Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சுந்தரவனக் காடுகள்

சுந்தரவனக் காடுகள் - யுனெஸ்கோவின் பாரம்பரிய தலம்!

14

இந்தியாவிற்கும் பங்களாதேஷீக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்பு நிலப்பகுதிதான் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இதன் பெரும்பாலான பகுதிகள் பங்களாதேஷ் நாட்டிற்குள் இருந்தாலும், இந்திய எல்லையில் வரும் மூன்றில் ஒரு பங்கு பகுதி சுற்றுலாப் பயணிகள் எளிதில் சென்று வரவும், மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இடமாக சுந்தரவனக் காடுகள் இருக்கும். மேலும், இந்த பகுதியில் உள்ள யுனெஸ்கோ-வின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

மிகவும் பெரிய மாங்குரோவ் காடுகளில் ஒன்றான சுந்தரவனக் காடுகள் சுமார் 4200 ச.கிமீ பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த காடுகளில் உலகத்திலேயே மிகவும் மோசமாக, அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான இந்தியப் புலிகளுக்கான காப்பகமும் உள்ளது.

சுந்தரவனக்காடுகளின் சூழலுக்கேற்ப, உப்பு நீரில் வாழ தன்னைத் தயார் படுத்திக் கொண்டு, கம்பீரமாக உலவிக் கொண்டிருக்கும் இந்தியப் புலிகளை காண வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

சுமார் 250 புலிகள் மட்டுமல்லாமல், சேட்டல் மான்களும் மற்றும் ரீசஸ் குரங்குகளும் வசிக்கும இடமாக சுந்தரவனக் காடுகள் உள்ளன. மேலும் இராஜ நாகம் மற்றும் வாட்டர் மானிடர் போன்ற மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளின் வசிப்பிடமாகவும் சுந்தரவனக் காடுகள் இருப்பதால், சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

புகைப்படம் எடுப்பவர்களின் சொர்க்கம்

சரியான நேரத்தில் சுந்தரவனக் காடுகள் தேசிய பூங்காவிற்கு வரும் புகைப்படக் கலைஞர்கள் மாஸ்க்டு ஃபின்புட் (Masked Finfoot), மாங்குரோவ் பிட்டா (Mangrove Pitta) மற்றும் மாங்குரோவ் விஸ்லர் (Mangrove Whistler) ஆகிய அரிய வகை பறவையினங்களையும் 'க்ளிக்' செய்ய முடியும்.

இந்த பகுதியைச் சுற்றிலும் சுந்தரி மற்றும் கோல்பாடா வகை மரங்கள் அதிகளவில் உள்ளன. 1900-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில், டேவிட் ப்ரெய்ன் என்ற உயிரியல் ஆய்வாளர் சுமார் 330 உயிரினங்களை இங்கே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

MB சுந்தரி

MB சுந்தரி என்பது வாடகைகு தரப்படக்கூடிய மிதக்கும் வீடு! எப்பொழுதும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு விடும் இந்த படகு இல்லத்தில் நீங்கள் சுந்தரவனக் காடுகளை நன்றாக சுற்றிப்பார்க்க முடியும்.

MB சுந்தரியில் 8 பேர் கொண்ட ஒரு குடும்பம் செல்ல முடியும் மற்றும் இதில் பல்வேறு படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளன. கேரளாவிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இவை பகட்டான படகுகளாக கருதப்படுகின்றன.

அறிவியல் ஆய்வாளர்கள் பருவநிலை மாற்றத்தால் சுந்தரவனக் காடுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த காடுகள் கொல்கத்தாவிலிருந்து காரில் சென்று விடக்கூடிய தொலைவிலேயே உள்ளன.

இரவில் தங்க முடியாததாலும், அதற்கான வசதிகள் இல்லாததாலும் சுற்றுலாப் பயணிகள் சுந்தரவனக் காடுகளுக்கு பகலில் சென்று விட்டு வந்து விடுவார்கள்.

இங்கிருக்கும் சில உள்ளூர் உணவகங்களில் நாவில் எச்சில் ஊறச் செய்யும் சுவை மிகுந்த உள்ளூர் உணவுகளும், கடல் உணவுகளும் கிடைக்கின்றன.

மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவிலிருந்து சுந்தரவனக் காடுகளுக்கு தொடர்ச்சியாக கார் மற்றும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சுந்தரவனக் காடுகள் குடும்பத்தோடும், கணவன்-மனைவி ஆகியோரும் சென்று வர மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கிருக்கும் ஆற்றில் ஓடும் ஒற்றைப் பாய்மரக் கப்பல்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் செல்வது காதலைப் பரிமாறிக் கொள்ள ஏற்ற சூழலை உருவாக்கும்.

குறுகலான துணையாறுகள் மற்றும் ஓடைகளில் இங்கு செல்லும் படகு பயணங்கள், சுற்றுலாப் பயணிகளை அமேசான் போன்ற சர்வதேச சுற்றுலாப் பயண தலங்களுடன் சுந்தரவனக் காடுகளை ஒப்பிட வைக்கும்!

சுந்தரவனக் காடுகளை அடைவது எப்படி?

சுந்தரவனக் காடுகளை விமானம், இரயில் மற்றும் சாலை போக்குவரத்து போன்ற வசதிகளைப் பயன்படுத்தி எளிதில் அடையலாம்.

சுந்தரவனக் காடுகள் சிறப்பு

சுந்தரவனக் காடுகள் வானிலை

சிறந்த காலநிலை சுந்தரவனக் காடுகள்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சுந்தரவனக் காடுகள்

  • சாலை வழியாக
    கொல்கத்தாவிலிருந்து தினமும் தொடர்ச்சியான பேருந்து சேவைகள் சுந்தரவனக் காடுகளுக்கு இயக்கப்படுகின்றன. தினமும் பல்வேறு முறை இங்கிருந்து பேருந்துகள் கிளம்பிச் செல்கின்றன. கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் இருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு சுமார் 3 மணி நேர சாலை பயணத்தில் சென்று விட முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொல்கத்தாவின் ஹெளரா இரயில் நிலையத்துடன் சுந்தரவனக் காடுகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    100 கிமீ தொலைவில் இருக்கும் கொல்கத்தா விமான நிலையம் சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat