» »மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை !! உண்மையா?

மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை !! உண்மையா?

Written By: Udhaya

இமயமலையில் அமைந்திருக்கும் இந்த கைலாயத்தின் ரகசியங்களை அறிய முற்பட்டவர்கள் இறந்து போகிறதாகவும், தெய்வபக்தியுடன் போய்ட்டு வர்றவங்க நல்ல நிலையை அடையிறதாகவும் ஒரு பேச்சு இருக்கு. பிரம்மனோட இருப்பிடம் சத்யலோகம், விஷ்ணுவோட இருப்பிடம் வைகுண்டம், சிவனோட இருப்பிடம் கைலாயம்னு புராணக்கதைகளிலும், ஆன்மீக கதைகளிலும் கூற கேட்டிருப்போம். சத்யலோகமும், வைகுண்டமும் மனித கண்களுக்கு தெரியாது எனவும், நம் கண்களுக்குப் புலப்படும் ஒரே தேவலோகம் கைலாயம் எனவும் சொல்றாங்க. அந்த கைலாயத்தில் இருக்கும் மர்மங்கள் என்ன அங்கு எப்படி செல்லலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

 இமயமலை

இமயமலை

இந்தியாவின் வடக்கு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவுக்கும் திபெத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. அதாவது இதன் இருப்பிடம் திபெத் நாட்டினால் எல்லை கொள்ளப்படுகிறது.

Ondřej Žváček

நதிகள்

நதிகள்

சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா போன்ற புகழ்பெற்ற ஆறுகள் இந்த மலையில் உற்பத்தியாகிறது. இது மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக இருக்கும் அதே வேளையில் இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது

Jean-Marie Hullot

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


இந்த கைலாய மலை 6638 மீ உயரம் கொண்டதாகும். கெலாசா எனும் சமக்கிருத வார்த்தையிலிருந்து உருவான கைலாசம் எனும் பெயருக்கு படிககற்கள் என்று பொருள். பார்ப்பதற்கு அழகிய படிகக்கற்கள் போலவே சூரிய ஒளியில் ஜொலிக்கிறது.

wikimedia.org

மத நம்பிக்கைகள்

மத நம்பிக்கைகள்

இந்த கைலாய மலை ஒவ்வொரு மதத்தின்படியும் ஒவ்வொரு நம்பிக்கை கொண்டதாக இருக்கிறது. இந்து மதத்தின் படி, இந்த கைலாய மலையில் சிவன் வாழ்வதாகவும், அவ்வப்போது தன் மனைவி பார்வதியுடன் தியானம் செய்வார் எனவும் அந்த நேரம் மயான அமைதி நிலவும் எனவும் அங்கு சென்று வந்தபக்தர்கள் கூறுகின்றனர்.

wikimedia.org

சமண மதப்படி

சமண மதப்படி

கைலாய மலை, மேரு மலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்குதான் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷிபானந்தா மோட்சம் அடைந்ததாக நம்புகின்றனர் சமணர்கள்.


wikimedia.org

புத்தர்களின் நம்பிக்கை

புத்தர்களின் நம்பிக்கை

கிபி 7ம் நூற்றாண்டுகளில் புத்தமதம் நன்கு பரவியிருந்தபோது, திபெத்தில் இந்த கைலாயத்தில் தான் புத்த சக்ரசம்வாரா இருந்தார் என்று நம்பப்படுகிறது.

