Search
  • Follow NativePlanet
Share
» »மகளை மணமுடித்த பகவான் விஷ்ணு!!.. பேரருள் பெற்ற முனிவர்!! எங்கே தெரியுமா?

மகளை மணமுடித்த பகவான் விஷ்ணு!!.. பேரருள் பெற்ற முனிவர்!! எங்கே தெரியுமா?

பகவான் விஷ்ணு மணமுடித்த முனிவரின் மகள் எந்த ஊரைச் சேர்ந்தவர் தெரியுமா?

புராணங்கள் பல கதைகளை கூறுகிறது. இதை வெறும் கதைகளாக பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆன்மீக வழிபாட்டில் கடவுளை நேசிப்பவர்கள் அவர்களையே நினைத்து நினைத்து உருகி, கடவுளையே மணந்தவர்களும் இருக்கிறார்கள்.

வள்ளி முருகப்பெருமானையும் இப்படித்தான் மணந்தார் என்கிறது புராணம். இதைப் போலவே, மகாவிஷ்ணு ஒரு மானிடரான முனிவரின் மகளை மணமுடித்தது இந்த இடத்தில்தான் தெரியுமா?

திருநரையூர் சித்தீஸ்வரம்:

திருநரையூர் சித்தீஸ்வரம்:


மக்களுக்கு நன்மை செய்வதற்காக தெய்வங்கள் மனித உருவில் அவதரித்தனர். மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே அன்னை மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநரையூர் சித்தீஸ்வரம்.

 எங்குள்ளது

எங்குள்ளது

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம்.

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாமம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு.

பழமையான லிங்கம்

பழமையான லிங்கம்

இந்த ஊரில் அமைந்துள்ள கோயிலில் இருக்கும் லிங்கம் மிகவும் பழமையானதாகும்.

மகரிஷி

மகரிஷி

மேதாவி மகரிஷி எனும் முனிவர் சிவனை நோக்கி தவமிருந்தார். தனக்கு பிறக்கும் மகள் விஷ்ணுவை திருமணம் செய்யவேண்டுமென வேண்டினார்.

சிவன் கட்டளை

சிவன் கட்டளை

சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார்.

மகளை மணமுடித்த விஷ்ணு

மகளை மணமுடித்த விஷ்ணு

சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர். அந்த பெண் மகாலட்சுமியின் அவதாரம் என்றும் கூறப்படுகிறது. மகாலட்சுமியே மனிதராக பிறந்ததாகவும் கதைகள் கூறுகின்றன.

பிறந்த வீடு புகுந்த வீடு

பிறந்த வீடு புகுந்த வீடு


மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.

குபேரன் வழிபட்ட தலம்

குபேரன் வழிபட்ட தலம்


இந்த தளம் குபேரன் வழிபட்ட தலமாகும். மேலும் இங்கு வந்து வழிபட்டால் செல்வம் புகழ் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை.

அரசியல் நுழைவு

அரசியல் நுழைவு

அதிரடியாக அரசியலில் நுழைபவர்கள் ரகசியமாக இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தின் மிக முக்கிய கட்சிகளின் பிரதான உறுப்பினர்கள் பலர் இந்த கோயிலுக்கு வந்து செல்வதாகவும், அரசியலில் ஜொலிக்க வேண்டுமென்றால் இங்கு வந்து சென்றால் நல்ல பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறினால் 10 நிமிடத்தில் திருநரையூரை அடையலாம்.

Read more about: travel temple kumbakonam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X