» »சிக்கிம் மாநில காடுகளுக்குள் ஓர் பயணம் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 2

சிக்கிம் மாநில காடுகளுக்குள் ஓர் பயணம் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 2

Written By: Udhaya

காடு திரிந்து பழகுவது நமக்கு ஒன்றும் புதியது அல்ல.. நமது மூதாதையர்கள் பிழைப்புக்காக நாடோடி வாழ்க்கை வாழ்வதற்கு முன்னரே மனிதக் குரங்காக நாம் அங்கிங்கு அலைந்து திரிந்துள்ளோம். ஓரிடத்தில் நிலைத்து வாழ ஆரம்பித்தபின், சுற்றுலா எனும் பொழுதுபோக்காக காடு திரிகிறோம்.

மத்தியப்பிரதேசத்தின் காடுகளுக்குள் ஓர் அற்புதப் பயணம் #காட்டுயிர்வாழ்க்கை 1

காடுகளுக்குள் செல்வது நம்மில் பலருக்கு ஒரு சாகச உணர்வைத் தரும். நிறைய திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளதைப் போலவே, காடுகளில் நட்புக்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்ந்து திரிவதென்பது நிச்சயம் சூப்பரான ஒரு விசயம் அல்லவா? இந்த பகுதியில் நாம் செல்லவிருப்பது சிக்கிம் மாநில காடுகளுக்குள்....

சிக்கிம்

சிக்கிம்


இமயமலைகளுக்கிடையே இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அமைந்திருக்கிறது சிக்கிம் மாநிலம். சிக்கிம் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்தே ஆகவேண்டிய அளவிற்கு அழகு நிறைந்தவை. சிக்கிம் மாநிலம் பெருமைப்படத்தக்க பல தனிச்சிறப்புகளை உடையதாகும்.

அதிலும் உள்ளூர் மக்களால் 'சொர்க்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இந்த இடத்துக்கு பயணிக்கலாமா?

Nadeemmushtaque

 கஞ்சன்ஜங்கா

கஞ்சன்ஜங்கா

கஜ்சன்ஜங்கா மலை உலகிலேயே மிக உயரமான மூன்றாவது மலைச்சிகரம் ஆகும். இது இமயமலையின் ஒரு பகுதி. கஞ்சன்ஜங்கா எனும் பெயருக்கு ‘பனிமலையின் ஐந்து புதையல்கள்' என்பது பொருளாகும். இப்பகுதியில் அமைந்துள்ள ஐந்து மலைச்சிகரங்கள் தங்கம், வெள்ளி, ரத்தினம், தானியம் மற்றும் வேதநூல் ஆகிய ஐந்து முக்கிய பொருட்களை குறிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

Santanu Paul

மலையில் இருப்பவை

மலையில் இருப்பவை


இந்த மலையில் ரோடோடென்ரோன் மர வகைகள் மற்றும் ஆர்க்கிட் மலர்த்தாவரங்களும், அருகி வரும் உயிரினங்களான பனிச்சிறுத்தை, ஏசியாட்டிக் கருப்புக்கரடி, ஹிமாலயன் கஸ்தூரி மான், சிவப்பு பாண்டா, ரத்தக்காக்கை மற்றும் செஸ்ட்னெட் பிரெஸ்ட்டட் பாட்ரிட்ஜ் (கௌதாரி) ஆகியனவும் வசிக்கின்றன.

கஞ்சன்ஜங்கா மலை பல சுவாரசியமான வரலாற்றுக்கதைகளை பின்னணியில் கொண்டுள்ளது. 1852 வரை இதுதான் உலகிலேயே மிக உயரமான மலையாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

G Devadarshan Sharma

மலைக்கு செல்ல அனுமதி எளிதில்லை

மலைக்கு செல்ல அனுமதி எளிதில்லை

டார்ஜிலிங் பகுதியிலிருந்து காணக்கிடைக்கும் கஞ்சன்ஜங்கா மலையின் அழகு உலக அளவில் பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த மலையில் மலையேற்றம் செய்வதற்கான அனுமதி சுலபத்தில் கிடைப்பதில்லை. இதனாலேயே என்னவே இது தனது கன்னிமை கெடாது தூய்மையுடன் வீற்றிருக்கிறது. ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வண்ணங்களில் இம்மலை காட்சியளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Carsten.nebel

வானத்திலிருந்து விழுந்த சுவர்கள்

வானத்திலிருந்து விழுந்த சுவர்கள்

டார்ஜிலிங் போர் நினைவுச்சின்னத்திலிருந்து கஞ்சன்ஜங்கா மலையின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். குளிர் அதிகமாகி, பருவநிலை மாறும்போது இந்த மலைகள் வானத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் வெள்ளை நிற சுவர்கள் போன்று காட்சியளிக்கின்றன. சிக்கிம் மாநில மக்கள் இம்மலையை புனித மலையாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது. இம்மலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மலையேற்றப்பாதைகளில் கோயேச்சா லா டிரெக் மற்றும் கிரீன் லேக் பேசிக் பாதை ஆகியவை பிரசித்தமாகி வருகின்றன. வருடமுழுதும் கஞ்சன்ஜங்கா மலைப்பகுதி இனிமையான பருவநிலையுடன் காட்சியளிக்கிறது.

Nadeemmushtaque

 யும்தாங்

யும்தாங்

அபரிவிதமான இயற்கை அழகுகளைத் தன்னிலேக் கொண்டிருக்கும் யும்தாங்கை வசந்த காலத்தில் பல வண்ண காட்டு மலர்கள், குறிப்பாக ப்ரைமுலஸ் மற்றும் ரோடோடென்ட்ரான்ஸ் மலர்கள் அலங்கரித்திருக்கின்றன. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகள் யும்தாங்கிற்குச் சென்றால் இந்த மலர்களின் அதிசய வண்ணக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம். இதைத் தவிர இங்கு பல இதமான சுற்றுலாத் தலங்களும் உள்ளன. யும்தாங்கின் அழகினைப் பாராட்டும் வகையில் யும்தாங் "அழகிய மலர்களின் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படுகிறது.

Sujay25

 சூடான நீரூற்று

சூடான நீரூற்று


யும்தாங்கின் மிக முக்கியமான சுற்றுலா பகுதி ஷின்பா ரோடோடென்ட்ரான் பூங்கா ஆகும். சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் இந்த பூங்கா, ஏப்ரல் முதல் மே மாதம் வரை பூத்துக் குலுங்கும் 24 வகையான ரோடோடென்ரான் மலர்களைப் பரப்பி வைத்திருக்கிறது. யும்தாங்கின் வலது பக்கத்தில் ஒரு சூடான நீரூற்றும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பசுமையான சமவெளிகள், அழகான இயற்கைக் காட்சிகள், குளுமையான பைன் மற்றும் வெள்ளி காடுகள், மிக உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். அதோடு இந்த பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டும் பிரபலமாக உள்ளது.

Kurt Stüber

யுமேசாம்டோங்

யுமேசாம்டோங்

யும்தாங்கிலிருந்து 16 கிமீ தொலைவில் யுமேசாம்டோங் என்ற பகுதி அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த பகுதி இயற்கை அழகால் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு நவம்பர், டிசம்பர், பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் சுற்றுலா சென்றால் இனிமையாக இருக்கும்..

$udeep Bajpai

 ஷின்பா ரோடோடென்ட்ரான் பூங்கா

ஷின்பா ரோடோடென்ட்ரான் பூங்கா

யும்தாங் பள்ளத்தாக்கிற்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், கண்டிப்பாக ஷின்பா ரோடோடென்ட்ரான் மலர் பூங்காவை பார்த்து வரவேண்டும். இயற்கை அழகு கொண்ட இந்த மலர் பூங்கா, கடல் மட்டத்திலிருந்து வடக்கு சிக்கிமின் 3048 முதல் 4575 மீ உயரத்திற்கிடையே யும்தாங்க் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது. ரோடோடென்ரானில் பூத்துக் குலுங்கும் 49 வகையான மலர்களை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக பாப்பீஸ், சாக்ஸிஃப்ராக்ஸ், பொட்டன்சிலாஸ், அகானிட்ஸ், ப்ரைமுலஸ் மற்றும் ஜென்டியன்ஸ் போன்ற மலர்களை இந்த பூங்காவில் பார்க்கலாம்

Abhijit Kar Gupta

லாச்சென்

லாச்சென்


காங்டாக்கில் இருந்து லாச்சென் 129 கிமீ தொலைவில், குருடோங்மர் ஏரியையும், சோப்தா பள்ளத்தாக்கையும் நோக்கி அமைந்திருக்கின்றது. லாச்செனிலும் வட சிக்கிமை சார்ந்த மற்ற இடங்களிலும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சரியாக பின்பற்றுவதற்கென "சும்ஸா" என்றழைக்கப்படும் பழைய நிர்வாக அமைப்பு பின்பற்றப்படுகின்றது. இந்த சுய அரசாங்கதை தலைமை வகிக்கும் தலைவரின் பெயர் பிபான் ('Pipon'). அவர் பஞ்சாயத்திற்கு வரும் விவாதங்களை ஜனநாயக முறையில் தீர்த்து வைக்கின்றார். மேலும், ஒவ்வொரு வருடமும் லாச்செனில் "தாங்கு" என்றழைக்கப்படும் எருது பந்தயம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இங்கு சுமார் 1000 பேர் கொண்ட மிகக் குறைந்த அளவிலான மக்களே உள்ளனர். லாச்செனை பார்த்து மகிழ நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களின் இடையில் வரலாம். இந்த பருவத்தில் இங்கு வானிலை இனிமையாக இருக்கும்.

Veil Flanker

 குர்டொங்மார் ஏரி

குர்டொங்மார் ஏரி


லாச்சென் சென்றால் தவறாமல் இந்த ஏரியை காண வேண்டும். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 5,210 மீ உயரத்தில் அமைந்துள்ள உலகில் மிக உயர நீர் நிலைகளுள் ஒன்றாகும். வட சிக்கிம் மாகாணத்தில் அமைந்துள்ள இவ்விடம் தென் சீனா எல்லையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தென் கிழக்கு குன்சென்ஜுங்கா பகுதியை நோக்கி அமைந்திருக்கின்றது. குளிர் காலத்தில் இந்த ஏரி முழுவதும் உறைந்து காணப்படும். இந்த ஏரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடம் சோ லக்ஸ்மோ ஏரி. ராணுவத்திடமிருந்து முறையாக அனுமதி வாங்கி டிரெக்கிங் மூலம் குர்டொங்மர் ஏரியிலிருந்து சோ லக்ஸ்மோ ஏரி வரை செல்ல முடியும்.

StoriesofKabeera

 தாங்கு

தாங்கு


கடல் மட்டத்திலிருந்து 13,500 அடி உயரத்தில் அமைந்துள்ள அழகிய ஏரிதான் தாங்கு. இந்த ஏரியை லாச்செனிலிருந்து 2 மணி நேரத்தில் அடையலாம். குர்டோங்மர் ஏரி மற்றும் சோ லாமூ - தீஸ்தாவின் தலைமை ஏரி போன்ற பிரபல தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்குவில் இறங்காமல் போக முடியாது. அத்தகைய அழகு நிறைந்த இவ்விடம் சிறிது சிறிதாக பிரபலம் அடைந்து வருகின்றது.

Samanway Chatterjee

 காங்க்டாக்

காங்க்டாக்

இன்றைய காங்க்டாக் நகரமானது பல பெருமைக்குரிய அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு சிக்கிம் பகுதியின் தலைநகரமாகவும், முக்கியமான சுற்றுலா கேந்திரமாகவும் இது மாறியுள்ளது. குறிப்பாக பௌத்த மரபுகளை பாதுகாக்கும் கலாச்சார கேந்திரமாக இது திகழ்கிறது. பல பௌத்த மடாலயங்கள் மற்றும் ஆன்மீக கல்வி நிலையங்கள் இங்கு நிரம்பியுள்ளன. திபெத்திய கலாச்சாரத்தை போதிக்கும் மையங்களும் இங்கு காணப்படுகின்றன. சிக்கிம் மாநிலத்தில் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலும் எல்லா நகரங்களுமே சரியான வரலாற்று ஆதாரங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. காங்க்டாக் நகரத்திற்கும் அதிகம் வரலாற்றுக்குறிப்புகள் ஏதுமில்லை.

Supreo75

தீஸ்தா நதி

தீஸ்தா நதி


தீஸ்தா நதியின் பெரும் அலைகளில் கட்டுமரச் சவாரி செய்வது சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும். இங்கு தீஸ்தா பஜார் மற்றும் மெல்லி நகரம் ஆகிய பகுதிகளில் குழுவாக சேர்ந்து கட்டுமரச்சவாரி செய்ய முடியும். எனவே சீறிப்பாய்ந்து செல்லும் தீஸ்தா நதியின் குளிர்ச்சியான நீரில் பயணம் செய்வதை சாகசப்பிரியர்கள் தவறவிட்டுவிடக் கூடாது.

PP Yoonus

 நாது லா பாஸ்

நாது லா பாஸ்

நாது லா பாஸ் எனப்படும் இந்த கணவாய்ப்பாதை சிக்கிம் பகுதியையும் சீனாவின் திபெத் பிரதேசத்தையும் இணைக்கிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த கணவாய்ப்பாதை கடல் மட்டத்திலிருந்து 4310 மீட்டர் உயரத்தில் காங்க்டாக் நகருக்கு கிழக்கே 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் காங்க்டாக் பகுதியிலிருந்து விசேஷ அனுமதி பெற்று இந்தியக்குடிமக்கள் மட்டுமே இக்கணவாய் பகுதிக்கு வந்து பார்வையிடலாம். இங்கு ஒரு இந்திய போர் நினைவுச்சின்னமும் அமைந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் காடுகளுக்குள் ஓர் அற்புதப் பயணம் #காட்டுயிர்வாழ்க்கை 1

Ambuj.Saxena

Read more about: travel forest sikkim

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்