» »காசிக்கு போகணும்னு அவசியம் இல்ல.. இங்க போனா போதாதா?

காசிக்கு போகணும்னு அவசியம் இல்ல.. இங்க போனா போதாதா?

Written By: Udhaya

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழகத்தில் தற்போதும் பசுமை மாறாத ஒரு பகுதிதான் தென்காசி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள தென்காசிக்கு குற்றாலம் அருவி அடையாளமாக உள்ளது. இந்த அருவியே சுற்றுலா பயணிகள் அதிகம் தென்காசிக்கு வர முக்கியக் காரணமாக உள்ளது.

தென்காசியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தென்காசி கோவில் வரலாற்றை தாங்கியுள்ளதோடு இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.

சென்னை - மதுரை

சென்னை - மதுரை

தென்காசிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள சென்னைவாசியாக நீங்கள் இருந்தால் அங்கிருந்து காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, புதுக்கோட்டை வழியாக மதுரையை 496 கிலோ மீட்டர் பயணத்தில் அடையலாம். இந்த இடைப்பட்ட தூரத்தில் பாண்டிச்சேரி, நெய்வேலி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பார்க்க வேண்டிய தலங்கள் காணப்படுவது சுற்றுலாவிற்கு மேலும் வலு சேர்க்கிறது.

கோவை- மதுரை

கோவை- மதுரை

கோவையில் இருந்து 207 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மதுரை. இந்த இடைப்பட்ட பயணத்தை பயனுள்ளதாக மாற்ற நீங்கள் விரும்பினால் குண்டடம் பைரவர் கோவில், தாராபுரம் எலைஸ் நினைவு தேவாலயம், கொடைக்கானல், திண்டுக்கல் கோட்டை என வழிநெடுகிலும் மனதை மயக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் பரவலாக உள்ளன. சரியான திட்டமிடலுடன் இந்த பயணத்தை மேற்கொண்டீர்கள் என்றால் உங்களுடைய இந்த ஒட்டுமொத்த பயணத்திலும் பல தலங்களைக் கண்டு மகிழலாம்.

மதுரை- தென்காசி

மதுரை- தென்காசி


மதுரையில் இருந்து தென்காசி செல்ல மூன்று வழித்தடங்கள் பிரதானமாக உள்ளன. திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி வழியாக திருநெல்வேலியை அடைந்து அங்கிருந்து தென்காசியை சென்றடையலாம். இதன் மொத்த பயண தூரம் 211 கிலோ மீட்டர் ஆகும். கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை, சங்கரன் கோவில் சாலை வழியாகவும் தென்காசியை 184 கிலோ மீட்டரில் சென்றடைய முடியும்.

Koshy Koshy

மலையடிவாரப் பயணம்

மலையடிவாரப் பயணம்

மதுரையில் இருந்து சத்ரபட்டி, தேவதானம் வழியாக 161 கிலோ மீட்டர் பயணம் செய்தும் தென்காசியினை அடைய முடியும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்கள் ஊடாகச் செல்லும் இந்தப் பயணம் பசுமை நிறைந்ததாகவும், எளிதில் தென்காசியை அடையும் வகையில் இருக்கும். திருமங்கலத்தில் இருந்து வரும் வழியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், அம்மா பட்டியை அடுத்துள்ள அய்யனார் கோவில், அக்னி வீரபுத்திரா சுவாமி கோவில், வடுகபட்டி விநாயகர் ஆலயம், ஐயப்பன் கோவில் என இந்த பயணத்தை ஆன்மீகப் பயணமாகவும் மாற்றும் தன்மை கொண்டது.

தென்காசி சுப்பிரமணியன்

சுற்றுலாத் தலங்கள், தென்காசி

சுற்றுலாத் தலங்கள், தென்காசி

திருநெல்வேலி, தென்காசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது குற்றலா அருவி தான். குற்றாலத்தில் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, பாலருவி என மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன. இதில் பேரருவி குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி கீழே விழுகிறது. இதனைத்தவிர குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

Jeya2lakshmi

சிற்றருவி

சிற்றருவி


பேரருவிக்கு மேல் பகுதியில் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது சிற்றருவி. சோலைவனக் காடுகளின் வழியே உருவாகி பல மைல்தூரம் கடந்து வரும் நீர், இங்கு தான் சிறிய அருவியாகக் கொட்டுகிறது. இதனை அடுத்து பேரருவியில் இருந்து மலைத் தொடரில் சில தூரம் நடந்து சென்றால் அங்கே செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து, 30 அடி உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

Jabbarcommons

தேனருவி

தேனருவி


செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேன்கூடுகள் சூழ்ந்துள்ள பகுதியில் அமைந்துள்ளதுதான் இந்த தேனருவி. எந்த நேரமும் தேனீக்கள் மனிதர்களைத் தாக்கும் என்பதால் இங்கு சென்று குளிப்பது ஆபத்தானது.

