» »மதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்!

மதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்!

Written By: Udhaya

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் இத்தனை சாலைகள் வழியே எந்த சச்சரவும் பிரச்னயும் இல்லாமல் கடந்து வந்த ராம ராஜ்ய ரத ஊர்வலத்துக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள் கவனித்தீர்களா? இவ்வளவு ஏன் பொதுவுடமைக் கட்சி ஆளும் கேரளத்திலும், பாஜகவின் பிரதான எதிரியாக கருதப்படும் காங். ஆளும் கர்நாடகத்திலும் எந்த வித பிரச்னயும் இல்லாமல் கடந்து வந்த யாத்திரைக்கு தமிழகத்தில் இத்தனை எதிர்ப்புகள். மதக்கலவரம் உருவாகலாம் என்று முன்கூட்டியே 144  தடை. இதைவிட அதிர்ச்சி இந்த யாத்திரையின் அடுத்தடுத்த திட்டங்கள் என்பன எவை தெரியுமா?

விஷ்வ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் வந்துள்ள நிலையில் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இந்த ரதயாத்திரையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இந்த ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. இது எப்படியெல்லாம் வருகிறது. அதன் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் என்ன? வரும் வழியில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.

அயோத்தி

அயோத்தி

இங்குதான் ராமராஜ் ரதயாத்திரை தொடங்கியது.

சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது. சூர்ய வம்சத்தின் தலைநகரமான அயோத்யாவில் தான் ராமபிரான் பிறந்தார் என்று ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயண இதிகாசத்தில் இளவரசர் ராமரை பற்றியும், அவரது 14 வருட வனவாசத்தைப் பற்றியும், ராவணனை வீழ்த்தி திரும்பவம் நாட்டிற்கு திரும்பியதைப் பற்றியும் விரிவாக உள்ளது.

அயோத்தியைச் சுற்றியுள்ள மற்ற தலங்கள்

அயோத்தியைச் சுற்றியுள்ள மற்ற தலங்கள்

அயோத்யா நகரம் ஹிந்துக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலமாகும். ஆன்மீகவாதிகளுக்கு அயோத்யா பல சுற்றுலா ஈர்ப்புகளை அளிக்கின்றன. நாகேஷ்வர்நாத் கோவில் (ராமபிரானின் மகனான குசாவால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது) மற்றும் சக்ர ஹர்ஜி விஷ்ணு கோவில் இங்குள்ள கோவில்களில் மிக முக்கியமானதாகும். ராமயணத்தை மீண்டும் எழுதிய துளசிதாஸ் என்பவரின் நினைவாக இந்திய அரசாங்கம் துளசி ஸ்மாரக் பவன் என்ற நினைவகத்தை எழுப்பியுள்ளது. 1992-ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தான் ராம் ஜன்ம பூமி உள்ளது. கனக பவன் என்ற இடத்தில் ராம பிரான் மற்றும் சீதா பிராட்டி தங்க கிரீடம் அணிவித்த ஓவியங்களை காணலாம். ஹனுமான் கர்ஹி என்ற கோவில் பெரிய கோட்டை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசம்

மத்தியபிரதேசம்

உத்திரபிரதேசத்தைத் தொடர்ந்து இந்த மத்தியபிரதேச மாநிலம் வழியாக பயணித்தது ராம ராஜ்ய ரத யாத்திரை.

இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் செழிப்பான இயற்கை வளமும் நிரம்பியதாக காட்சியளிப்பதால் இம்மாநிலம் சுற்றுலாப்பயணத்திற்கு மிகவும் ஏற்றது. வானளாவிய மலைத்தொடர்கள், ஆறுகள் பாயும் பசுமையான வனப்பகுதிகள் மற்றும் வற்றாத ஏரிகள் என்று இயற்கையின் எல்லா பரிமாணங்களையும் மத்தியப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடர்களுக்கிடையே நர்மதா மற்றும் தபதி ஆகிய இரு ஆறுகளும் ஒன்றுகொன்று இணையாக இம்மாநிலத்தில் பாய்கின்றன. பல்வகையான தாவரங்கள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் நிரம்பிய இயற்கை வளத்தை பெற்றிருப்பது இம்மாநிலத்தின் தனித்தன்மையாகும்.

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

மாநிலத்தலைநகரான போபால் நகரம் சீக் மற்றும் ஷாமி கபாப் உணவுப்பண்டங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. சுவையான ஜிலேபிகள் மற்றும் முந்திரி இனிப்பு வகைகள் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. இருப்பினும் உணவுப்பழக்கங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இடத்துக்கு இடம் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கஜுராஹோ நடனத்திருவிழா மற்றும் குவாலியர் நகரத்தில் நடத்தப்படும் தான்சேன் இசைத்திருவிழா போன்ற கலைத்திருவிழாக்கள் உலகளாவிய அளவில் பிரசித்தமாக அறியப்படுகின்றன. மதாய் திருவிழா மற்றும் பகோரியா திருவிழா போன்றவை மத்தியப்பிரதேச மாநிலத்தின் கிராமப்பகுதிகளில் பூர்வகுடி மக்களால் நடத்தப்படும் திருவிழா நிகழ்ச்சிகளாகும்.

