Search
  • Follow NativePlanet
Share

திருவாரூர் – பழம்பெரும் கோயில்கள் மற்றும் காயல்களின் உறைவிடம்!

22

தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டம் தனியாக உருவாவதற்கு முன், நாகப்பட்டினத்தின் பகுதியாக இருந்தது. வங்காள விரிகுடாவிற்கு அருகில் அமைந்துள்ள இவ்வூர், கடற்கரைக் காயல்களால் நிறைந்தது. இது காவேரி நதியின் கிளை நதிகளால் உருவாக்கப்பட்ட படுகைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

திருவாரூர் நகர், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற தலைநகரங்களுள் ஒன்றாக திகழ்ந்தது. மாமன்னர் குலோத்துங்கச் சோழர் காலத்தின் போது, இந்நகரிலிருந்து ஆட்சி புரிந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. மேலும், இசை உலகின் மும்மூர்த்திகளாக புகழ்பெற்று விளங்கிய தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி மற்றும் முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோர் அவதரித்த பெருமை வாய்ந்தது இவ்வூராகும்.

திருவாரூர் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தளங்கள்

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், கூத்தனூர் சரஸ்வதி திருக்கோயில், திருகண்ணபுரம் நீலமேக பெருமாள் திருக்கோயில், முடிகொண்டானில் உள்ள கோதண்டராமர் திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் ஆகியன இப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சில கோயில்களாகும். இவற்றைத்தவிர, மாநகரப் பூங்கா மற்றும் முத்துப்பேட்டை ஆகியவையும் மக்களை கவர்ந்திழுக்கும் இடங்களாக உள்ளன.

திருவாரூரை அடைவது எப்படி?

திருவாரூரை எளிதில் அடையலாம். இவ்வூர், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இருந்து சாலை வழியாகவோ அல்லது இரயில் வழியாகவோ எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது.

திருவாரூரிலிருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெருநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்குகிறது. சென்னை மாநகரம் 290 கி.மீ. தொலைவில் அமையப்பெற்று இவ்வூரிலிருந்து செல்லக்கூடிய தொலைவிலேயே உள்ளது. திருவாரூருக்கென இரயில் நிலையம் உள்ளது. அதனால் இவ்வூருக்கு இரயில் மூல்ம் செல்வதும் எளிது.

திருவாரூரின் வானிலை

திருவாரூரில், பெரும்பாலும் வெப்ப வானிலையே நிலவுகிறது. ஜீன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலமும், இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டங்களாகும். திருவாரூரில் கோடைகாலம் மிகுந்த உஷ்ணமாக, 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான தட்பவெப்ப நிலையுடன் இருக்கும்.

திருவாரூர் சிறப்பு

திருவாரூர் வானிலை

சிறந்த காலநிலை திருவாரூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திருவாரூர்

  • சாலை வழியாக
    திருவாரூர், மாநிலத்தின் முக்கிய நகரங்களான திருச்சி மற்றும் சென்னையில் இருந்து, சாலை வழியாக எளிதில் அடையும்படி அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து, சென்னை, சுமார் 290 கி.மீ தொலைவிலும், திருச்சி, சுமார் 110 கி.மீ தொலைவிலும் உள்ளன. திருவாரூரிலிருந்து, டாக்ஸி மூலமாக திருச்சிக்கு செல்வதற்கு ரூபாய் 1500 வரை செலவாகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திருவாரூர் இரயில் நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கொச்சி மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்கு ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மாநிலத்தின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலிருந்தும் இரயில் மூலமாக இவ்வூரை எளிதில் அடையலாம். இரயில் மூலம் சென்னையை அடைந்து, அங்கிருந்து திருவாரூருக்கு இரயிலில் செல்வதே, மிகவும் எளிதான மற்றும் உசிதமான வழியாகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சென்னை விமான நிலையம் தான் இவ்வூருக்கு மிக அருகில் அமைந்த விமான நிலையமாகும். இந்நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருப்பதனால், சென்னை மாநகரம், இந்தியாவின் பல்வேறு இடங்களுடன் மட்டுமின்றி உலகின் பல்வேறு இடங்களுடனும், விமான சேவை மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து, பேருந்து அல்லது இரயில் மூலமாக இவ்வூரை எளிதாக அடையலாம். திருவாரூரிலிருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருச்சி நகரிலும் ஒரு விமான நிலையம் உள்ளது. திருச்சி நகரை விமானம் மூலமாக அடைந்து, பின்னர் இரயில் மூலமாக இவ்வூரை அடையும் வாய்ப்பும் சிறப்பானதாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed