Search
  • Follow NativePlanet
Share
» »விநாயகர் சதுர்த்தி 2022: இந்தியாவில் உள்ள இந்த பிரபலமான விநாயகர் கோவில்களுக்கு சென்று இருக்கிறீர்களா?

விநாயகர் சதுர்த்தி 2022: இந்தியாவில் உள்ள இந்த பிரபலமான விநாயகர் கோவில்களுக்கு சென்று இருக்கிறீர்களா?

நம் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமான் அனைத்து இந்துக் கடவுள்களையும் விட முதன்மையானவர். நாம் திருமணம், புதுமனை புகுவிழா, ஹோமங்கள், பூஜைகள் என எந்த சுப விசேஷம் செய்தாலும் முதலில் மஞ்சளில் பிள்ளயார் உருவத்தை செய்து ஆரத்தி எடுத்துவிட்டு தான் எந்த விசேஷத்தையும் தொடங்குவோம். நம் வாழ்விலும், பூஜை அறையிலும், மனதிலும் கலந்தவர் நம் செல்ல பிள்ளையார்.

கல்வி, அறிவு, ஞானம், புகழ், செல்வம், ஆயூள், ஆரோக்கியம் என அனைத்தையும் வாரி வழங்கும் சிவ பார்வதியின் மூத்தப் பிள்ளையான விநாயகருக்கு நம் நாடு முழுவதும் பல பிரசித்திப் பெற்ற தலங்கள் உள்ளன. ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தியில் தான் பிள்ளையார் பிறந்தாராம், அந்த புனித நாளை தான் நாம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆகஸ்ட் 31 அன்று வருகிறது.

அன்றைய நாளில் புதிதாக பிள்ளையார் சிலை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு, பூக்கள் நகைகள் வைத்து அலங்கரமிட்டு நம் செல்ல பிள்ளையாருக்கு பிடித்த பழங்கள், கொழுக்கட்டை, லட்டு, அவல், சுண்டல், பல வகை இனிப்புகள் செய்து படையலிட்டு நாம் வழிபட வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள இந்த பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு பக்கத்தில் நீங்கள் இருந்தால், கட்டாயம் அன்றைய தினத்தில் கோவிலுக்கு சென்று, விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற்றிடுங்கள்.

ஸ்ரீ சித்திவிநாயக் கணபதி மந்திர், மும்பை

ஸ்ரீ சித்திவிநாயக் கணபதி மந்திர், மும்பை

மும்பையில் அமைந்துள்ள இந்த சித்திவிநாயக் கணபதி மந்திர் இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான விநாயகர் கோவிலாகும். 1801 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பழமையான கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் வந்து செல்வார்கள்.அதே போல் இந்த கோவில் சார்பாக வைக்கப்படும் விநாயகர் சிலையும் நாடெங்கிலும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை விட தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பொருட்செலவில் வைக்கப்படுமாம்.

காணிபாக்கம் விநாயகர் கோவில், சித்தூர்

காணிபாக்கம் விநாயகர் கோவில், சித்தூர்

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருந்து சுமார் 75 கிமீ தொலைவில் இந்த அழகிய கோவில் இந்தியாவின் சிறந்த பழமையான கணபதி கோவில்களில் ஒன்றாகும். நெற்றியில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட விநாயகப் பெருமானை வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணிப்பாக்கம் விநாயகா கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.11ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு சென்றால் பாவங்கள் நீங்கி, பிரச்சினைகள் தீர்ந்து நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோவில், புனே

தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோவில், புனே

ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயில் மகாராஷ்டிராவில் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலுக்குப் பிறகு இரண்டாவது மிகவும் பிரபலமான கோயிலாகும். இங்குள்ள பிரம்மாண்டமான 7.5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கணபதி சிலை விலைமதிப்பற்ற தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இனிப்புகளை விற்ற தக்துஷேத் காட்வே தனது மகனை தொற்றுநோயால் இழந்ததாக நம்பப்படுகிறது. குழந்தையை இழந்த சோகத்துடனும் சோகத்துடனும் இந்த விநாயகர் கோவிலை கட்டினார் என்று கூறப்படுகிறது.

