» »யாரும் அறியாத பொக்கிஷங்கள் இவை இந்தியாவின் மர்மத் தீவுகள்!

யாரும் அறியாத பொக்கிஷங்கள் இவை இந்தியாவின் மர்மத் தீவுகள்!

Posted By: Udhaya

இந்தியா ஒரு பல்லுயிரி நாடு. இங்கு பல வகையான இனங்கள் வாழ்ந்துவருகின்றன. உயிரினங்கள் எனும்போது மனிதர்களும் பல்வேறு இனங்களாக உள்ளனர். அதாவது பல வேறுபாடுகள் இருப்பினும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

வேற்றுமையில் ஒற்றுமைகாணும் இந்தியாவில் சில இடங்கள் யாருக்கும் தெரியாமலே இருந்துவருகின்றன. அவற்றில் இந்தியாவில் இருக்கும் தீவுகள் குறித்து பலருக்கு தெரிவதில்லை.

மறைந்திருக்கும் மர்மத் தீவுகள் எவையெல்லாம் தெரியுமா?

 புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்


புனித மேரி தீவானது தேங்காய் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நான்கு தீவுகள் அடங்கிய கூட்டமைப்பு காணப்படுகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே மால்பே அருகில் அரபிக்கடலில் அமைந்துள்ளது இந்த தீவுகள்.

ஆப்பிரிக்க கண்டத்தின் அரபிக்கடலில் அமைந்துள்ள பல்வேறு வகை இனங்கள் இந்த தீவுகளில் காணப்படுகிறது.

உடுப்பி அருகிலுள்ள மால்பே கடற்கரை இந்த தீவுகளுக்கு அருகிலுள்ள இடமாகும். உடுப்பியிலிருந்து மால்பே 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Man On Mission

 காவாயி தீவுகள்

காவாயி தீவுகள்


கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பையனூர் அருகே அமைந்துள்ளது இந்த காவாயி தீவுகள்.

சிறு பாலம் வழியாக பையனூருடன் இணைந்துள்ளது இந்த தீவுகள்.

Sherjeena

 திவார் தீவுகள்

திவார் தீவுகள்

திவார் தீவுகள் கோவாவின் மண்டவி கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளது. இது மிகவும் புகழ்மிக்க சுற்றுலாத் தளமாக விளங்கினாலும், திவார் தீவுகளுக்கு செல்லும் பயணிகள் அதிகம் இல்லை.

 ஸ்ரீரங்கப்பட்ணா

ஸ்ரீரங்கப்பட்ணா

காவிரி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்த தீவு கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.

மைசூரிலிருந்து எளிதில் செல்லும் வகையில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு டாக்ஸி, பேருந்து, ரயில் வசதிகள் உள்ளன.

Prof tpms

 ஜாவோ ஜாசின்டோ

ஜாவோ ஜாசின்டோ


கோவாவில் அமைந்துள்ள இந்த தீவுகள் டபோலிம் விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. போக்மலோவிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

 நம்பிக்கை தீவுகள்.

நம்பிக்கை தீவுகள்.

இந்த தீவுகள் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தீவிலிருந்து அருகிலுள்ள நகரம் காக்கிநாடா ஆகும்.

காக்கிநாடா துறைமுகத்திலிருந்து தெளிவான பார்வையில் இந்த தீவை ரசிக்கலாம்.

 பெட் துவாரகா

பெட் துவாரகா


குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தீவுகள் சுற்றுலாப் பயணிகளின் கண்களிலிருந்து மறைந்து காணப்படுகிறது.

பழமையான நகரமான துவாரகாவிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது இந்த நகரம்.

துவாரகா படுகையிலிருந்து பார்க்கும்போது கண்களுக்கு விருந்தளிக்கும் மிக அழகிய தீவுகள் காட்சியளிக்கும்.

T.sujatha

 கியூப்பிள் தீவுகள்

கியூப்பிள் தீவுகள்


அடையாறு ஆறு நான்கு தீவுகளை உருவாக்குகிறது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகான கடற்பகுதி தீவுகளைப் போன்றே காணப்படுகிறது.

சென்னையில் இருக்கும் பலரும் இந்த இடத்துக்கு போயிருப்பீர்கள். ஆனால் இது தீவுதானா என்பது உங்களுக்கு தெரிந்திருக்காது.

கிண்டி ரயில் நிலையத்திலிருந்து கியூ்ப்பிள் தீவுகள் அருகில் அமைந்துள்ளது.

Aravind Sivaraj

புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்

Man On Mission

புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்

Man On Mission

புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்


புனித மேரி தீவுகள்

Bailbeedu

புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்

புனித மேரி தீவுகள்


Bailbeedu

Read more about: travel island

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்