» »ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?

ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?

Written By: Udhaya

பீஹாரில் அமைந்துள்ள முங்கர் நகரம், பீஹார் மாநிலத்தின் மிகவும் வசீகரமான நகரங்களுள் ஒன்றாகும். முங்கர் சுற்றுலா, ஒரு உல்லாசப் பயணிக்கு அளிக்கக்கூடிய சுற்றுலா ஈர்ப்புகள் அவரது உடல் மற்றும் ஆன்மாவை நெகிழச்செய்யும் அதி அற்புதங்களாகும்.

முங்கர் சுற்றுலாவின் பிரதான காட்சியகங்கள் முங்கர் கோட்டை, பீஹாரின் யோகா பாடசாலை, சீதா கந்த், கராக்பூர் ஏரி, பீர் ஷா நஃபா வழிபாட்டு மையம், பீம்பந்த் வனவிலங்குகள் சரணாலயம், ஸ்ரீ கிருஷ்ண வாடிகா, ஷா முஸ்தஃபா சூஃபியின் கல்லறை மற்றும் தில்வார்பூர் ஆகியவை ஆகும்.

ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?

அதீத வரலாற்று வளங்கள் மற்றும் ஆன்மீகத் திருத்தலங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள முங்கர், கண்டு களித்து அனுபவிக்க வேண்டிய ஒரு அற்புதமான ஸ்தலமாகும்.
ஒரு சிறு குன்றின் மேல் கட்டப்பட்டு, இடைநிலை காலத்திலிருந்தே மிகப் பிரம்மாண்ட கட்டுமானத்துடன் தோற்றமளிக்கும் முங்கர் கோட்டை போன்ற சிறப்பம்சங்களை கொண்டு விளங்கும் முங்கர் சுற்றுலா, ஆர்வமிக்க பல சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?

உலகெங்கிலும் யோகாக் கலைக்கு மிகப் பிரபலமாக விளங்கும் பீஹாரின் யோகா பாடசாலை, பெருந்திரளான மக்களை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.
யோகாக் கலையின் மூலம் ஒரு மனிதனின் ஆளுமையை மேம்படுத்துவதே இந்த பாடசாலையின் முக்கிய இலக்காகும். சீதா கந்த், கராக்பூர் ஏரி, பீர் ஷா நஃபா வழிபாட்டு மையம் மற்றும் ராமேஷ்வர் கந்த் போன்றவை இங்கு உள்ள ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களாகும்.

ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?

முங்கர், இரும்பு மற்றும் இரும்பினால் செய்யப்படும் பொருள்களில் காணப்படும் சிறப்பான வேலைத்திறன் போன்றவற்றுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். சத் பூஜா, துர்கா பூஜா, ரக்க்ஷா பந்தன் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் முங்கர் சுற்றுலாவை அலங்கரிக்கக்கூடிய சில திருவிழாக்கள் ஆகும்.

ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?

முங்கர் செல்ல ஏதுவான காலகட்டம்

முங்கர், கோடைகாலங்களின் போது வெப்பமான வறண்ட வானிலையுடனும், குளிர்காலங்களின் போது உறைய வைக்கும் குளிருடனும் காணப்படும். இங்கு மழைக்காலங்கள் ஓரளவு சாதகமான வானிலையுடன் காணப்படும், அதனால் இங்கு பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற காலம் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டமே ஆகும்.

ஆனந்தம் அள்ளித்தரும் பயணம் முங்கருக்கு செல்வோமா?

முங்கரை அடைவது எப்படி?

இந்நகரம் சாலைகள், இரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

Read more about: travel