Search
  • Follow NativePlanet
Share
» »நரசிம்ம அவதாரத்துக்குரியவர் விஷ்ணுவா? சிவபெருமானா? படபடக்க வைக்கும் அவதார மர்மங்கள்!

நரசிம்ம அவதாரத்துக்குரியவர் விஷ்ணுவா? சிவபெருமானா? படபடக்க வைக்கும் அவதார மர்மங்கள்!

நரசிம்ம அவதாரத்துக்குரியவர் விஷ்ணுவா? சிவபெருமானா? படபடக்க வைக்கும் அவதார மர்மங்கள்!

இரன்யகசிபுவை நரசிம்ம அவதாரம் கொண்டு வதம் செய்தார் விஷ்ணு என்பது நாம் அறிந்த இதிகாச கதை. அது பெரும்பான்மையான இந்துக்களின் நம்பிக்கை.

பக்த பிரகலாதன் பற்றியும், அவன் விஷ்ணு மீது வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் பல புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுதான் தசாவதாரங்களில் ஒரு அவதாரமாக நரசிம்மனானார் என்பது இதிகாசம்.

தமிழகத்தில் ஒரு கோயிலில் சிவபெருமான் நரசிம்ம அவதாரம் பூண்டு காட்சியளிக்கிறார். அப்படியானால் உண்மையில் நரசிம்ம அவதாரம் கொண்டது சிவபெருமானா? விஷ்ணு பெருமானா? இது பற்றி தெரிந்து கொள்ள இந்த கோயிலுக்கு ஒரு ஆன்மீக சுற்றுலா செல்வோம் வாருங்கள்.

 எங்குள்ளது

எங்குள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருபுவனம் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். இங்குதான் அந்த மர்மம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Subramanian

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு எளிதாக செல்லும் வகையில் பேருந்து வசதிகள் உள்ளன. வாருங்கள் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிக்கலாம்.

 கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

பெரிய சுற்றுச் சுவருடன் கூடிய இந்த கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மற்ற கோயில்களிலிருந்தும் கொஞ்சம் மாறுபட்டிருப்பதும், இங்குள்ள தூண்கள் பக்த பிரகலாதன் நிகழ்ச்சியை நினைவூட்டுவதுமாக இருக்கிறது.

Ssriram mt

 வடிவமைப்பு

வடிவமைப்பு

இந்த கோயிலின் சுற்று சுவற்றில் அழகழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பெரும்பாலும் இந்து மதக் கடவுளர்கள் சார்ந்ததாகவும், வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றியதாகவும் இருக்கிறது.

Ssriram mt

 மண்டபம்

மண்டபம்

இந்த கோயிலின் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப் போன்று சிறந்த வேலைப்பாடுகளுடன் உள்ளன. அதுமட்டுமின்றி சோழர்களின் சிறப்புக்கள் அனைத்தையும் கூறவல்லதாகவும் திகழ்கின்றன. விஷ்ணுவுக்கு முன் சிவனா அல்லது சிவனுக்கு முன் விஷ்ணுவா என்ற விவாதத்தை கிளப்பி விடுவதாகவும் உள்ளது.

Subramanian

 சிவனா விஷ்ணுவா

சிவனா விஷ்ணுவா

நரசிம்ம அவதாரத்துக்குரியது விஷ்ணுவா சிவனா என்ற கேள்விக்கு காரணம் இங்கிருக்கும் பிரகலாதன் தான்.

இதன் தல வரலாறுபடி இங்கு பிரகலாதனின் நடுக்கத்தை சிவபெருமான் நீக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற நிகழ்வு, இங்கு சிவ பெருமான் எல்லா தூண்களிலும் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

Leon Meerson

 சரபேஸ்வரர்

சரபேஸ்வரர்

இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்டு, மூலவருக்கு நிகராக சன்னதி கொடுக்கப்பட்டுள்ளது இந்த சரபேஸ்வரருக்கு.

பா.ஜம்புலிங்கம் .

 சோழர்கள்

சோழர்கள்

சோழர் கால கட்டிடக்கலைக்கு உதாரணமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த கோயிலின் விமான அமைப்பும் சோழர்களின் பிற கோயில்களில் விமானமும் ஒத்துள்ளது.

பா.ஜம்புலிங்கம்

 பழமை

பழமை

இந்த கோயிலின் பழமை 1000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கிருக்கும் கல்வெட்டுக்கள் 900 வருடங்கள் பழமையானதாக உள்ளது.

Ssriram mt

 நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோயிலின் நடை திறந்திருக்கும்.

Bhieshma

 பிற தெய்வங்கள்

பிற தெய்வங்கள்

பிச்சாடனர், லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் இக்கோயிலில் வீற்றிருக்கும் மற்ற தெய்வங்கள்.

Saminathan Suresh

 கோயிலின் அற்புத காட்சிகள்

கோயிலின் அற்புத காட்சிகள்

கோயிலின் அற்புத காட்சிகள்

commons.wikimedia.org

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X