» »சிம்ம ராசிக்காரர்களே! கடனிலிருந்து தப்பித்து கோடீஸ்வரராக ஆக வேண்டுமா?

சிம்ம ராசிக்காரர்களே! கடனிலிருந்து தப்பித்து கோடீஸ்வரராக ஆக வேண்டுமா?

By: Sabarish

வான மண்டலத்தில் 5-வது ராசியாக வலம் சிம்மராசி உடையவரா நீங்க? எடுத்த காரியத்தில் தொடர்ந்து வெற்றியடைந்து வந்த நிலைமை மாறி தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும் மன வேதனையில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான கட்டுரைதான் இது. அனைத்து கிரகங்களுக்கும் தலைமையாக உள்ள சூரிய பகவானின் ராசி நாதனாகப் பெற்ற சிம்ம ராசியில் சிந்தனை, செயல், முடிவு என அனைத்திலும் சிறந்து செயல்படுவீர்கள். இருந்தாலும், உடன் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத விரோதிகள் மூலம் அந்த வெற்றியால் பயனேதும் கிடைக்காமலேயே சென்றுவிடும். பெயர், பணம், புகழ் என இருந்த நீங்கள் சமீபகாலமாக கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறீர்கள் என்றால் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு போய்ட்டு வாங்க, அடுத்து வெற்றி மேல வெற்றிதான் உங்களுக்கு குவியும்.

 எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

தஞ்சாவூர் மாவட்டத்தையும், வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்ட மாவட்டம் தான் திருவாரூர். சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற தலைநகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்த திருவாரூர் குலோத்துங்கச் சோழர் காலத்தின் போது, இந்நகரிலிருந்து ஆட்சி செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இசை உலகின் மும்மூர்த்திகளாகப் புகழ்பெற்று விளங்கிய தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி மற்றும் முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோர் அவதரித்த பெருமை வாய்ந்த ஊராகவும் இந்த ஊர் போற்றப்படுகிறது.

சென்னை- திருவாரூர்

சென்னை- திருவாரூர்


சென்னையில் இருந்து திருவாரூர் செல்ல மூன்று வழிகள் உள்ளன. மாமல்லபுரம்- பாண்டிச்சேரி- சிதம்பரம் வழியாக இந்த ஊரை அடையலாம். இதன் மொத்த பயண தூரம் சுமார் 300 கிலோ மீட்டர் ஆகும். அல்லது, மேல்மருவத்தூர்- பண்ருட்டி வழியாக 320 கிலோ மீட்டர் பயணித்து கும்பகோணம் வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக 340 கிலோ மீட்டர் பயணித்தும் கும்பகோணத்தைக் கடந்து திருவாரூரை வந்தடையலாம்.

புத்துணர்ச்சி ஏற்படுத்தும் கடற்கரை பயணம்

புத்துணர்ச்சி ஏற்படுத்தும் கடற்கரை பயணம்

சென்னையில் இருந்து விழுப்புரம், பண்ருட்டி சாலையில் பயணிப்பதைக் காட்டிலும் பாண்டிச்சேரி- கடலூர் வழி கடற்கரைச் சாலை உங்களது இந்த பயணத்தை மேலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த இடைப்பட்ட தூரத்தில் உள்ள மாமல்லபுரம்- பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நீங்கள் காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள் நிறைய உள்ளன. இவை இந்தப் ஆன்மீகப் பயணத்தை சிறந்த சுற்றுலாவாக மாற்றும்.

Ms Sarah Welch

 கோவை- திருவாரூர்

கோவை- திருவாரூர்

கோவையில் இருந்து திருவாரூர் செல்லவும் மூன்று சாலைகள் உள்ளன. இதில், கரூர்- திருச்சி- தஞ்சாவூர் வழியான சாலை உங்களது நேரத்தை சேமிப்பதோடு மட்டுமின்றி மனதை மயக்கும் சுற்றுலாப் பயணமாகவும் அனுபவிக்கலாம். சுமார் 330 கிலோ மீட்டர் சாலைப் பயணத்தில் முசிரியில் ஓடும் காவிரி ஆற்றுப்படுகை சாலை, ஸ்ரீரங்கம் கோவில், வண்ணத்துப்பூச்சி பூங்கா, தஞ்சாவூர் என ஒட்டுமொத்த சாலையும் சுற்றுலாத் தலங்களால் நிறைந்து காணப்படுகிறது.

