» »லவ்வர இங்க மட்டும் கூட்டிட்டு போய் பாருங்க... இந்த லவ்வர்ஸ்டே உங்களுக்கு ஜமாய்தான்

லவ்வர இங்க மட்டும் கூட்டிட்டு போய் பாருங்க... இந்த லவ்வர்ஸ்டே உங்களுக்கு ஜமாய்தான்

Posted By: Sabarish

பூவுலகில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களும் எந்தளவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றதோ அதற்கு இணையான ஒன்று காதல். இணைப்பு மற்றும் பாசம் இல்லாமல், முழு உலகமும் பயனற்றதாகத்தான் இருக்கும். உங்களுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ள காதல் முக்கிய காரணியாக உள்ளது.

இத்தகைய காதலை போற்றும் வகையில், இணையவள், இணையவனிடம் அன்பின் தீவிரத்தை அதிகரிக்க கொண்டாடப்படுவதே காதலர் தினம். வருடந்தோறும் பிப்ரவரி 14ம் தேதியன்று கொண்டாடப்படும் காதலர் தினத்தில் ரோஜாக்கள், இரவு உணவு மற்றும் ஒரு முத்தம் இன்றி அன்றைய தினம் முழுமையடையாது. எனினும், இத்தகைய வழக்கமான செயல்பாடுகளைக் கடந்து உங்களது துணைக்கு ஒரு ஆச்சரியமான அனுபவத்தை தர விரும்பினால் உங்களுக்கான கட்டுரைதான் இது.

நைனித்தால்

நைனித்தால்

உத்தரகாண்ட் மாநிலம், நைனித்தால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சவாரி செய்துகொண்டே காதல்கொள்வதை விட சிறந்தது வேறு எது?. இந்த நைனித்தால் நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் கில்பரி எனும் அழகிய பிக்னிக் தலம் உள்ளது. ஓக் மற்றும் பைன் மரங்கள் அடர்ந்த பசுமையான இந்த காட்டுப்பகுதி இயற்கையின் மடியில் பொழுதைப் போக்க சிறந்த இடமாகும்.

மேலும், நைனித்தால் நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் லரியாகண்டா எனும் மலைச்சிகரம் உள்ளது. இப்பகுதியிலேயே இரண்டாவது உயரமான சிகரமாக உள்ள இதனைச் சுற்றிலும் படர்ந்து விரிந்திருக்கும் பசுமைக் காட்சிகளை காதலியின் கையைக் கோர்த்தபடி நன்றாகக் கண்டு ரசிக்கலாம். உங்களது காதலை சில்லென்ற காற்றுடன் கலந்து ரசிக்க நைனித்தால் நல்ல இடமாகும்.

Incorelabs

மணாலி

மணாலி

தேனிலவு செல்லும் ஒவ்வொரு தம்பதியருக்கும் கனவாக இருப்பது மணாலி தான். இந்த காதலர் தினம் பனி, பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகள் ஆகியவற்றுடன் இணைந்ததாக ஏன் இருக்கக் கூடாது ?. காதல் நிறைந்த கண்ணுக்கு தெரியாத அழகுகளை ரசிக்க ஒரு உலகத்திற்கு உங்களது காதலி/ காதலனையும் இங்கே அழைத்துச் சென்று அன்பை செலுத்தி ஆச்சரியப்படுத்தலாம்.

மனதைக் கவரும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமுடிய மலைச் சிகரங்கள், சிவப்பு- பச்சை ஆப்பிள் தோட்டங்கள் என பல அழகு அம்சங்களின் மூலம் இந்த மணாலி காலங்காலமாக காதலர்களை வசீகரித்து வருகிறது. இங்கு பயணிக்கும் காதலர்களாக நீங்கள் இருந்தால் கிரேட் ஹிமாலயன் தேசியப் பூங்கா, ஹடிம்பா கோவில், சோலங் வாலி பள்ளத்தாக்கு, பியாஸ் குண்ட் ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு தவறாமல் சென்று உங்களது காதலை வலுப்படுத்தலாம். மேலும், பண்டோஹ் அணை, சந்திரகானி பாஸ் போன்ற சுற்றுலாத் தலங்களும் இங்குள்ள இதர முக்கியமான பகுதிகளாகும்.