மணக்குள விநாயகர் கோவில், பாண்டிச்சேரி

மணக்குள விநாயகர் கோவில், பாண்டிச்சேரி

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரஞ்சு ஆட்சியின் கீழ் இந்த கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள விநாயகர் சிலை பல முறை கடலில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது, ஆனால் அது ஒவ்வொரு நாளும் அதே இடத்தில் மீண்டும் தோன்றி, வழிபாட்டாளர்களிடையே பிரபலமானது.இன்றுவரை, இந்த சிலை பிரெஞ்சு காலனியின் மையத்தில் அதே இடத்தில் உள்ளது. புதுச்சேரியின் மணக்குளாரை தரிசிப்பவர்களுக்கு வேண்டும் என்கிற வரமெல்லாம் கிடைக்கும். நீங்களும் விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே விஜயம் செய்திடுங்கள்.

தொட்டா கணபதி கோயில், பெங்களூரு

தொட்டா கணபதி கோயில், பெங்களூரு

பெங்களூரு பசவனகுடியில் உள்ள காளை கோயில் சாலையில் புகழ்பெற்ற தொட்ட விநாயகர் கோயில் உள்ளது. தொட்டா கணபதி கோயில் சிலை 18 அடி உயரமும் 16 அடி அகலமும் கொண்டது. பெங்களூருவில் அதிக அளவு மக்கள் சென்று வரும் கோவில்களில் இதுவும் ஒன்று.இந்தக்கோவில் விநாயகர் சதுர்த்தி அன்று விழாக்கோலம் பூணும், ஆகவே நீங்கள் அங்கு இருந்தால் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.

மோதி துங்ரி கணேஷ் கோயில், ஜெய்ப்பூர்

மோதி துங்ரி கணேஷ் கோயில், ஜெய்ப்பூர்

250 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மோதி துங்ரி கோவில் கோட்டைகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இது ஜெய்ப்பூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும்.இங்குள்ள மூலவர் சிலை சிலை சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. ஸ்காட்டிஷ் கட்டிடக்கலையை உங்களுக்கு நினைவூட்டும் வகையில் சுண்ணாம்பு மற்றும் பளிங்கினால் உருவாக்கப்பட்ட இக்கோவில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. விநாயக சதுர்த்தி பெருவிழா இக்கோயிலில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மதுர் மகாகணபதி கோவில், கேரளா

மதுர் மகாகணபதி கோவில், கேரளா

10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்தக் கோயில், கேரள மாநிலம் காசர்கோடில் மதுவாஹினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.கட்டிடக்கலை அழகு மற்றும் வரலாற்று அமைப்புக்கு பெயர் பெற்ற இந்த அழகிய மதுர் மகாகணபதி கோயில் கும்ப்ளாவின் மைபாடி ராஜாக்களால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் முதன்மைக் கடவுள் சிவன், இருப்பினும், விநாயகர் சிலையின் தனித்துவம், இந்த கோவிலை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக்குகிறது. இதனாலையே இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர் என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

கணேஷ் டோக் கோயில், காங்டாக்

கணேஷ் டோக் கோயில், காங்டாக்

காங்டாக்கில் உள்ள காஞ்சன்ஜங்கா மலைகளின் கண்கவர் காட்சிகளைக் வழங்கக்கூடிய இந்த அழகிய கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் இங்கு ஆண்டு தோறும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் காஞ்சன்ஜங்கா மலைகளின் இயற்கை காட்சிகள் இந்த கோயிலில் இருந்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

ரன்தம்பூர் விநாயகர் கோயில், ராஜஸ்தான்

ரன்தம்பூர் விநாயகர் கோயில், ராஜஸ்தான்

இந்தியாவின் மிகப் பழமையான விநாயகர் கோயில் என்று சொல்லப்படும் இந்த ரன்தம்பூர் விநாயகர் கோயிலில் கிருஷ்ணரும் அவரது மனைவி ருக்மணியும் தங்கள் திருமணத்தின் போது இங்கு ஆசி பெற்றதாக நம்பப்படுகிறது.அதனாலேயே இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான திருமண அழைப்பிதழ்கள் வந்து சேருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தியின் போது நடைபெறும் விநாயக மேளாவின் போது சுமார் ஒரு மில்லியன் மக்கள் 3-4 நாட்களில் தரிசனம் செய்கின்றனர்கள்.

கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு

கற்பக விநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு

சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு விநாயகப் பெருமான் ஆறடி உயர சிலையில் ஆடை, அபகரனங்கள், மாலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறார். தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் சிக்கலான வடிவமைப்பிற்காக அறியப்படும் இந்த கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு விநாயகர் சதுர்த்தி மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது.

நீங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று நம் நாட்டில் இந்த கோவில்களுக்கு அருகாமையில் இருந்தால் நிச்சயம் முழு முதற் கடவுளை வணங்கி ஆசி பெற்றிடுங்கள்!

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+