» »ஹொய்சாலாவின் அற்புத கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டான இந்த கோயிலுக்கு ஒரு சுற்றுலா

ஹொய்சாலாவின் அற்புத கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டான இந்த கோயிலுக்கு ஒரு சுற்றுலா

Posted By: Udhaya

இந்தியா ஆன்மீகம் நிறைந்த நாடு. இங்கு கடவுளர்களும் கோயில்களும் மிக அதிகம். பக்தர்களாலும், அரசர்களாலும் கட்டப்பட்ட கோயில்களுள் பல வரலாற்று சாதனைகளையும், பெருமைகளையும் தூக்கி நிறுத்துகிறது.

இப்படிபட்ட கோயில்களுள் ஒன்றுதான் கர்நாடக மாநிலத்தில் உள்ள அம்ருதேஷ்வரர் ஆலயம்.

கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இந்த கோயிலின் மர்மங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

10 முதல் 14ம் நூற்றாண்டுகள் இடைப்பட்ட காலத்தில் ஹொய்சாலா மன்னர்கள் இந்த பகுதிகளை ஆட்சி செய்துவந்தனர்.

இவர்களின் பூமி கட்டிடக்கலைக்கும், சிற்பங்களுக்கும் சிறந்து விளங்கியது.

PC:Dineshkannambadi

 ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ஹொய்சாலா மன்னர்களின் பெருமை


இவர்களின் பெருமையை சிக்மகளூரிலுள்ள அம்ருதேஷ்வர் கோயிலிருந்து மட்டுமல்லாமல், சோமநாதபுரத்திலுள்ள கேஷவ கோயிலிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.


PC:Dineshkannambadi

 ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

1196 ம் ஆண்டு இரண்டாம் வீர பல்லாலா , ஹொய்சாலா வம்சத்தின் மன்னரானார். அப்போது இந்த கோயிலைக் கட்டத்தொடங்கினார்.

PC:Dineshkannambadi

 ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

மற்ற கோயில்களிலிருந்தும் இந்த கோயில் மிகவும் மாறுபட்டதாக உள்ளது. அதை இந்த கோயிலுக்கு செல்லும்போதேஉங்களால் உணர முடியும்.


PC: Chidambara

 ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

இங்குள்ள முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நம்மால் செய்யமுடியாது என நினைக்கும் சின்ன சின்ன மிக நுணுக்கமான விசயங்கள் கூட இங்கு உள்ளது.

PC: Pramod jois

 ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

அம்ரிதபுரா கிராமம் சிக்மகளூரிலிருந்து 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குதான் அம்ருதேஷ்வர் கோயில் அமைந்துள்ளது.


PC:Dineshkannambadi

 140 வகை கடவுளர்கள்

140 வகை கடவுளர்கள்

சொன்னால் நம்பவே மாட்டீர்கள். இந்த கோயிலில் 140 வகை கடவுளர்கள் உள்ளனர். இந்த கோயிலின் தூண்கள் அரிய வகை கதவுகள், குடையபட்ட கற்சிற்பங்கள் என 140 வகை இந்து கடவுள்களைத் தாங்கியுள்ளது.

PC:Dineshkannambadi

 ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ஹொய்சாலா மன்னர்களின் பெருமை

ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை படங்களாகக் காட்டும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களும் இந்த கோயிலில் காணப்படுகின்றன.

PC:Dineshkannambadi

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். சிக்மகளூரிலிருந்து 65 கிமீ வரை செல்லவேண்டும். ஹசனிலிருந்து 110 கிமீட்டரும், ஷிமோகாவிலுருந்து 35 கிமீ செல்லவேண்டும்.

Read more about: travel temple