கடன் தீர்க்கும் வாஞ்சியம் கோவில்

கடன் தீர்க்கும் வாஞ்சியம் கோவில்


திருவாரூர் மாவட்டம், வாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில் தான் சிம்ம ராசிக்காரர்களின் பாவம், கடன்களைப் போக்கி மறுவாழ்வு அளிக்கும் மகிமை பெற்றுள்ளது. இந்தக் கோவிலின் எதிரே உள்ள திருக்குளமான கமலாலயம் நீர்ப்பரப்பு கடல் போல காட்சியளிக்கும். தேவாரப் பாடலில் இடம்பெற்றுள்ள தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் 70-வது சிவதலமாகவும் திகழ்கிறது.

காசியைவிடவும் வீசம் அதிகம் என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவதலமாக புகழ்ந்து கூறப்படும் இந்தத் திருத்தலத்தில் இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி உள்ளிட்டோர் வழிபட்டுச் சென்றதாக இன்றளவும் தொன்நம்பிக்கை நிலவுகிறது.

கோடீஸ்வரராக வேண்டுமா?

கோடீஸ்வரராக வேண்டுமா?

பொதுவாகவே ஒரு சொல் உண்டு. உழைத்தால் பலன் கிட்டும். அதிர்ஷ்டத்தை நம்புபவன் முட்டாள் என்று. அது உழைப்பவர்களுக்காக சொல்லப்பட்ட வார்த்தை. நீங்கள் என்னதான் கோயில் குளம் என்று சுற்றி வந்தாலும் கூட உங்களின் சிறிதளவு முயற்சிதான் உங்களை உயர்த்தும். ராசி நாதர் உங்களுக்கு வழியைத்தான் காட்டுவார். கைப்பிடித்து அழைத்துச் செல்லமாட்டார். எனினும் இந்த கோயிலுக்கு சென்று 3 அல்லது 9 முறை முறையான வேண்டுதல்களையும் செய்து வந்தால், தொழில் விருத்தியடைந்து கோடீஸ்வரராகவும் வாய்ப்பு உண்டு.

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

திருவாரூரில் வாஞ்சிநாதசுவாமி கோவிலைத் தவிர்த்து பறவைகள் சரணாலயம், ஆலங்குடி சிவன்கோவில், கூத்தனூர் கலைமகள் கோவில், அலையாத்தி வனம், மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி கோவில் என இப்பகுதியில் பல சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இந்த தலங்கள் உங்களது பயண சோர்வைப் போக்கி மேலும் உற்றாகமடைய வழிவகைச் செய்யும். குறிப்பாக, குடும்பத்தினருடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளீர்கள் என்றால் அவர்களுடனான நெருக்கத்தையும் இந்தத் தலங்கள் அதிகரிக்கும்.

Rasnaboy

பறவைகள் சரணாலயம்

பறவைகள் சரணாலயம்

தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியாகத் திகழும் வடுவூரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஏரிக்கரை மற்றும் நீர்ப்பரப்பில் காணப்படும் பலவகையான பறவைகளைக் காண இரு கண்கள் போதாது என்றே கூறவேண்டும். திருவாரூருக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டால் கண்டிப்பாகத் தஞ்சாவூரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம் செல்ல தவறிவிடாதீர்கள்.

Prasan gr

 ஜாம்பவனோடை தர்கா

ஜாம்பவனோடை தர்கா

திருவாரூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஜாம்பவனோடை தர்கா. இந்த இடைப்பட்ட தூரத்தில் அமைந்துள்ள வடபாதி மங்கலம் என்னும் ஊரில் உள்ள மகா முத்து மாரியம்மன் கோவில், அய்யனார் கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற தெய்வங்களாக உள்ளன.

Jagadhatri

முத்துப்பேட்டை அலையாத்திவனம்

முத்துப்பேட்டை அலையாத்திவனம்

ஜாம்பவனோடையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முத்துப்பேட்டை. இங்குள்ள காயல்காடு பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய இந்தப் பகுதியில் காணப்படும் மீன்கள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இடம்பெயர்ந்து வரும் நீர்ப்பறவைகள் என பல சிறப்புமிக்க தருணங்களை அனுபவிக்க இது சிறந்த இடமாகும்.

L. Shyamal

Read more about: travel, temple, thanjavur