Search
  • Follow NativePlanet
Share
» »பிக் பாஸ் ராணி ஐஸ்வர்யா தத்தா இந்த ஊர்க் காரங்களா ?

பிக் பாஸ் ராணி ஐஸ்வர்யா தத்தா இந்த ஊர்க் காரங்களா ?

இப்ப எதுக்கு ஐஸ்வர்யா பத்தியெல்லாம் பேசுரீங்க, அந்த அளவுக்கு அவங்க பெரிய ஆள் இல்லை, விடுங்க பாஸ் என்ன இருந்தாலும் பாலாஜி பண்ணினதும் தப்பு தானே, அவரும் தான் அடிக்கடி எல்லாத்தையும் தகாத வார்த்தையில திட்டிட்டு இருக்காரு... இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ வாக்குவாதங்களும், உரையாடல்களும் தான் இன்னைக்கு நம்மளச் சுற்றி பேசப்படுது. அதிலும் சமீபமா, இந்த இரண்டு நாட்கள்ல தமிழனை அசிக்கப்படுத்திய வட நாட்டு பெண் என்ற கருத்துகளிலேயே ஐஸ்வர்யா தத்தா குறித்து பரவலா கருத்து நிலவுகிறது. அதற்குக் காரணம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. சரி, இப்ப பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும், பயணத் தளமான நேட்டிவ் பிளேனட்டுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்குறீங்களா ?. கலாச்சாரமும், பாரம்பரியமும் pமக்க ஐஸ்வர்யா பிறந்த ஊருக்குதான் இன்னைக்கு பயணிக்க போறோம்.

உண்மையாவா ?

உண்மையாவா ?


ஆமாங்க, ஐஸ்வர்யா தத்தாவோட சில நடவடிக்கைகள் வேணும்னா முகம் சுழிக்க வைக்கிற மாதிரி இருக்கலாம். ஆனா, இவங்க பிறந்த ஊர் அத்தனை அழகும், பாரம்பரியமும், கலாச்சாரமும் மிக்கது. அப்படி எந்த ஊருன்னு தெரியுமா ?. அது மேற்கு வங்காள மாநிலமான கொல்கத்தா தான்.

Nikkul.

நிரம்பி வழியும் கலாச்சாரம்

நிரம்பி வழியும் கலாச்சாரம்


இந்தியாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று தான் கொல்கத்தா. இங்கு வசிக்கும் மக்கள் பல காலமாக கலாரசனை மிகுந்தவர்களாகவும், பல்வேறு கலை பாரம்பரியங்களை ஊக்குவிப்பவர்களாகவும், இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

Biswarup Ganguly

கலைத் துறை

கலைத் துறை


கல்கத்தாவைப் பொருத்தவரை கலைத்துறையில் ஆர்வமிக்கவர்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக இவர்கள் நடத்தும் நாடக வடிவங்கள் மற்றும் பரீட்சார்த்த குறு நாடகங்கள் உலகளவில் பல கலை ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Biswarup Ganguly

திரைப்படங்களில் கொல்கத்தா

திரைப்படங்களில் கொல்கத்தா


கொல்கத்தா நகரம் திரைத் துறையில் ஒரு முக்கியமான அம்சமாக திகழ்கிறது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் ஒரு காட்சியிலாவது கொல்கத்தா இடம் பெறத் தவறுவதில்லை. கல்கத்தாவின் அடையாளங்களான ஹௌரா பாலம், டிராம் வண்டிகள் போன்ற காட்சிகள் பல படங்களில் நாம் பார்த்திருப்போம்.

Rajarshi MITRA

இரவு நேர பொழுதுபோக்கு

இரவு நேர பொழுதுபோக்கு


கொல்கத்தா நகரத்தின் இரவு நேர பொழுதுபோக்கு அம்சங்கள் பிரசித்தி பெற்றது. ஹாலிவுட் திரைப்படங்களில் பார்ப்பதைப் போன்ற நைட் கிளப்புகளும், மது விடுதிகளும் இங்கே இரவு நேரத்தை வசீகரிக்கின்றன. இங்குள்ள நைட் கிளப்களில் ஆடவர்கள், பெண்கள் என வெளியுளகில் பயணிப்பதைப் போன்ற தோற்றத்தை நமக்கு தருகிறது.

Sam Hawley

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


ஈடன் கார்டன்ஸ்

இந்தியாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று தான் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ். கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் கிரிக்கெட்டில் விரும்பிகள் யாரும் இந்த மைதானத்தை சுற்றிப் பார்க்கத் தவறுவதில்லை.

