» »திராவிட நாட்டுக்குள் ஓர் இனிய பயணம் செல்வோமா?

திராவிட நாட்டுக்குள் ஓர் இனிய பயணம் செல்வோமா?

Posted By: Udhaya

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எங்கே இருந்தது? வரலாறு தெரியுமா?

அது என்ன திராவிட நாடு என்று கேட்கும் அளவுக்கு நீங்கள் விசயம் தெரியாதவர்களாக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

திராவிட நாடு என்பது திராவிட மொழிகள் பேசும் பகுதிகளான தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளத்துடனுடன் கூடிய மிகப் பெரிய பரப்பு கொண்ட பகுதிகள். இந்த திராவிட நாடு கோரிக்கை பல ஆண்டுகளாக வைத்திருந்த பெரியாரும், அண்ணாவும் பின்னாளில் இந்த கோரிக்கை வலுவிலந்துவிடும் என்பதையும் அறிந்தே வைத்திருந்தனர்.

அண்ணா, இந்தியத்துடன் இணைந்திருந்தாலும், திராவிடத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதையும் வலியுறுத்தி வருகிறது அவரால் தொடங்கப்பட்ட திமுக. சரி இப்போது திராவிட நாடு என்ற கோரிக்கை வலுவாக டுவிட்டரில் எழுந்து வந்தாலும், அது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

திராவிடநாடு என்ற ஒன்று இருந்தால் சுற்றுலா எப்படி இருக்கும். திராவிட நாடு என்று குறிப்பிடப்படும் தென்னிந்தியாவில் ஒரு அற்புதமான கோடை இன்பச் சுற்றுலா செல்வோம் வாருங்கள்!

குன்னூர்

குன்னூர்

கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல் உங்களை உடனடியாக காதலில் வீழ்த்தும். தனிப்பட்ட மணத்திற்கும் சுவைக்கும் பெயர் பெற்ற நீலகிரி தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

டால்பின் மூக்கு, குவன்சே தேயிலை தொழிற்சாலை, லேம்ப் பாறை, துரூக் கோட்டை, மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு, சிம்ஸ் பூங்கா, கட்டாரி அருவி, புனித ஜார்ஜ் ஆலயம் முதலிய இடங்கள் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாகும்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல எளிதான வழி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலை தான். வழியில் தான் குன்னூர் உள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்திலும் செல்லலாம்.

மலைரயிலிலும் செல்லலாம்.

 கோத்தகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை.

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட், கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


கோத்தகிரிக்கு ஒருவர் செல்ல விரும்பினால் சாலை வழியாக செல்வதே சிறந்த மார்க்கமாக இருக்கும். சமவெளியில் இருந்து குன்னூருக்கு எந்த வாகனத்திலும் செல்வது எளிது. நீலகிரிக்கு செல்வதற்கான மிகப் பழமையான பாதையான கோத்தகிரி மலைப்பாதை சிறந்த வழியாகும்.

நீலகிரி

நீலகிரி

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ஊட்டியைச் சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். நெருங்கிய விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது.

ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட சற்று குளிராகவே இருக்கும்.

மசினகுடி

மசினகுடி

மசினகுடி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிக அழகான, மனிதனால் இன்னமும் சற்றும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழ்கிறது மசினகுடி. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது வார இறுதி விடுமுறைகளை களித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்


மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


மசினகுடியை விமானம் மூலமாக சென்றடைய நினைப்பவர்கள் கி.மீ 123 தொலைவில் இருக்கும் கோயம்பத்தூர் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து கார் மூலமாக சென்றடையலாம். சாலை முலமாக செல்ல நினைப்பவர்கள் கோயம்பத்தூரில் இருந்து ஊட்டியின் மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து 81கி.மீ தொலைவில் இருக்கும் மசினகுடியை அடையலாம்.

மைசூரு

மைசூரு

கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும்.

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

மைசூர் வனவிலங்கு காட்சியகம், சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலேஸ்வரா கோயில், செயிண்ட் ஃபிலோமினா சர்ச், பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன் அரண்மனை ஓவியக்கூடம், லலித் மஹால் அரண்மனை, ஜயலட்சுமி விலாஸ் மாளிகை, ரயில்வே மியூசியம், கரன்ஜி ஏரி மற்றும் குக்கார ஹள்ளி போன்றவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாகும்

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மைசூருக்கு பெங்களூரிலிருந்து தொடர்ந்த பேருந்து சேவைகள் உள்ளன. கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளையோ அல்லது தனியார் சொகுசு பேருந்துகளையோ பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

குடகு

குடகு

கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது.

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

இங்கு அப்பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர்வீழ்ச்சி, மல்லள்ளி நீர் வீழ்ச்சி, மடிகேரி கோட்டை, ராஜா சீட், நலநாடு அரண்மனை மற்றும் கடிகே (ராஜா சமாதி) போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கொடகு பகுதிக்கு அருகில் ரயில் நிலையம் மைசூர் ஆகும். இது கொடகிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள மங்களூரில் சர்வதேச விமான நிலையமும் உள்ளது. இங்கிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கும் வெளி நாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன.

மங்களூரு

மங்களூரு

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

மங்களூரின் அடையாளமாக திகழும் இடங்களாக கதரி மஞ்சுநாதர் கோயில், செயிண்ட் அலோசியஸ் பீடம், ரொஸாரியோ தேவாலயம் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை விளங்குகின்றன. தங்க நிற கடற்கரையை சூரிய வெளிச்சத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு சோமேஸ்வரா கடற்கரை மற்றும் தன்னீர்பாவி கடற்கரை போன்ற நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள் உள்ளன.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மங்களூரை சாலை மார்க்கமாக NH-13, NH-17, NH-48 போன்ற தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன.

மங்களூர் பெங்களூர், சென்னை, மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் பல ரயில் மார்க்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.
மங்களூர் செண்ட்ரல், மங்களூர் ஜங்ஷன் என்று இரண்டு ரயில் நிலையங்கள் இங்கு உள்ளன.

Read more about: travel, dravida nadu