» »கேரளாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்படி ஒரு சிறிய இடம்

கேரளாவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்படி ஒரு சிறிய இடம்

Written By: Udhaya

கேரள மாநிலத்தில் எக்கச்சக்க இடங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த சிறிய இடத்துக்குதான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனராம். இது என்ன புதுகதையாக இருக்கிறது என்று ஆச்சர்யப்படவேண்டாம். அத்தனை சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒருமுறை சென்று பாருங்கள் திரும்ப திரும்ப சென்றுகொண்டே இருப்பீர்கள் என்கிறார்கள் இங்கு அடிக்கடி வருகை தரும் பயணிகள். வாருங்கள் நாமும் பயணிக்கலாம்.

 எங்குள்ளது

எங்குள்ளது

கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகும்.

Praveenp

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


இந்த வேளாண்மை நகரம் திரிவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பீர் முஹம்மத் எனும் சூஃபி ஞானியின் பெயரிலிருந்து பீர்மேடு என்ற பெயரை பெற்றது.

Visakh wiki

திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தளம்

திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தளம்

பீர்மேடு நகரம் கடல் மட்டத்திலிருந்து 915 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஒரு காலத்தில் திரிவிதாங்கூர் ராஜ வம்சத்தின் கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்ததுள்ளது.
Soman

கோடை கால வசிப்பிடம்

கோடை கால வசிப்பிடம்

அதோடு இந்த நகரத்தில் உள்ள ராஜ வம்சத்தினரின் கோடை கால வசிப்பிடம் தற்போது அரசு விருந்தினர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. பீர்மேடு நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்க்கலாம்.
Praveenp

பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகள்

பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகள்

இவைதவிர நீங்கள் இங்கு வரும் போது பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கும் சென்று வரலாம். பீர்மேடு மலைவாசஸ்தலம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. பீர்மேடு நகரம் ஆண்டு முழுவதும் இதமான வானிலையையே கொண்டிருக்கும். இதன் மழைக் காலங்களில் கடும் மழைப் பொழிவு இருக்கும்.
Praveenp

Read more about: travel trekking

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்