JokerDurden

அலிபூர் விலங்கியல் பூங்கா

அலிபூர் விலங்கியல் பூங்கா


அலிபூர் ஜூ மிருகக்காட்சிசாலை கொல்கத்தா நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவின் தோற்றமும், பராமரிப்பும் நேர்த்தியாக உள்ளதால் புகைப்படக் கலைஞர்களுக்கு விருப்பமான தலமாக இது உள்ளது. வார இறுதி நாட்களில், மாலை நேரங்களில் குடும்பத்தினர் பொழுதுபோக்கிற்காக இங்கே வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Biswarup Ganguly

பார்க் ஸ்ட்ரீட்

பார்க் ஸ்ட்ரீட்


பார்க் ஸ்ட்ரீட் மற்றும் அதை ஒட்டியுள்ள காமக் ஸ்ட்ரீட் கொல்கத்தா நகரத்தின் நவநாகரிக வணிகப் பகுதிகளாகும். அலுவலக வேலையாகவோ, சுற்றுலாவாகவோ நீங்கள் கொல்கத்தாவிற்கு பயணம் செய்ய நேர்ந்தால் இங்குள்ள நடைப்பாதைகளில் பலவிதமான பொருட்களை பேரம் பேசி வாங்க தவறிவிடாதீர்கள்.

Abhijit Kar Gupta

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் தாஜ் மஹாலை ஒத்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறது விக்டோரியா மெமோரியல். இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள், அற்புதமான கட்டிடக்கலை, கம்பீரமான தோற்றம் போன்றவை பார்வையாளர்களை இதை நோக்கி ஈர்க்கிறது.

Priyanko.Phadikar

காரக்பூர்

காரக்பூர்

கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள காரக்பூர் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், இளம் தலைமுறையின் பிரதான இடமாகவும் உள்ளதற்குக் காரணம் இங்குள்ள ஏரியே. அந்த மாலை நேரத்தில், சூரியன் மறையும் அந்த இளஞ்சிவப்பு ஒளியில் இங்கே ஜோடிகள் கைகோர்த்து நடக்கும் காட்சி நம் மனதை சிளிர்க்கச் செய்திடும். நீங்க சிங்கிளா இருந்தா அங்க போகாதீங்க பாஸ்...

P.K.Niyogi

ஷாப்பிங் மால்கள்

ஷாப்பிங் மால்கள்


காரக்பூரில் இருக்கும் லெய்ஷர் மல்டிபிளக்ஸ் மற்றும் பல்லடுக்கு வணிக வளாகத்தில் உலப் புகழ் பெற்ற பிராண்ட்களின் கூடாரமாக மட்டுமின்றி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் காணும் திரையரங்க வசதிகளையும் கொண்டுள்ளது.

ptwo

பக்காலி தீவு

பக்காலி தீவு


பக்காலி மற்றும் ஃப்ரேசர்குஞ்ச் எனும் இரட்டை நகரங்களுக்கு இடையே சில கிலோ மீட்டர் தொலைவில் இந்த பக்காலி கடற்கரை தீவுப்பகுதி அமைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதி கடினமான தரையுடன் காட்சியளிப்பதால் கடலை ஒட்டி சைக்கிள் சவாரி மற்றும் நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபட முடியும்.

Rupchatterjee

சுந்தரவனக் காடுகள்

சுந்தரவனக் காடுகள்


உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இடமாக இந்த சுந்தரவனக் காடுகள் நிச்சயம் இருக்கும். மிகவும் பெரிய மாங்குரோவ் காடுகளில் ஒன்றான சுந்தரவனக் காடுகளில் உலகத்திலேயே மிகவும் மோசமாக, அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான இந்தியப் புலிகளுக்கான காப்பகமும் உள்ளது.

Soumyajit Nandy

முர்ஷிடபாத்

முர்ஷிடபாத்

கங்கை ஆற்றின் கிளை நதியாக விளங்கும் பாகிரதி நதிக்கரையில் அமைந்துள்ளது முர்ஷிடபாத். கொல்கத்தாவிற்கு மிக அருகில் இருப்பதாலும் இங்கே சில சுற்றுலா தலங்கள் இருப்பதாலும் பல வருடங்களாக இங்கே பல சுற்றுலா பயணிகள் சீசன் காலங்களில் குவிவது வழக்கம். கைவினைப் பொருட்கள் தயாரிப்பு இங்கே அதிகளவில் நடைபெறுவதால் மலிவு விலையில் இதனை வாங்கி வரலாம்.

Fif

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X