மேலும் உள்ளூர் மதமான போன் என்பவர்கள் அவர்களது கடவுள் வாழ்ந்த இடமாக கைலயாத்தைக் கருதுகின்றனர்.

wikimedia.org

மானசரோவர் ஏரி

மானசரோவர் ஏரி

உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஒரே நன்னீர் ஏரி என்ற புகழ்பெற்றது மானசரோவர் ஏரி ஆகும். இதை பிரம்மதேவர் உருவாக்கியதாக ஆன்மீகவாதிகளால் நம்பப்படுகிறது.

wikimedia.org

சிவபெருமான் குளிக்கும் ஏரி

சிவபெருமான் குளிக்கும் ஏரி

பாலையும் நீரையும் தனித்தனியாக பிரித்துவைக்கும் அன்னப்பறவைகள் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது. மேலும், முனிவர்களும், தேவர்களும், சிவபெருமானோட சேர்ந்து பிரம்மமுகூர்த்தத்தில் இந்த ஏரியில் வந்து நீராடுவதாக நம்பிக்கை உள்ளது.

wikimedia.org

மானசரோவர் டூ கைலாயம்

மானசரோவர் டூ கைலாயம்


மானசரோவர் ஏரியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் கைலாயம் உள்ளது. இந்த ஏரியில் குளித்து விட்டு செல்வதால் பக்தர்கள் முக்தி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
wikimedia.org

பிரதிபலிக்கும் மலையில் அற்புத காட்சி

பிரதிபலிக்கும் மலையில் அற்புத காட்சி

52கிமீ சுற்றளவு கொண்ட இந்த மலையை சுற்றி வரும்போது, இரண்டு இடங்களில் இந்த மலையின் அற்புத காட்சியை நாம் காண முடியும். அதுவும் சூரிய ஒளியில் பிரதிபலிக்கும் இந்த மலையோட காட்சி சுகு, ஜெய்தி எனும் இரண்டு இடங்களில்தான் நன்றாக தெரிகிறது.

wikimedia.org

 அரிதிலும் அரிதான காட்சி

அரிதிலும் அரிதான காட்சி

கைலாயத்துக்கு செல்பவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற காட்சி தென்படுவதில்லை. இதனை அரிதிலும் அரிய காட்சி என்றும் கௌரிசங்கர் காட்சி எனவும் குறிப்பிடுகின்றனர்.

wikimedia.org

மர்மங்கள்

மர்மங்கள்

இந்த மலையில் நிறைய மர்மங்கள் ஒளிந்துள்ளனவாம். அதிலும், சிவன் ருத்ரதாண்டவமாடும் போடு பனிமலை சறுக்கல்கள் வருவதாகவும், சிவன் பார்வதி தேவியுடன் மானசரோவரில் தோன்றும் காட்சி கண்களுக்கு தெரிவதாகவும் பலர் கூறியுள்ளனர். ஆனால் உண்மை கண்டறிகிறேன் என்று செல்பவர்கள் இறந்துவிடுகின்றனர் என்றும் பரவலாக பேச்சு உள்ளது.
wikimedia.org

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

மானசரோவருக்கு பக்கத்திலேயே ராட்சத தளம்னு ஒரு ஏரி இருக்கு. இது உப்புத்தன்மை கொண்டாக உள்ளது. இதற்கு பின்னும் ஒரு கதை உள்ளது. அதாவது, இந்த ஏரியில் ராவணன் தவம் செய்ததாகவும், அதனால் உப்பாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

wikimedia.org

புலப்படாத அதிசயங்கள்

புலப்படாத அதிசயங்கள்

8000 மீ உயரத்துக்கும் அதிகமான இடங்களில் கூட, ஏறி சாதனை செய்திருக்காங்க. ஆனா வெறும் 6000 மீ கொண்ட இந்த மலையில் ஏன் யாரும் ஏறவில்லை இது மிகவும் சக்திவாய்ந்த மலை அதிலும் சிவபெருமானின் ரகசியங்களை யாரும் அறிந்துவிடக்கூடாது என்றும் சில ஆன்மீக அறிவர்கள் கூறுகிறார்கள்.

wikimedia.org

சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

டெல்லி - ஹால்டுவானி - தார்ச்சலா - லிபு லேக் - புராங் வழியாக உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோகர்க்கை அடையவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை நாள்களில் கைலாயத்துக்கு செல்ல இந்திய அரசே கைலாயத்துக்கு செல்ல ஏற்பாடு செய்துதருகிறது. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

wikimedia.org