Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்க சிறப்பான சுற்றுலாத் தளங்கள் இவைதான்

தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்க சிறப்பான சுற்றுலாத் தளங்கள் இவைதான்

தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்க சிறப்பான சுற்றுலாத் தளங்கள் இவைதான்

புத்தாண்டில் குதூகலிக்க இந்தியாவில் நிறைய இடங்கள் இருக்கின்றன. எனினும் நம் மண் சார்ந்த சுற்றுலாவையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி இது நமக்கு மிக அருகில் இருக்கும் இடங்கள் என்பதால், எளிதாக குடும்பத்துடன் சென்றுவரலாம். எங்கெல்லாம் போகலாம் என்ன வேணா பண்ணலாம்னு நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் நல்ல பயனுள்ள தகவலாக இருக்கும் என்று நம்புகிறோம்.

 வால்பாறை

வால்பாறை

தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலாதளமும், அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் மலைப் பிரதேசமுமான வால்பாறை இந்த புத்தாண்டை வரவேற்க சிறந்த இடமாக உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஆனைமலையில் அமைந்துள்ளது இந்த வால்பாறை.

Mauryasanj

 கொண்டை ஊசி வளைவுகள்

கொண்டை ஊசி வளைவுகள்

வால்ப்பாறையில் இருந்து ஆழியாறு வரை ஏறத்தாழ 40 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. வால்ப்பாறையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளது. அதோடு கோயம்புத்தூர் வால்ப்பாறையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

Dilli2040

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

நீங்கள் குன்னூரில் எப்போது சென்று தங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் இருப்பதைக் காண இயலாது. பயணிகள் குன்னூர் வரும் காலத்தைப் பொருத்து மழைத் தூறல் அல்லது பெருமழை என வேறுபட்ட காட்சிகளோடு காணப்படுகிறது. பயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக காணப்படும் இவ்விடம் எப்போதும் ஆள் நடமாட்டத்துடன் காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் புத்தாண்டை வரவேற்க சிறந்த இடமாகும். உண்மையில் உங்கள் காதலி அல்லது மனைவியுடன் குன்னூரில் புத்தாண்டை அனுபவியுங்கள்.

Shijan Kaakkara

 மலை ரயில் பயணம்

மலை ரயில் பயணம்


நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம். யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு இணையான உலகப் பாரம்பரியம் மிக்க பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.

Jon Connell

பழவேற்காடு

பழவேற்காடு


தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் அமைவிடமாக இருந்த பழவேற்காடு என்ற இந்த சிறு நகரம் அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.

Santhosh Janardhanan

 பழவேற்காடு ஏரி

பழவேற்காடு ஏரி


பழவேற்காடு ஏரி என்று தமிழில் அழைக்கப்படும் புலிகாட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக உள்ளது. இந்தியாவின் இரண்டு மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்திருக்கும் இந்த ஏரி தென்னிந்தியாவின் பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் கவரும் இடமாக இருக்கிறது.

வங்காள விரிகுடாவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா என்ற இடைப்பட்ட சிறு தீவுப்பகுதியால் இந்த ஏரி பிரிக்கப்பட்டிருக்கிறது. விலங்குகள் மற்றும் பறவைகளால் நிரம்பியிருக்கும் பழவேற்காடு ஏரியானது, மீன்கள் விற்கும் வர்த்தக மையமாகவும் உள்ளது. இந்த ஏரிக்கு ஆரணி ஆறு, கலங்கி ஆறு மற்றும் சுவர்ணமுகி ஆறு ஆகியவற்றிலிருந்து நீராதாரம் கிடைக்கிறது.

Manvendra Bhangui

பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் (சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது), பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும். 481 கிமீ அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பாதுகாக்கப்பட்ட சரணாலயம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பரவி உள்ளது. ஒடிசா மாநிலத்திலுள்ள நாட்டிலேயே மிகப்பெரிய உப்பு நீர்நிலையான சில்கா ஏரிக்குப் பிறகு, இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக இருக்கும் பழவேற்காடு ஏரி மற்றும் சரணாலயம் ஆகியவை தேசிய அளவில் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன.

Nandha

கோவளம் கடற்கரை

கோவளம் கடற்கரை

தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர். கோவளத்தில் உள்ள டச்சு கோட்டையானது சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டு வருடந்தோறும் நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது ‘தாஜ் பிஷர்மேன் கோவ்' என்று அழைக்க்படுகிறது. இளைப்பாறுவதற்க்கும் நல்ல முறையில் நேரத்ததை செலவு செய்வதற்க்கும் ஏற்ற இடம் இது.


ADRIAN JAMES AROKIA RAJ

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

வங்காள விரிகுடாவிற்கு இணையாக செல்லும் ஒரு கால்வாய் கோவளத்தை நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றது. இந்த பிராந்தியத்தின் மற்ற முக்கிய இடங்கள் கோவளம் கடற்கரை, கத்தோலிக்க தேவாலயம், டச்சு கோட்டை, முத்துக்காடு காயல் நீர் முதலியன.

Destination8infinity

முத்துக்காடு

முத்துக்காடு


முத்துக்காடு காயல் நீர் பல நீர் விளையாட்டுகளுக்கு பேர்போன ஒரு இடமாகும். நீர்ச்சறுக்குதல், பாய்மர சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் ஒருவர் தன்னால் இயன்ற அளவு தன்னை ஈடுபடுத்திகொள்ள முடியும். முத்துக்காடு சென்னையில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கோவளம் செல்லும் போது இந்த இடத்தை தவற விடக்கூடாது. கோவளத்தில் உள்ள முத்துக்காடு, நகரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தாலும், மாசு பற்றிய கவலை இல்லாமல் இயற்கையின் புகலிடமாக அமைந்துள்ளது.

Read more about: welcome 2018 travel beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X