Msudhakardce

ஐந்தருவி

ஐந்தருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஐந்தாறு அருவி. திரிகூடல் மலையின் உச்சியில் உருவாகி சிற்றாற்றின் வழியாக வந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிப்பதற்கு என இரண்டு அருவி கிளைகளும், ஆண்களுக்கு 3 கிளைகளும் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியின் அருகிலேயே சபரிமலை சாஸ்தா கோவில் மற்றும் முருகன் கோவில் உள்ளதால் எந்த நேரமும் பக்தர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் காணப்படும்.

Aronrusewelt

பழைய குற்றால அருவி

பழைய குற்றால அருவி

குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது பழைய குற்றால அருவி. சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீர் விழும் காட்சி மனதை விழுங்கும் வல்லமை கொண்டது.

Jeya2lakshmi

இதைத்தவிர வேற என்ன இருக்குதுன்னு தெரியுமா ?

இதைத்தவிர வேற என்ன இருக்குதுன்னு தெரியுமா ?

கடனாநதி அணை, ராமநதி அணை, உலக அம்மன் கோவில், சங்கரன்கோவில், குண்டாறு நீர்த் தேக்கம், திருமலைக் கோவில், அடவிநயினார் நீர்த்தேக்கம், அச்சங்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில், திருவிலஞ்சி குலசேகரநாதர் கோவில், குற்றாலநாதர் திருக்கோவில், புனித மிக்கேல் அதிதூதர் கத்தோலிக்க திருத்தலம், மாவட்ட அறிவியல் மையம், களக்காடு வனவிலங்கு சரணாலயம், மாஞ்சோலை என பசுமை நிறைந்த சுற்றுலாத் தலங்களும், ஆன்மீகத் தலங்களும் தென்காசியில் பரவலாக உள்ளன.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

கடனாநதி அணை

கடனாநதி அணை

குற்றாலத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கடனாநதி அணை. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்த நீர்த்தேக்கமும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள கடனாநதி அணையினைக் காண பல சுற்றுலா பயணிகள் வந்தவண்ணமே இருப்பர். குற்றாலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தால் மறக்காமல் இந்த அணைக்கும் குடும்பத்தினருடன் சென்று வாருங்கள்.

Raghukraman

ராமநதி அணை

ராமநதி அணை


திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மற்றொரு அணை ராமநதி. இந்த அணையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா நீண்டதூர பயணத்தில் குழந்தைகள் புத்துணர்ச்சி பெற ஏற்ற இடமாகும். மேலும் இதன் அருகே அமைந்துள்ள தலைமலை சாஸ்தா கோவிலும் அப்பகுதியில் பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

Sathishn 10

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்

தென்காசியில் குற்றாலத்தைத் தவிர மற்றொரு அடையாளமாக காட்சியளிப்பது தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில். வரலாற்று சிறப்புமிக்க இந்த சிவாலயம் உலக அம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மன அமைதியைத் தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள் ?. அப்படி என்றால் நிச்சயம் இந்த கோவிலுக்கு நீங்கள் சென்று வரலாம். பக்தர்களைத் தாண்டி இயற்கையை, கலைநயத்தை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் கூட இங்கே வர வேண்டும்.

tshrinivasan

 களக்காடு வனவிலங்கு சரணாலயம்

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

தென்காசியில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது களக்காடு வனவிலங்கு சரணாலயம். சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் குற்றாலத்திற்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி புள்ளிமான், கடம்பை மான், காட்டுப்பன்றிகள், சிங்கவால் குரங்குகள் என பலவகை விலங்கினங்கள் உள்ளன.

மேலும், இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகளும், தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் ஓடுவது சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கிறது. முதல் முறை தென்காசி செல்பவராக இருந்தால் மறக்காமல் இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வாருங்கள்.


SIVA ANANTHA KRISHNAN V