» »தமிழர்கள் கட்டாயம் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டிய அருவிகள் - பகுதி 1

தமிழர்கள் கட்டாயம் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டிய அருவிகள் - பகுதி 1

Posted By: Udhaya

தமிழகம் பல்வேறு முக்கிய சிக்கல்களை சந்தித்துவருகிறது. அன்றாடம் முக்கியச் செய்திகள் பரபரப்புச் செய்திகள் என கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களாகவே தமிழகம் பரபரத்துக் காணப்படுகிறது. அப்படி தமிழகத்தின் பிரச்னைகளில் தலையாய சிக்கல் என்னவென்றால் அது நீர்.

விவசாய சிக்கல்கள் நாடுமுழுவதும் இருந்தாலும், தமிழகம் மட்டும் ஏனோ இந்தியாவில் அரசை எதிர்க்கும் முக்கிய மாநிலமாக இருக்கிறது. நம்மை உதாரணமாகப் பார்த்து பிற மாநிலத்தவர்கள் துணிந்து கேள்விகேட்பதைக் கூட பார்க்கமுடிகிறது.

தமிழகத்தில் நீர் இல்லையா? மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் ஆறுகள், குளங்கள், அணைகள் இல்லையா? இருக்கிறதுதான். அதை யார் தூர்வாறுகிறார்கள் என்கிறீர்களா?

உண்மைதான்... தமிழகம் பல ஆறுகள், ஏரிகளைக் கொண்டுள்ளது. நீர்வீழ்ச்சிகள் எனப்படும் அருவிகள் நிறைந்த தமிழகத்தின் மிக முக்கிய நீர்வீழ்ச்சிகளைப் பற்றி தொடர்ச்சியாக இத்தொடரில் காணலாம்.

நீங்கள் சுற்றுலா செல்ல மிக மிக ஏற்ற அருவிகள் பட்டியலில் முதலில் நாம் பார்க்க இருப்பது அகத்தியர் அருவி. போலாமா ?

அகத்தியர் அருவி

அகத்தியர் அருவி

அகத்தியர் அருவி என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அருவி ஆகும். இது மாவட்டத்தலைநகர் திருநெல்வேலியிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

PC: Wikipedia

சுற்றுலா

சுற்றுலா

அகத்தியர் அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.


PC: Muthuraman99

வற்றாத ஜீவ நதி

வற்றாத ஜீவ நதி

அகத்தியர் அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத ஜீவநதி என்னும் பெயரை பெறுகிறது. இதிலிருந்து உருவாவதுதான் தாமிரபரணி நதி. இந்த அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

PC: Sukumaran sundar -

வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழை

அகத்தியர் அருவி, பாபநாசம் நகருக்குத் தெற்கிலும் கீழ் பாபநாசத்துக்கு வடக்கிலுமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் போது இவ்வருவிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. இருப்பினும் அதிகபட்ச அளவிலான நீர்வரத்து அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கிறது. அருவிக்கு அருகில் அகத்தியருக்கு சிறு கோயிலொன்று உள்ளது

PC: Muthuraman99

நீர்மின் உற்பத்தி

நீர்மின் உற்பத்தி

இவ்வருவி திருநெல்வேலியிலிருந்து 42 கிமீ தொலைவிலுள்ளது. இந்த அருவியில் விழும் நீரானது பாபநாசம் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அடைந்து பின் அங்கிருந்து 142.15 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்புப் பகுதியைச் சென்றடைகிறது.

பாபநாசர் கோயில்

பாபநாசர் கோயில்


திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தளங்களுள் ஒன்று இதுவாகும்.

Pc:Bastintonyroy

சீசன்

சீசன்


திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தினரால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்கு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சபரிமலைக்குச் சென்றுவருபவர்களும் இவ்வருவிக்கும் குற்றால அருவிகளுக்கும் செல்கின்றனர்.

வடகிழக்குப் பருவமழையின்போது அருவியில் நீர்வீழ்ச்சியின் அளவும் வேகமும் அதிகமாக இருக்கும்போது பாதுகாப்பு காரணமாக மக்கள் இங்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.
PC: Bastintonyroy

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகிலுள்ளதால் அருவியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

PC:Zwoenitzer

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சாலை மூலமாக பல்வேறு இடத்திற்கான தூரம்:

மதுரை: 160 கி.மீ.
திருநெல்வேலி: 59 கி.மீ
தென்காசி: 5 கி.மீ
செங்கோட்டை: 5 கி.மீ
மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ

Read more about: travel falls