மகாராஷ்ட்டிரம்

மகாராஷ்ட்டிரம்

மத்தியபிரதேசத்தைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் வழியாக பயணித்தது ராம ராஜ்ய ரத யாத்திரை.

மகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் தோண்டிப் பார்த்தால் அது கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் முதல் புத்த குகைக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.எனினும் மகாராஷ்டிராவை பற்றிய செய்திகள், 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹுவான் சுவாங் என்ற புகழ்பெற்ற சீனப் பயணியின் குறிப்புகளில்தான் காணப்படுகின்றன. மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியின் புகழுக்கும், பெருமைக்கும் எவரும் அருகில்கூட வர முடியவில்லை. இந்த மாமன்னர்தான் இந்தியாவின் கட்டுறுதியான சாம்ராஜியங்களில் ஒன்றான மராட்டிய பேரரசை நிறுவியவர்.

மராட்டிய சாம்ராஜ்யம்

மராட்டிய சாம்ராஜ்யம்


மகாராஷ்டிராவில் உள்ள 350 கோட்டைகளும் மராட்டிய மன்னர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 13 கோட்டைகள் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோட்டைகளிலேயே இரட்டை கோட்டைகளாக அறியப்படும் விஜயதுர்க் மற்றும் சிந்துதுர்க் கோட்டைகளே மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த கடற்கோட்டைகளாக கருதப்படுகின்றன.மேலும், புனேவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிவ்னேரி கோட்டை, சிவாஜியின் பிறப்பிடம் என்பதால் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சிவாஜிக்கும், அஃப்சல் கானுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போரின் நினைவுகளை வீரகாவியமாய் நமக்கு சொல்வது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பிரதாப்காட் கோட்டை.

கர்நாடகம்

கர்நாடகம்

மராட்டியத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அதிலும் பயணத்தில் தீராத தாகம் கொண்ட சாகசப் பிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையின் அற்புதங்கள் மீது அமரக் காதல் கொண்டவர்களுக்கும் பிரத்யேகமாக எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கர்நாடகாவை சுற்றி அமைந்துள்ளன. கூர்க் மாவட்டம் அதன் பச்சை புல்வெளிகளை கொண்ட கவின் கொஞ்சும் பள்ளத்தாக்குகளால் இந்தியாவின் ஸ்காட்லேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த எழில் நகரம் கர்நாடகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கர்நாடகாவின் காப்பித் தோட்டமான சிக்மகளூர் மாவட்டமும், அம்மாவட்டத்தின் அழகிய அருவிகளுக்கு சொந்தமான கெம்மனகுண்டியும், பசுமையான குதுரேமுக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள்.

ஆன்மிகத் தலங்கள்

ஆன்மிகத் தலங்கள்

கர்நாடகாவில் பரந்து விரிந்து கிடக்கும் எண்ணற்ற கடற்கரையோர சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்ட பெருமை மங்களூருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் கொல்லூர் மூகாம்பிகை கோயில், உடுப்பி கிருஷ்ணா கோயில், ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில், ஸ்ருங்கேரி சாரதா கோயில், குக்கே சுப்பிரமணிய கோயில், தர்மஸ்தாலா உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களும் மங்களூரை சுற்றி உள்ளன.கர்நாடகாவின் சொக்க வைக்கும் கடற்கரை தேசமாக மரவந்தே கடற்கரை திகழ்ந்து வருகிறது. அதுபோலவே மால்பே, பைந்தூர், கார்வார் போன்ற கடற்கரை நகரங்களும் கர்நாடகாவின் வசீகரமிக்க கடற்கரைகளாகும்.கர்நாடகாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரங்கள் ஒவ்வொன்றும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

கேரளம்

கேரளம்

பாஜகவினருக்கு நேரடியாக சவால் விடக்கூடிய வெகு சில தலைவர்களுள் ஒருவரான பிணராயி ஆளும் கேரள மாநிலத்திலும் எந்தவித இடையூறும் இன்றி வந்தது ராம ராஜ்ய யாத்திரை.

கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன. அதோடு இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்களுக்கும், உள்ளத்துக்கும் அறுசுவை விருந்து படைக்கும் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கொடி போல படர்ந்து வண்ண வண்ணப்பூக்களை சொரிந்துகொண்டிருக்கின்றன.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள்.