Unknown

 காஷ்மீர்

காஷ்மீர்

ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவலாக இருக்கும் பூமியில் பனிப்பொரிவுடன் காதலை அனுபவிக்க காஷ்மீர் தவிர வேறொன்றுமில்லை. பள்ளத்தாக்குகளை மூடிய பனிப்பாறைகள், நன்னீர் ஏரிகள், அன்பை எதிரொலிக்கும் காஷ்மீர் சீதோஷனம் உலகின் பல இயற்கை அதிசயங்களைக் கொண்டுள்ளது. இந்த உலகின் மிகவும் இராணுவமயமான மண்டலமாக காஷ்மீர் இருந்தாலும், இதன் கவர்ச்சியும் அழகும் இன்னும் அப்படியே உள்ளது.

இங்கே இருக்கும் குளம், நடுவில் வைக்கப்பட்டிருக்கும் கருப்புக் கல்லால் ஆன கூடாரம், மின்னொளி அலங்காரம், மனதை மயக்கும் இசை ஆகியவை உங்களது காதலைத் தூண்டி பரவசநிலையடையச் செய்யும்.

தேனிலவுக்களுக்கான சொர்க்கம், சாகசத்தைத் தேடுவோர் என எல்லோருக்கும் ஒரே ஒரு இலக்கு இந்த காஷ்மீர் தான். சுற்றுலா பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. உங்களது மென்மையான அன்பின் மயக்கத்தை, தெளிவான கனவு வானத்தில் பகிர காஷ்மீரில் காதலர் தினத்தைக் கொண்டாடுங்கள். .

KennyOMG

 ஹேவ்லாக் தீவு

ஹேவ்லாக் தீவு

அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக பிரசிதிபெற்ற தீவாக புகழ்பெற்றுள்ள ஹேவ்லாக் சொர்க்கத்தீவை நாடி ஏராளமான சுற்றுலாப்பயணிகளும், காதலர்களும் உலகில் பல பகுதிகளிலிருந்தும் வருகை தருகின்றனர். மொத்தம் ஐந்து அழகிய கடற்கரைப்பகுதிகளை கொண்ட கிராமங்கள் இங்கு அமைந்துள்ளன.

ஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிக்கலாம். இந்த தீவில் இருந்து விலகி நீங்கள் வந்தாலம் சிறந்த காதல் விடுமுறையினுள் ஒன்றாகவே நினைவுகளில் இருந்து நீங்காத ஒன்றாக இது இருக்கும். காதலின் அழகை உணர்ச்சிப்பூர்வமாக ரசிக்கும் ஜோடிகளுக்கு ஏற்ற சிறந்த இடமாகும்.

கடற்கரை மணற் திட்டில், ஒளிரும் கடற்கரைகளில் விளையாடலாம். நீங்கள் உங்கள் காதலர் தினம் ஒரு காலமற்ற நினைவாக்க விரும்பினால், கண்டிப்பாக செல்ல வேண்டும்.

Harvinder Chandigarh .

ஆலப்புழா

ஆலப்புழா

ஆலெப்பி என்றழைக்கப்படும் ஆலப்புழா இந்தியாவில் படகு சவாரிக்கு பெயர்பெற்ற தலமாகும். கேரளாவில் அமைந்துள்ள இது கீழைத்தேசத்து வெனிஸ் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்பின் சுமைகளை ஆழமாக உணர விரும்புவோர் முன்கூட்டியே ஒரு படசு இல்ல சவாரியை பதிவு செய்யுங்கள். காதலியின் கரம்பிடித்து படகு சவாரி செல்ல யாருக்குத்தான் விருப்பமிருக்காது ?.

Shameer Thajudeen

எப்படிச் செல்வது

எப்படிச் செல்வது

விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆலப்புழா சென்றடையலாம். முக்கிய அண்டை மாநில நகரங்களிலிருந்தும் நேரடி ரயில் சேவைகளும், பேருந்து சேவைகளும் கூட ஆலப்புழாவிற்கு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ‘எண்- 47' ஆலப்புழா வழியே செல்வதால் சாலை வசதிகள் மற்றும் பேருந்து இணைப்புகளுக்கும் எந்த குறையுமில்லை.

நீங்கா நினைவுகளை வாழ்வின் இறுதி நாளில் அதே காதலுடன் நினைத்துப்பாக்க இத்தகைய இடம் நல்ல தேர்வாக இருக்கும். உங்களது காதலை உணர்வும், உணர்ச்சியும் மிக்கதாக செலவிட இதைவிட வேறு ஏதேனும் தலங்கள் உள்ளதா என்ன ?. உங்கள் காதலின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு இந்த சுற்றுலா தலத்திற்கு செல்ல முயலுங்கள், காதல் செய்யுங்கள்.

RajeshUnuppally

Read more about: travel tour

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்