றுலாத்தலங்கள்

கூர்கின் சுற்றுலாத்தலங்கள்

கூர்கின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அப்பே அருவி, துபாரே, பைலாகுப்பே, நிசர்கதாமா, ராஜா சீட், தலைக்காவேரி, பாகமண்டலா, இருப்பு அருவி, வாலனூர் பிஷிங் காம்ப், தடியாண்டமோல், நால்கு நாடு அரமணே ஆகியவை அறியப்படுகின்றன.


L. Shyamal

தடியாண்டமோல்

தடியாண்டமோல்

கூர்கிலிருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தடியாண்டமோல், கர்நாடக மாநிலத்தின் 3-வது உயரமான மலைச்சிகரமாகும். தடியாண்டமோல் எனும் இந்தப் பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்துள்ள ஒரு சொல்லாகும். இதற்கு பெரிய மலை என்ற அர்த்தத்தை கொள்ளலாம். கடினமான மலையேற்றத்துக்கு தயக்கம் காட்டும் பயணிகள் பாதி தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம். இருப்பினும் மீத தூரத்தை மலையேற்றம் மூலமாக கடக்க வேண்டியிருக்கும். உச்சியில் ஏறிய பின் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை.
படம் : Prashant Ram

 யானைகள் பயிற்சி முகாம், துபாரே

யானைகள் பயிற்சி முகாம், துபாரே

கூர்கிலிருந்து 24 கி.மீ தொலைவில் துபாரே பகுதியில் அமைந்துள்ள யானைகள் பயிற்சி முகாமை நீங்கள் கூர்க் வரும் போது தவற விட்டுவிடக் கூடாது. இங்கு யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம். அத்துடன் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானைச் சவாரியிலும், பரிசல் பயணத்திலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை களிக்கலாம்.
படம் :Potato Potato

பைலாகுப்பே

பைலாகுப்பே

பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது கூர்க் நகரிலிருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது. பைலாகுப்பேயின் சிறப்பம்சம் இங்குள்ள தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்' என்று அழைக்கப்படும் திபெத்திய மடாலயமாகும். இந்த திபெத்திய மடாலயத்தின் உள்ளே தங்க நிறத்தில் ஜொலிக்கும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற சிலைகள் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளுடன் பார்வையாளர்களை பிரமிப்பில் சொக்க வைக்கின்றன. அதோடு பூஜை முரசு, பூஜை சக்கரம் மற்றும் கதவுகள் யாவுமே நுட்பமான நேர்த்தியான கைவினைக்கலை வேலைப்பாடுகளை கொண்டுள்ளன. படம் : Lingeswaran Marimuthukum

அப்பே நீர்வீழ்ச்சி

அப்பே நீர்வீழ்ச்சி

கூர்க் நகரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள அப்பே நீர்வீழ்ச்சி அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக ஒரு தொங்கு பாலம் ஒன்று அருவிக்கு திரில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோயிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும். படம் : Gopal Vijayaraghavan

நிசர்கதாமா தொங்குபாலம்

நிசர்கதாமா தொங்குபாலம்

கூர்கிலிருந்து 39 கி.மீ தூரத்தில் , காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு நிசர்கதாமா. இங்கு காவேரி ஆற்றை கடந்து தீவுக்குள் செல்வதற்காக 90 மீட்டர் நீளத்துக்கு இந்த மரத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

படம் : Lingeswaran Marimuthukum

 வேண்டுதல் கற்கள்

வேண்டுதல் கற்கள்

கூர்கிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள மடிக்கேரி பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு காணப்படும் இந்தக் கற்கள் வேண்டுதல் நிறைவேற மக்களால் வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. படம் : Lingeswaran Marimuthukum

தலைக்காவேரி

தலைக்காவேரி


தலைக்காவேரி முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்போது ஒரு குளம் (தீர்த்தவாரி) அமைந்துள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில் சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது ஐதீகமாகும்

 பாகமண்டலா

பாகமண்டலா

இந்துக்களுக்கான ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாக பாகமண்டலா விளங்குகிறது. காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இவ்விடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர்.

குடகு பெயர்க்காரணம்

குடகு பெயர்க்காரணம்

குடகு எனும் பெயர் வந்ததற்கு காரணமாக பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. ஒரு சிலர் இது கொடவா ஆதிவாசிகளின் இருப்பிடமாக இருந்ததால் அவர்கள் மொழியில் குரோத தேசா எனும் சொல்லில் இருந்து பிறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். Kalidas Pavithran

 ஆட்சி

ஆட்சி

கொடகுப்பகுதியை பற்றிய வரலாற்று குறிப்புகள் கொடகுப்பிரதேசம் கங்கா வம்சத்தினரின் ஆட்சியில் இருந்த 8ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அவர்களுக்கு பின் பாண்டியர்கள், சோழர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள் மற்றும் சங்களவர்கள் என்று பல ராஜ வம்சங்களால் இது ஆளப்பட்டுள்ளது. 1174 ம் ஆண்டு ஹொய்சள வம்சத்தினர் இந்த பகுதியை கைப்பற்றினாலும் பின்னர் 14 ம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகர ராயர்களிடம் கொடகை இழந்தனர்.

பாண்டியர்களிடமிருந்து இந்த பகுதியை வென்ற சோழர்கள், காவிரி நீரை முழுமையாக தமிழர்களுக்குக் கிடைக்கச்செய்தனர். எனினும் அந்த காலத்தில் இருந்த அரசியல் சூழல்கள் பிற்காலத்தில் அந்த பகுதியை இழக்கச்செய்தது. எனினும் அதற்கடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும் காவிரி நீர் அனைவரும் பயன்பெறும்படியே வைத்தனர். மொழி வாரிமாநில பிரிவினைக்கு பிறகுதான் இந்த பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

ஒருவேளை சோழர்கள் கையாண்ட விதத்தில் குடகு தேசம் தமிழகத்துடனேயே இருந்திருந்தால் காவிரி நீருக்கு சண்டை வந்திருக்காது. மேலும் குடகு, மாண்டியா பகுதி மக்களும், காவிரி பகுதி மக்களும் சகோதரத்துடனேயே இருக்கலாம்.

Rajeev Rajagopalan

Read more about: travel, temple, river, chennai, coorg