» »சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!

சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!

Posted By: Udhaya

நீண்ட நாட்களாக சனி பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனீஸ்வரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி விருச்சிக ராசியிலிருந்து தனது சஞ்சாரத்தை தனுசு ராசியை நோக்கி செலுத்துகிறார். அதனையொட்டி சனீஸ்வர பகவானுக்கு அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் சனி பரிகார ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு செய்வது நல்லது.

இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும் எனவும், அரசு வேலையும் கைகூடும் மற்றும் பிற வசதிகளும் வீடு தேடி வரும் என்கிறார்கள் ஜோதிடர்கள். யார்யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள் உண்டாகும், அவர்கள் எந்த கோயிலுக்கு சென்றால் முழு ஆதாயமும் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

 வேலையிழக்கும் ஐடி தொழிலாளர்கள்

வேலையிழக்கும் ஐடி தொழிலாளர்கள்

இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பழந்தமிழரின் குலதெய்வம் மூதேவி? மறைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

வேலையிழப்பிற்கான ஜோதிட ரீதியான காரணங்கள்:

வேலையிழப்பிற்கான ஜோதிட ரீதியான காரணங்கள்:

சிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ! உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ! அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனீஸ்வர பகவான் ஆவார். எனவேதான் அவரை 'கர்மகாரகன்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காலபுருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிகத்தில் நிலைகொண்டிருந்த சனைஸ்வரபகவான் செவ்வாயின் வீட்டில் இருந்ததோடல்லாமல் செவ்வாயோடு அதிக காலம் சேர்க்கை பெற்று நின்ற காலத்தில் நீரினாலும் காற்றாலும் பலவித பிரளயங்களை சந்தித்ததை யாராலும் மறக்க முடியாது.

 பணமதிப்பிழப்பு நடவடிக்கை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

மோடி அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளினால், ரூபாய் நோட்டு மாற்றம், சூறாவளி சுழற்காற்று, வர்தா புயல், அரசியல் பிரமுகர் மரணம், ஆட்சியில் ஸ்திரதன்மையற்ற நிலை போன்றவையும் மக்களிடையே பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கர்மகாரகனான சனைஸ்வர பகவான் தனுர் ராசிக்கு அதிசார கதியில் சென்றது மற்ற பிரச்சனைகளுக்கு தற்காலிகமாக முடிவு கட்டிவிட்டாலும் காலப்புருஷனுக்கு பத்தாவது வீடான மகரத்திற்க்கு பனிரென்டில் சனைஸ்வர பகவான கோசாரபடி சென்றதாலும் கும்பத்தில் இருந்த கேதுவின் பதினோரம் பார்வையை பெற்றதாலும் வேலை மற்றும் தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது.

சென்னை கனமழை! நம்பினால் நம்புங்கள்! இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்?

 வேலையிழப்பை தவிர்க்க பரிகாரங்கள்:

வேலையிழப்பை தவிர்க்க பரிகாரங்கள்:

வேலையிழப்பைத் தவிர்க்கவும், வேலைவாய்ப்பை பெறவும் நீங்கள் செல்லவேண்டிய கோயில்களும், பரிகாரங்களும் உள்ளது. அதன்படி செய்துவந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

திருநள்ளாறு

திருநள்ளாறு

புதுச்சேரி மாநிலத்தில், கும்பகோணம் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது திருநள்ளாறு எனும் ஊர். இது சனிப் பெயர்ச்சிக்காகவும், சனி வழிபாட்டிற்கும் புகழ் பெற்றது.

Vasu

குச்சனுர்

குச்சனுர்

மதுரையிலிருந்து குமுளி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோயில் குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது. இது சனிப்பெயர்ச்சிக்கு மிகவும் சிறந்ததாகும்.

 சென்னை பொழிச்சலூர்,

சென்னை பொழிச்சலூர்,


சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் அமைந்துள்ள சனி பகவான் கோயிலுக்கும் சென்று வருவது சிறப்பாக கூறப்படுகிறது.

 சனி சிங்கனாபூர்

சனி சிங்கனாபூர்

முடிந்தால், மராட்டிய மாநிலத்தின் சனி சிங்கனாபூருக்கும் சென்று வருவது சாலச்சிறந்தது. இது அவுரங்காபாத் நகரத்துக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை பெரிய கோயில் - தன்னிகரற்ற தமிழர் கட்டிடக்கலையின் மணிமகுடம்

திருச்செந்தூர்

திருச்செந்தூர்


குரு மற்றும் செவ்வாய் ஸ்தலமான திருச்செந்தூருக்கு வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வருவது சனிப்பெயர்ச்சியால் நடைபெறும் வேலை இழப்பை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில்தான் திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நல்லதே நினையுங்கள்

நல்லதே நினையுங்கள்


பொதுவாகவே ஆன்மீகத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும். தமிழ் நேட்டிவ் பிளானட்டுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்