» »4000 அடி உயரத்தில் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த டிரெக்கிங் போகலாமா? #தேடிப்போலாமா 3

4000 அடி உயரத்தில் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த டிரெக்கிங் போகலாமா? #தேடிப்போலாமா 3

Posted By: Udhaya

கல்வராயன் அல்லது கல்ராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகும். பச்சை மலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலைகளுடன் காவிரி ஆற்று வடிகாலை பாலாற்றின் வடிகாலிலிருந்து பிரிக்கும் மலைத்தொடராக அமைந்துள்ளன. 1095 சகிமீ பரப்பளவுள்ள மலைகள் 2000 முதல் 3000 அடி உயரம் கொண்டவையாகும். இந்த மலைக்கு டிரெக்கிங் செல்வதென்பது மிக ஜாலியான ஒரு நிகழ்வாகும். வாருங்கள் செல்லலாம்.

கோவை, சென்னை, பெங்களூரு, திருச்சி ஆகிய நான்கு இடங்களிலிருந்தும் கல்ராயன் மலைக்கு எப்படி செல்லலாம், எங்கு தங்கலாம், விடுதிகள், உணவுகள், காலநிலைகள், புகைப்படங்கள் என முற்றிலும் இந்த கட்டுரையில் முடிந்தவரை தர முயல்கிறோம். வாருங்கள் பயணத்தை தொடங்கலாம்.

 பெங்களூர் - கல்ராயன் மலை

பெங்களூர் - கல்ராயன் மலை

பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக 5.30மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது கல்ராயன் மலைகள். இது 281கிமீ தூரமாகும்.

ஓசூர் - கிருஷ்ணகிரி - காவேரிப்பட்டிணம் - காரிமங்கலம் - குண்டலம்பட்டி - கடையம்பட்டி - ஓமலூர் - சேலம் - பேளூர் - தும்பல் வழியாக கல்ராயன் மலைத்தொடரை அடையலாம். கடினமாக இருக்கிறதா? அப்போ எளிமையான வழி ஒன்றை பரிந்துரைக்கிறோம்.

கல்ராயன் மலை எளிய வழி

கல்ராயன் மலை எளிய வழி

சுயவாகனத்தில் பயணித்தால் உங்களுக்கு எளிதானதொரு வழியை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. அதாவது, பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - மத்தூர் - ஊத்தங்கரை - கல்ராயன் மலைகள் என்ற வழித்தடத்தை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 1 மணி நேரத்தை மிச்சப்படுத்தலாம். அதுமட்டுமின்றி 80கிமீ தேவையின்றி சுற்ற அவசியமிருக்காது.

 சென்னை - கல்ராயன் மலை

சென்னை - கல்ராயன் மலை

சென்னையிலிருந்து கல்ராயன் மலைக்கு காஞ்சிபுரம் - வேலூர் வழியாகவும், திண்டிவனம் - விழுப்புரம் வழியாகவும் இரண்டு வழித்தடங்களில் அடையமுடியும்.

சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாக காஞ்சிபுரத்தை அடைந்து அங்கிருந்து வேலூர், வாணியம்பாடி வழியாக 321கிமீ தொலைவு பயணித்து கல்ராயன் மலையை அடையலாம். கிட்டத்தட்ட 7 மணி நேரங்கள் ஆகின்றன இந்த பயணத்துக்கு.

இதே திண்டிவனம் - விழுப்புரம் பாதையைத் தேர்ந்தெடுத்தால் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக கள்ளக்குறிச்சி வந்தடைந்து பின் கல்ராயன் மலையை மொத்தம் 303கிமீ பயணித்து அடையலாம். இந்த வழியில் சாதாரண போக்குவரத்து நாள்களில் எளிமையாக 6 மணி நேரத்தில் அடையமுடியும். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கினால்? அதற்குத்தான் இன்னொரு வழித்தடத்தையும் உங்களுக்கு தருகிறோம்.

சென்னை - கல்ராயன் எளிய வழி

சென்னை - கல்ராயன் எளிய வழி


சென்னையிலிருந்து ஆரம்பிக்கும் நம் பயணத்தில் செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செஞ்சி, திருவண்ணாமலை சென்று, கல்ராயன் மலையை அடையலாம்.

இது மற்ற இரு வழித்தடத்தைக் காட்டிலும் சுலபமானதாக அறியப்படுகிறது. சில இடங்களில் மட்டும் சாலைகளில் செல்வது சற்று சிரமமாக இருக்கும். எனினும் இதன்மூலம் நாம் 40 கிமீ வரை மிச்சப்படுத்தமுடியும். ஒருவேளை டோல் கேட் குறித்து அலட்டிக்காமல், டிராபிக் குறித்து அச்சப்படாமல் நல்லசாலையில் பயணிக்க விளைந்தால் இரண்டாவது வழியே சிறந்தது.

கோயம்புத்தூர் - கல்ராயன் மலை

கோயம்புத்தூர் - கல்ராயன் மலை


கோயம்புத்தூரிலிருந்து 239கிமீ தொலைவில் அமைந்துள்ள கல்ராயன் மலைகளுக்கு 4.30மணி நேரத்தில் சென்றடையலாம். தேசிய நெடுஞ்சாலை எணன் 544 வழியாக சேலத்தை அடைந்து அங்கிருந்து நெடுஞ்சாலை 79 வழியாக கல்ராயன் மலைகளை அடையலாம்.

 கன்னியாகுமரி - திருச்சி - கல்ராயன் மலைகள்

கன்னியாகுமரி - திருச்சி - கல்ராயன் மலைகள்


கன்னியாகுமரியிலிருந்து தங்கநாற்கர சாலைவழியாக திருச்சியை அடைந்து, அங்கிருந்து 181கிமீ தூரத்தில் அமைந்துள்ள கல்ராயன் மலைகளை பெரம்பலூர், பெத்தநாயக்கன்பாளையம் வழியாக 3.30மணி நேரத்தில் அடையலாம்.

கல்ராயன் மலைத்தொடர்கள்

கல்ராயன் மலைத்தொடர்கள்


கல்ராயன் மலைகள் அல்லது குன்றுகள் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் மிகப்பரந்த தொடர் ஆகும். இது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவை பச்சமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை ஆகியவற்றுடன் தமிழகத்தின் நடுமத்தியில் அமைந்துள்ளது. 2000 முதல் நான்காயிரம் அடி உயரம் கொண்டது.

Manoj M Shenoy

மலைப்பிரிவுகள்

மலைப்பிரிவுகள்

சேலம், விழுப்புரம் மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ள இந்த மலை, இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை சின்னக்கல்ராயன், பெரியகல்ராயன் ஆகும்.

PJeganathan

உயரம்

உயரம்


சின்னக்கல்ராயன் 2700அடி உயரமும், பெரிய கல்ராயன் 4000அடி உயரமும் கொண்டதாகும். மிகவும் அழகாக, பச்சை பசேலென்று காணப்படும் இந்த மலையில் சுற்றுலா என்பது பயணிகளுக்கு மிகப் பிடித்தமான ஒன்றாகும். இந்த மலையைத்தான் அவர்கள் தென்னிந்தியாவின் சிறந்த டிரெக்கிங்க் என்று பாராட்டுகின்றனர்.

காட்டுக்குள் செல்வோம்

காட்டுக்குள் செல்வோம்

இந்த காடுகள் 400மீ உயரத்துக்கு மேல் குறுங்காடாகவும், 800மீ உயரத்துக்கு மேல் இலையுதிர் காடுகளாகவும், அதற்கும் மேல் சோலை எனும் பச்சை பசேல் காடுகளும் இருக்கின்றன. என்னதான் சுற்றுலாப்பயணிகள், கலாச்சாரம், திருவிழாக்கள், மனித இடையூறுகள் இருந்தாலும் காடு நன்றாக சிறந்து வளர்கிறது.

PJeganathan

கருமாந்துறை

கருமாந்துறை

கல்ராயன் மலைகளில் அமைந்துள்ள பஞ்சாயத்து பெருங்கிராமம் கருமாந்துறை ஆகும். படத்தில் காட்டப்பட்டுள்ள மாதிரி பச்சை பசேலென்று இருக்கும் கிராமத்தை விட்டு வெளியில் செல்ல உங்களுக்கு மனம் வராது.

நீர் சுற்றுலா

நீர் சுற்றுலா

கோமுகி அணை, மேகம் நீர்வீழ்ச்சி, பெரியார் நீர்வீழ்ச்சி போன்றவை மிகச்சிறந்த சுற்றுலா பகுதிகள் ஆகும். சாகச விரும்பிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் விரும்பிடும் வகையில் இந்த இடங்கள் அமைந்துள்ளன.

Arunask001

 தாவரவியல் பூங்கா

தாவரவியல் பூங்கா

இந்த மலையில் தாவரவியல் பூங்காவும் அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள் அப்படியே அழகில் உறைந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு சூழ்நிலை உங்களை ஆட்கொண்டுவிடும்.

PJeganathan

மர்மங்கள் தொடரும் மலை

மர்மங்கள் தொடரும் மலை


இந்த மலைத்தொடரின் பல இடங்கள் யாரும் சென்றிராத இடமாகவே உள்ளது. காட்டுவாசி மக்களைத் தவிர, வேறு யாரும் அங்கு சென்றதில்லை என்று கூறப்படுகிறது.

பாப்பனைக்கன் பட்டி அணை

பாப்பனைக்கன் பட்டி அணை

இந்த பகுதியில் கட்டாயம் பார்க்கவேண்டிய மற்றொரு இடம் பாப்பனைக்கப்பட்டி அணையாகும். 52 அடி உயர அணை இது. இங்கிருந்து 35கிமீ தொலைவில் மெச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இலையுதிர் காலத்தில் செல்ல மிகச் சிறந்த இடமாகும். கோடைக்காலத்தில் இந்த அணை வறண்டுவிடும்.

PJeganathan

 பெரியார் நீர்வீழ்ச்சி

பெரியார் நீர்வீழ்ச்சி

விழுப்பும் மாவட்டத்தில் கல்ராயன் மலை அருகே அமைந்துள்ளது இந்த பெரியார் நீர்வீழ்ச்சி. டிசம்பர் மாதம் செல்ல மிகச்சிறந்த இடம் இதுவாகும். அருகிலுள்ள வெள்ளிமலை கிராமம் வழியாக இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கிக்கொட்டியது போல இருக்குமாம். அதனால்தான் இந்த ஊருக்கு வெள்ளிமலை என்ற பெயர் வந்துள்ளது.

உள்ளூர் மக்கள் குளித்து குதூகலிக்க இந்த பெரியார் நீர்வீழ்ச்சி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பைக் ரைடிங், லாங்க் டிரைவிங் சாகச பிரியர்கள் என பலர் இங்கு வருகின்றனர். இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக அதிலும் குறிப்பாக டிசம்பர் மாதங்களில் நல்ல பெயர் பெற்ற இடமாகும்.

இங்கிருந்து 15கிமீ தொலைவில் கோமுகி அணை அமைந்துள்ளது.

PJeganathan

மேகம் நீர்வீழ்ச்சி

மேகம் நீர்வீழ்ச்சி

கள்ளக்குறிச்சி காச்சிராயபாளையத்திலிருந்து வெறும் 5கிமீ தொலைவில் அமைந்துள்ளது மேகம் நீர்வீழ்ச்சி. 500 அடி உயரத்திலிருந்து கொட்டும் நீர், அந்த பகுதி முழுவதும் சலசலப்பு சத்தத்தை எழுப்பும். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஒரு கிமீக்கு முன்பாகவே சல்லென்று கேட்கும் அருவி சத்தமும், ஜில்லென்று வீசும் பூங்காற்றும் ஒரு கவிதையையே எழுதிவிடும். இதுவும் டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய இடமாகும்.

மணிமுத்தாநதி அணை

மணிமுத்தாநதி அணை

கள்ளக்குறிச்சி அருகே கொட்டாலம் கிராமத்தில் அமைந்துள்ளது மணிமுத்தா அணை. இது 1970ம் ஆண்டிலேயே கட்டப்பட்டஅணையாகும். கள்ளக்குறிச்சியிலிருந்து இந்த அணை 10கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 20 அடி உயர அணை இதுவாகும். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இந்த அணை நீர் செல்கிறது.

கோமுகி அணை

கோமுகி அணை

காச்சிராபாளையம் நகரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. கள்ளக்குறிச்சியிலிருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அணை. சுற்றிலும் பசுமையான சூழல் நிறைந்த இடமாகும்.

PJeganathan

 மற்ற சுற்றுலா தளங்கள்

மற்ற சுற்றுலா தளங்கள்


இங்கு பொழுதுபோக்கு சுற்றுலா மட்டுமின்றி ஆன்மீக தலங்களும் உள்ளன. கிபி 1540ல் கட்டப்பட்ட வெங்கட்ரமனா கோயில் செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள பல கல்வெட்டுக்கள் தமிழில் காணமுடிகிறது. மிகப்பெரிய போர் வரலாறுகள் இங்கு மறைந்திருக்கின்றன.

நாகம்மன் கோயில் நாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடமாகும். இதுவும் 1500 வருட பழமையானதாகும்.

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர்

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர்

ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்