கலாச்சாரம்

கலாச்சாரம்

இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இதன் பலவகைப்பட்ட கலைவடிவங்களும், உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் கேரள மாநிலத்தை மற்ற இந்திய பகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன. கேரள மாநிலம் பல்வேறு நடன வடிவங்கள், நாடக வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகள் என்று கலைமகளின் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கதக்களியும், மோகினியாட்டமும் உலகப்பிரசித்தம். அதோடு பரிசமுட்டு, கூடியாட்டம், கிறிஸ்த்தவர்களின் சவுட்டு நாடகம், இஸ்லாமியர்களின் ஒப்பனா என்பன போன்ற புகழ்பெற்ற நடன மற்றும் நாடக வடிவங்களில் சமயச் சாயம் பூசப்பட்டிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் முண்டு என்ற பாரம்பரிய உடை உடுத்தும் கேரள மக்கள் கர்நாடக சங்கீதத்திலும் வல்லவர்களாகவே விளங்கி வருகின்றனர்

தமிழகம்

தமிழகம்

இப்படி எல்லா இடங்களிலும் எந்த பிரச்னயும் இன்றி வந்த யாத்திரைக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள்.

தமிழகத்தைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. பல கட்டுரைகளில் நாம் பார்த்திருக்கிறோம். தமிழகத்தின் கேரள எல்லையான திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள கிராமத்தின் வழியே இந்த ரதயாத்திரை தமிழகத்துக்குள் நுழைந்தது. மேலும் இது தென்காசி, ராஜபாளையம், திருவில்லிப்புதூர், கல்லுப்பட்டி, திருமங்கலம், மதுரை வழியாக ராமேஸ்வரத்தை அடையவுள்ளது இந்த ரதம்.

Unknown

தென்காசி

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழகத்தில் தற்போதும் பசுமை மாறாத ஒரு பகுதிதான் தென்காசி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள தென்காசிக்கு குற்றாலம் அருவி அடையாளமாக உள்ளது. இந்த அருவியே சுற்றுலா பயணிகள் அதிகம் தென்காசிக்கு வர முக்கியக் காரணமாக உள்ளது. தென்காசியை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தென்காசி கோவில் வரலாற்றை தாங்கியுள்ளதோடு இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
Koshy Koshy

 திருவில்லிப்புதூர்

திருவில்லிப்புதூர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேல் பழமையானது. கடவுளுடைய திவ்ய தேசங்களில் ஒன்று இங்கு இருக்கிறது என்பதால் இது மிகவும் புனிதமான இடம் என்பது இந்துசமய கோட்பாடு. திராவிட சிற்பக்கலையை எடுத்துரைக்க இந்த கோவில் ஒரு சிறந்த உதாரணம். இக்கோவிலின் தெய்வம் படுத்திருக்கும் நிலையில் இருக்கிறார். கருவறையின் கீழ் அமைந்து இருக்கும் அறை முற்றிலும் மர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. தமிழக அரசாங்க முத்திரையில் இக்கோவிலின் கோபுரம் இடம்பெற்று இருப்பதே இக்கோவிலின் மகத்துவமான சாதனை. இக்கோவில் வளாகத்தில் ஆணி ஆள்வார் உத்சவம் மற்றும் ஏனைகாப்பு ஆகிய இரண்டு முக்கியமான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

Gauthaman

மதுரை

மதுரை

மதுரை மாநகரில் பல்வேறு மதங்களை சார்ந்தோரும் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர். பல்வேறு இனத்தாரின் பாரம்பரிய அம்சங்கள் இந்நகரில் கலந்து வேரூன்றி கிடக்கின்றன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும். காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

Bernard Gagnon

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து இராமநாத கடவுளின் ஆசியையும், பிரார்த்தனையும் பெற்றுச் செல்கின்றனர். மேலும் இராமேஸ்வரம் என்ற இந்த இடம் இராமபிரான் போரினால் தான் செய்த பாவங்களை நீக்க தேர்ந்தெடுத்த இடமாகவும் நம்பப்படுகிறது. பிராமண அரசனான இராவணனை கொன்ற பின் இந்த இடத்தில் நோன்பிருக்க இராமபிரான் மிகவும் விரும்பினார். மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்றை இங்கே பிரதிஷ்டை செய்ய விரும்பிய இராமர், அனுமனிடம் இமயத்திலிருந்து லிங்கத்தை கொண்டு வர பணித்தார். இதற்கு வெகு நேரம் ஆனதால், இடைப்பட்ட நேரத்தில் சீதா தேவி வேறு ஒரு லிங்கத்தை இங்கே கட்டிவிட்டார்.இந்த சிவலிங்கம் தான் இன்னமும் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

Read more about: travel temple tamilnadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்