» »முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வைத்த செட்டிநாடு வீடுகள்

முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வைத்த செட்டிநாடு வீடுகள்

Posted By: Sabarish

கம்பீரமும், கலை நேர்த்தியும், ஆதிகால தொழில்நுட்ப மிக்க மாளிகைகளை கொண்டதுதான் சிவகங்கை மாவட்டம். இதன் ஒரு நகரே பல கலைநுட்பங்களுக்கு பெயர்பெற்ற காரைக்குடி. பிள்ளையார்பட்டி போன்ற ஊர்களும், மருதுபாண்டியர் வாழ்ந்த வீரம் நிறைந்த பகுதியும் என இந்தப் பகுதி பல்வேறு செழிப்புமிக்க வளங்கள் மூலம் தனிப் பெருமை பெற்றுள்ளது.

என்னதான் இருக்கு இங்க ?

என்னதான் இருக்கு இங்க ?


சர்வதேச தரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள், திருமயம் மலைக் கோட்டை, பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், இடைக்காட்டுர் தேவாலயம், குன்னங்குடி, மருதபாண்டியன் நினைவாலையம், வெள்ளாறு சங்கமம் என காரைக்குடி சுற்றுலாத் தலங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதில், கலைநயமிக்க வீடுகள், மலைக் கோட்டை, கடல் சங்கமிக்கும் வெள்ளாறு உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் ஈர்க்கப்படும் பகுதிகளாகும்.

Koshy Koshy

 ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு


"ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு" என்று சினிமா பாட்டில் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அதுபோன்ற ஒரு வீட்டை நீங்கள் பார்த்ததுண்டா ?. அதனைக் காண நீங்கள் விரும்பினால் காரைக்குடிக்கு ஒருமுறை போய் பார்த்துட்டு வாங்க. ஆயிரம் ஜன்னல் கொண்ட ஒரு வீடு மட்டும் இங்கே ஸ்பெசல் இல்லைங்க. இதுபோன்ற சர்வதேசத் தரத்திலான சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இந்தியாவில் காரைக்குடியில் மட்டுமே உள்ளது என்பது இந்நகரிற்குப் பெருமை சேர்க்கிறது.

பெரும்பாலும், ராமேஸ்வரம், சிவகங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் சென்று காண வேண்டிய இடம் காரைக்குடியில் உள்ள இந்த ஆயிரம் ஜன்னல் வீட்டைத்தான்.

KARTY JazZ

கட்டிடக் கலை

கட்டிடக் கலை


வீடு முழுவதும் பர்மா தேக்கு, உள்ளே மாடங்கள், அறைகள், தூண்கள், ஜன்னல்கள், பலகணிகள் அனைத்தும் கலைவேலைப்பாடு மிக்கவை. நகரமயமாக்கலில் அழிக்கப்படாமல் மீதமிருக்கும் செட்டிநாடு வீடுகளில் இந்த வீடும் ஒன்று. செட்டிநாடு வீடுகள் அனைத்துமே, தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடிக்கும் மேல் உயரத்திலேயே கட்டப்பட்டுள்ளன. சாதாரண வீடுகளைப் போல் எல்லாம் வருடத்திற்கு ஒரு முறை இந்த செட்டிநாட்டு வீடுகளுக்கு வெள்ளை அடிக்கப்படுவதில்லை. காரணம், அந்த அளவிற்கு வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

KARTY JazZ

கதவில் கொஞ்சும் கலைநயம்

கதவில் கொஞ்சும் கலைநயம்


செட்டிநாட்டு வீடுகளின் நுழைவுவாயிலே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளிலும், அதனைத் தாங்கி நிற்கும் நிலைகளிலும் நேர்த்தியான சிற்பங்கள் வியப்படையச் செய்கின்றன. 16- 17 ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்பக்கலை அமைப்புகளே செட்டிநாட்டின் கலைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளன. குறிப்பாக, கோவில்களில் காணப்படுவதைப் போலவே இங்குள்ள கதவுகளிலும் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

KARTY JazZ

அறிவியல்

அறிவியல்

இந்த வீடுகளில் கவனிக்கத்தக்க வேண்டிய விசயம், சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளதாகக் கூறுகின்றனர் இன்னும் அங்கு வசிக்கும் வம்சாவழியினர். எவ்வித இரசாயன கலவைகளும் இன்றி கட்டப்பட்டதாலேயே மாவட்டம் முழுக்க எவ்வளவு வெப்பச் சலனம் நிலவினாலும் இங்கு இதமாக இருக்கிறது.

KARTY JazZ

திருமயம் மலைக் கோட்டை

திருமயம் மலைக் கோட்டை


1676 ஆம் ஆண்டு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் காலத்தில் கட்டப்பட்டது திருமயம் மலைக்கோட்டை. வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற இந்தக் கோட்டை ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ளது. தற்போதும் கூட இந்தக் கோட்டையைச் சுற்றியுள்ள உயரமான மதில்சுவர்கள் கம்பீரம் நிறைந்தே காணப்படுகிறது.

