Search
  • Follow NativePlanet
Share
» »குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...!

குரு பெயர்ச்சியால் தோஷம் நீங்கும் இந்த ராசிக்காரர்கள்...!

தற்போது நடைபெறவுள்ள குருபெயர்ச்சியில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்க எந்த ராசிக்காரர்கள் இத்தலம் வரவேண்டும் என தெரியுமா ?

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில்.

அம்மனை வழிபட்டால் கிட்டும் குருவின் பார்வை! தோஷம் போக்கும் செவ்வாய் கோயில்அம்மனை வழிபட்டால் கிட்டும் குருவின் பார்வை! தோஷம் போக்கும் செவ்வாய் கோயில்

இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோவில் கொண்டுள்ளனர். பழங்கால சிறப்பங்கள் மற்றும் கோவில்களை நினைவு கூறும் வகையில் உள்ளது நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம். தற்போது நடைபெறவுள்ள குருபெயர்ச்சியில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்க எந்த ராசிக்காரர்கள் இத்தலம் வரவேண்டும் என தெரியுமா ?

கோவிலின் வரலாறு

கோவிலின் வரலாறு


கோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோவில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோவில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்.

Terence Ong

கோவில் கோபுரம்

கோவில் கோபுரம்


இத்திருக்கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது. மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளா தேவி நாச்சியாராக வளர்ந்துவந்ததால், மகரிஷி மேதவி விருப்பத்திற் கிணங்க நாச்சியார் கோவிலாக இவ்வூரின் பெயர் மாறியது என்பது புராண கதை.

Ssriram mt

மகரிஷி கையில் கிடைத்த சிலைகள்

மகரிஷி கையில் கிடைத்த சிலைகள்


மேதாவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.

Ssriram mt

மகரிஷியிடம் வளர்ந்த மகாலட்சுமி

மகரிஷியிடம் வளர்ந்த மகாலட்சுமி


இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.

பா.ஜம்புலிங்கம்

பெருமாளின் விருப்பம்

பெருமாளின் விருப்பம்


அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.

Zairon

மகாலட்சுமியின் திருமணம்

மகாலட்சுமியின் திருமணம்


அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப் பெயர் பெற்றது.

Tanmaykelkar

பெண் பெருமை போற்றும் நாச்சியார் கோவில்

பெண் பெருமை போற்றும் நாச்சியார் கோவில்


பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது. இத்தலத்திற்கு வந்து வதுபடுவதன் மூலம் குரு பெயர்ச்சியால் கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கி செல்வமும், அருளும் பெருகும் என்பது நம்பிக்கை.

Ssriram mt

கல் கருடன் ஊர்வலம்

கல் கருடன் ஊர்வலம்


கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.

Prinzy555

தோஷம் நீக்கும் கல்கருடன்

தோஷம் நீக்கும் கல்கருடன்


நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.

Suraj Belbase

சுமங்கலி பாக்கியம்

சுமங்கலி பாக்கியம்


ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

Suraj Belbase

எப்போது, எப்படி செல்லலாம் ?

எப்போது, எப்படி செல்லலாம் ?


கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு. விஷேச தினங்களில் காலை 1 மணிவரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X