» »கோயில் நகரமாம் கும்பகோணத்தில் எத்தனை கோயில்கள் இருக்கிறது தெரியுமா?

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் எத்தனை கோயில்கள் இருக்கிறது தெரியுமா?

Posted By: Udhaya

இரண்டு ஆறுகளுக்கிடையே அமைந்துள்ள வளமான கோயில் நகரம் கும்பகோணம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன. இது கோயில் நகரம் என்று சிறப்பிக்கப்படுவதற்கு இங்குள்ள கோயில்களே காரணம்.

சரி இந்த இடத்தில் உள்ள கோயில்களைப் பற்றி பார்க்கலாமா

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் எத்தனை கோயில்கள் இருக்கிறது தெரியுமா?

Karthikeyan Raghuraman

கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

இக்கோவிலில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நாயக்கர்களால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கும்பகோணம் நகரத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குவது இக்கோவிலே.

இதன் ராஜகோபுரம் 125 அடி உயரத்தில், 9 நிலைகளைக் கொண்டதாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 வட்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

பாகவதப் படித்துறைக்கட்டம்

காவிரி நதிக்கரையில், கும்பகோணத்தில் அமைந்துள்ள புனித நீராடும் இடம் பாகவதப் படித்துறைக்கட்டம் ஆகும். மகாமகத் திருவிழாவின் போது காவிரியின் புனித நீரில் நீராடுவதற்காக ஏராளமான யாத்திரீகர்களும் பக்தர்களும் இங்கு வரும் பொழுது கும்பகோணமே மக்கள் கூட்டத்தால் அலைமோதும்.

காவிரி நதியானது மிகவும் புனித நதியாகக் கருதப்படுகிறது. இந்நதியின் நீர் ஏராளமான இந்து சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

சோமேஸ்வரர் ஆலயம்

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் எத்தனை கோயில்கள் இருக்கிறது தெரியுமா?

wiki

சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் சிவபெருமான் சோமேஸ்வரர் என்னும் வடிவிலும், சொக்கேஸ்வரர் என்னும் பெயரில் வழிபடப்படுகிறார்.

உண்மையில் இக்கோவில் கட்டப்பட்டது சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது இக்கோவில். பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ கம்பஹரேஸ்வரரைத் தரிசிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

இக்கிராமத்தில் வேறு பல கோவில்கள் இருந்தாலும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்தான் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 13ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன்.

பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயம்

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் எத்தனை கோயில்கள் இருக்கிறது தெரியுமா?

VasuVR

பட்டீசுவரம் துர்கையம்மன் ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் வீற்றிருப்பவர், இந்து தெய்வமான துர்கையம்மன் ஆவார்.

இக்கோவில் அளவில் மிகப்பெரியதாகும். கோவில் நிர்வாகத்தினரால் மிகவும் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. இக்கோவிலில் மிகப்பிரம்மாண்டமான கோபுரங்கள் ஐந்து உள்ளன. கடந்த நூற்றாண்டில், இக்கோவிலில் பல புனர்நிர்மானப் பணிகள் நடைபெற்றன.

Read more about: travel, temple