Vishnoo

கோட்டையைக் காத்த பீரங்கிகள்

கோட்டையைக் காத்த பீரங்கிகள்

திருமயம் மலைக் கோட்டைக்கு சென்று வருவோர் பெரிதும் விரும்புவது கோட்டையின் உச்சியில் உள்ள பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி உள்ள பீரங்கியையே. இதேப் போல கோட்டையின் தெற்கு நுழைவாயிலின் அருகேயும் இரண்டு பீரங்கிகள் உள்ளன. கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், போரின் போது பயன்படுத்தப்படும் சங்கிலி உடைகள் போன்றவை புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோட்டைக்கு வெளிநாட்டினர் அடிக்கடி சுற்றுலா வந்து செல்வது வழக்கம். இதேபோல் இந்த கோட்டையில் அவ்வப்போது சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. வரலாற்று தகவல் அரிவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வமிக்கவராக நீங்கள் இருந்தால் இந்த திருமயம் மலைக் கோட்டை உங்களது பயணத்தை பயனுள்ளதாக மாற்றும்.

 இடைக்காட்டூர் தேவாலயம்

இடைக்காட்டூர் தேவாலயம்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் கரையோரம் அருகே அமைந்துள்ளது இடைக்காட்டூர் தேவாலயம். தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களைப் போல் அல்லாமல் இடைக்காட்டூர் தேவாலயம் சற்று மாறுபட்டே காணப்படுகிறது. காரணம், அதன் கலைநயமிக்க கட்டிட நேர்த்தியே. இந்த தேவாலயமானது பிரான்சு நாட்டின் ரீம்ஸ் நகரில் உள்ள பேராலயத்தைப் போலவே இடைக்காட்டூரிலும் அதே பொழிவோடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சிலைகள் பிரான்சில் இருந்து கொண்டுவரப்பட்டவையாகும்.

Rmckarthik

 எப்போது சென்றால் நன்றாக இருக்கும்

எப்போது சென்றால் நன்றாக இருக்கும்

சுமார், 150 ஆண்டுகளைக் கடந்து வானுயர்ந்துள்ள இந்த தேவாலயத்தில், கிறித்துமஸ், புனிதவெள்ளி, புத்தாண்டு என வழக்கமான விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் சிறப்பு திருப்பலி மிகவும் விசேசமான நிகழ்ச்சி ஆகும். இதனைக் காண செல்ல விரும்புவோர் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்ல வேண்டும்.

Jowens 6

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்

காரைக்குடியிலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் மற்றும் லிங்கவடிவு திருவுருவ வழிபாடு உங்களது இந்த பயணத்தை சிறந்ததொரு ஆன்மீகப் பயணமாகவும் மாற்றும்.

Sai DHananjayan Babu

வெள்ளாறு சங்கமம்

வெள்ளாறு சங்கமம்

புதுப்பேட்டை, அரியமங்கலம், தஞ்சாவூர் வழியாக பெருக்கெடுத்து வரும் ஆற்றுநீர் வெள்ளாறு பகுதியைக் கடந்து மும்பள்ளி என்னும் இடத்தில் வங்கக் கடலுடன் கலக்கிறது. இதுவே இப்பகுதி மக்களால் வெள்ளாறு சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. பல மயில்தூரம் பயணித்து வரும் ஆற்றுநீர் வெள்ளாறு அடுத்த வீரமங்கலம் பகுதியில் ஏற்படுத்தியுள்ள நூற்றுக்கணக்கான மணல்திட்டுக்கள் பார்க்கவே ரம்மியமாக காட்சியளிக்கும்.

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

மருதுபாண்டியர் நினைவாலயம், கண்ணதாசன் மணிமண்டபம், திருக்கோஷ்டியூர் திருத்தலம், தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோவில், நாட்டரசன்கோட்டை, குன்றக்குடி முருகன் ஆலயம், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் என சிவகங்கை, காரைக்குடியைச் சுற்றிலும் ஏராளமான ஆன்மீகத் தலங்களும், சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

நாட்டரசன் கோட்டை

நாட்டரசன் கோட்டை

சிவகங்கையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவில் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

Jean-Pierre Dalbéra

 குன்றக்குடி முருகன் ஆலயம்

குன்றக்குடி முருகன் ஆலயம்

காரைக்குடியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குன்னக்குடி முருகன் ஆழையம் ஆயிரம் ஆண்டிற்கும் மேற்பட்ட வரலாற்றை உடையது. இதன் மலையடிவாரத்தில் மூன்று குகைக் கோவில்களும் உள்ளன. இவை அனைத்தும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாக தொன்நம்பிக்கை உள்ளது.

Arunachalam S

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

வேட்டங்குடி பறவைகள் சரணாலயமானது வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி, சின்ன கொள்ளுக்குடி உள்ளிட்ட ஊர்களின் நீர்நிலைகள் சுழ்ந்து அமைந்துள்ளது. கொக்கு, நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, இரவு நாரை, கருநீல அரிவாள் மூக்கன், பாம்புதாரா, கரண்டி வாயன் உள்ளிட்டு 217 வகையான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்திற்கு இடையேயான காலகட்டத்தில் இங்ளே சென்றால் அரியவகை பறவைகளை பார்வையிடலாம்.

Ve.Balamurali

எப்படிச் செல்வது

எப்படிச் செல்வது

நீங்கள் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு செல்லத் திட்டமிட்டால் திண்டிவனம்- பெரம்பலூர் வழியாக காரைக்குடியை வந்தடையலாம். இந்த 420 கிலோ மீட்டர் பயண தூரத்திலும் மேல்மருவத்தூர் கோவில், விழுப்புரத்தில் செஞ்சிக் கோட்டை மற்றும் கல்வராயன் மலை, பெரம்பலூர் ரஞ்சன்குடி கோட்டை என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் வழிநெடுகிலும் உங்கள் பயணத்தை மேம்படுத்தக் காத்திருக்கின்றன.

Read more about: travel temple fort

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்