» »ஜியோலிகோட்டுக்கு ஜாலியா ஒரு பயணம் போலாமா?

ஜியோலிகோட்டுக்கு ஜாலியா ஒரு பயணம் போலாமா?

Written By: Udhaya

நைனிடால் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1219அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சுற்றுலாப் பயணிகளை மகிழச் செய்யும் ஜியோலிகோட். நைனி ஏரியின் நுழைவாயிலாக விளங்கும் ஜியோகோட் பட்டாம்புச்சி பிடிப்பதற்கும், பூந்தோட்டம் அமைப்பதற்கும் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சன்னியாசிகளான விவேகானந்தர், ஆரபிந்தோ ஆகியோர் தியானம் செய்ததாக சொல்லப்படும் குமெளனி மலை நகரம் 87ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு செல்வது என்பது சமீப காலமாக நைனிட்டால் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடையே வழக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. வாருங்கள் நாமும் சென்று வருவோம்.

காணவேண்டிய இடங்கள்

காணவேண்டிய இடங்கள்

அருகில் இருக்கும் நைனி ஏரி, முக்தேஸ்வர், கார்பெட் தேசியப் பூங்கா, ராம்கார்ஹ் மற்றும் பாங்காட் என்னும் சிறிய கிராமம் ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாதளங்கள் ஆகும். பேரிக்காய், ப்ளம், பீச் பழங்களின் தோட்டங்கள், பருவ மலர்கள் மற்றும் ஏராளமான வண்ண பட்டாம்பூச்சிகள் நிறைந்த புத்துணர்ச்சி ஊட்டும் பகுதியாக ஜியோலிகோட் விளங்குகிறது. ஜியோலிகோட்டின் சிறந்த விடுதிகளின் ஒன்றாக கருதப்படும் 'தி காட்டேஜ்'ஜில் இயற்கையின் மடியில் பழ மரங்கள், பருவ மலர்கள் சூழ பயணிகள் தங்கலாம்.

Unknown

 கோயில்களும் கல்லறைகளும்

கோயில்களும் கல்லறைகளும்

சாகசப் பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகவும் ஜியோலிகோட் விளங்குகிறது. ஜியோலிகாட்டின் அதிகமாக அறியப்படாத இயற்கை சூழலில் பயணிகள் நடைப்பயிற்சியிலும், தாழ்நிலை மலையேற்றத்திலும் ஈடுபடலாம். ஜியோலிகோட்டில் உள்ள பழங்கால கோவில்கள், கல்லறைகள், வார்விக் சாஹிப் இல்லம் மற்றும் பிற பழங்கால கட்டடங்களைக் காணாவிடில் பயணம் முழுமை பெறாது.
Unknown

 பழங்களும் தேனும்

பழங்களும் தேனும்

தேன் சேகரிப்பு அமைப்பில் தேன் சேகரிப்பு பற்றி பயணிகளுக்கு கற்றுத் தரப் படுகிறது. இங்கு கிடைக்கும் சுத்தமான தேன் மற்றும் பழங்களை வாங்க பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள். கிவி, ஒலிவ பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், பூக்கள் மற்றும் தேன் ஆகியவை இங்கு மிகச்சிறந்த விலையில் கிடைக்கிறது. மரச்செடிகளும், தொட்டிச்செடிகளும் கிடைக்கின்றன.
Unknown

 அடைவது எப்படி

அடைவது எப்படி

ஜியோலிகோட் நகரத்தை விமானம், ரயில் மற்றும் சாலைவழிகளில் சுலபமாக அடையலாம். பாட்னாநகர் விமானநிலையம் ஜியோலிகோட் அருகாமையில் இருக்கும் விமானநிலையமாகும். இங்கிருந்து டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்திற்கு விமானசேவைகள் உண்டு. ஜியோலிகோட்டில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது கத்கோடம் ரயில்நிலையம். அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து ஜியோலிகோட்டிற்கு ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
Unknown

 தி காட்டேஜ்

தி காட்டேஜ்

குமெளன் மலைநகரத்தை பின்ணணியில் கொண்டு எழில்மிகு தோற்றத்துடன் விளங்கும் தி காட்டேஜ் ஆரம்பத்தில் உடல்நல விடுதியாக இருந்தது. பின் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளால் 1947 வரை நடத்தப்பட்டது. விடுதி வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் பூச்செடிகளும், பழ மரங்ளும் விடுதியின் தோற்றத்திற்குய் அழகு சேர்க்கின்றன. பழங்கால கட்டிடக்கலையின் படி அமைக்கப்பட்டிருக்கும் விடுதியில் குமெளனி கலாச்சார செதுக்கல்களும், நவீன வசதிகளும் ஒருங்கே அமைக்கப்பட்டிருப்பது இவ்விடுதியை பெருமைமிக்கதாகவும், குடும்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற வசதிமிக்கதாகவும் வைத்திருக்கிறது.
Unknown

கொஞ்சம் செலவு மன நிறைவு

கொஞ்சம் செலவு மன நிறைவு


செலவழிப்போருக்கு வழக்கமாக ஏற்படும் குற்ற உணர்ச்சி ஏற்படாத வகையில் ஜியோலிகோட்டில் பல சத்தான நன்மை பயக்கும் பழங்களையும், கலப்படமற்ற தேனையும் பயணிகள் வாங்க முடிகிறது. தெருவோர சிறிய கடைகளில் கிவி, ஓலிவ், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மற்றும் காளான்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. பயணிகள் மரச்செடிகளையும், தொட்டிச்செடிகளையும் வாங்கலாம். அதுமட்டுமல்லாது அரசு தோட்டக்கலை துறை தோட்டக்கலை சார்ந்த உபகரணங்களை பயணிகளின் பயன்பாட்டிற்காக விற்கிறது
Unknown

 சாகசப் பிரியர்களே

சாகசப் பிரியர்களே

தாழ்நிலை மலையேற்றம் இங்கு மேற்கொள்ளப்படும் சாகச பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்றாகும். கடினமான மற்றும் சுலபமான பல தரப்பட்ட மலையேற்றப் பாதைகள் இங்கு அமைந்துள்ளன. சாகசப் பிரியர்களுக்கு விருந்தாக, பரவலாக அறியப்படாத அடர்ந்த காடுகள் சூழ்ந்த மலையேற்றப்பாதைகள் இங்கு இருப்பதுது தனிச்சிறப்பு.
Unknown

Read more about: travel, hills, forest