Search
  • Follow NativePlanet
Share
» »அளவற்ற செல்வம் வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் இந்தக் கோவில்களுக்கு செல்ல வேண்டும்!

அளவற்ற செல்வம் வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் இந்தக் கோவில்களுக்கு செல்ல வேண்டும்!

பரபரப்பாக அனைவரும் இவ்வுலகில் ஓடிக் கொண்டிருப்பது சிறிது செல்வத்திற்காக தான்! சுற்றுலா என்றால் மலைப் பிரதேசங்கள், நினைவுச் சின்னங்கள், பிரபலமான இடங்களுக்கு செல்வது மட்டுமே இல்லை. மனதிற்கும் உயிருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆன்மீக சுற்றுலாவிற்கும் செல்லலாம்.

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். மகாலட்சுமி தேவியை வழிபட்டால் வாழ்வில் சகல செல்வமும் கிடைக்கும், சுபிட்சங்கள் நிறையும், வளங்கள் அனைத்தும் செழிக்கும். அன்னையை மனமுருகி வேண்டினால், அவர் நம்மை பதிலுக்கு நேசித்து வேண்டுவன அனைத்தும் வழங்கி நம்மை மகிழ்விப்பார்.

List of famous Lakshmi temples in Tamil Nadu

ஆம்! இதை விட வேறு என்ன வேண்டும், அன்னையின் அன்பு கிடைத்துவிட்டால் அனைத்துமே இவ்வுலகில் சாத்தியம் இல்லையா? தமிழ்நாட்டில் உள்ள லட்சுமி தேவியின் கோவில்களுக்கு சென்று வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்வில் ஒரு திருப்பம் வரும்.

நீங்கள் தரிசிக்க வேண்டிய லட்சுமி கோயில்கள்

தமிழ்நாடு அற்புதமான கோயில்களால் நிரம்பிய ஒரு வியக்கத்தக்க மாநிலமாகும். சிவன், விஷ்ணு, முருகர், பிள்ளையார், அம்மன் என அனைத்து தெய்வங்களுக்கும் பல பிரசித்திப் பெற்ற கோயில்கள் உண்டு. அதே போல, மகாலட்சுமி அன்னைக்கும் தமிழ்நாட்டில் பல கோயில்கள் உண்டு.

1. ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில், வேலூர்

வேலூரில் உள்ள திருமலைக்கொடியில் அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் மகாலட்சுமி தாயாருக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முழுவதும் தங்கத்தால் ஆன இக்கோயில், ஒரு அழகிய சோலைக்குள் அமைந்து இருக்கிறது. வாழ்வில் ஒரு திருப்பம் வர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணியை வழிபட்டு அன்னையின் ஆசீர்வாதத்தை பெறலாம். முழுவதும் தங்கத்தால் ஆன இக்கோவில் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

2. மகாலட்சுமி அம்மன் கோயில், கரூர்

விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரால் காவிரி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கரூர் மாவட்டத்தின் கிருஷ்ணராயபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு வந்து சென்றால் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணத்தடை நீங்குவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

3. அஷ்டலட்சுமி கோயில், சென்னை

பெசன்ட் நகர் கடற்கரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் இந்த அழகிய அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது. செல்வம் மற்றும் அறிவின் தெய்வமான அஷ்டலக்ஷ்மி இங்கு வசிக்கிறாள், மேலும் கோயிலுக்குச் செல்லும் அனைவருக்கும் தூய்மையான ஆன்மாவுடன் பிரார்த்தனை செய்ய ஆசீர்வதிக்கிறாள்.

4. சுந்தர மகாலட்சுமி கோயில், காஞ்சிபுரம்

செங்கல்பட்டில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள படாலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சுந்தர மகாலட்சுமி கோவில், லட்சுமி தேவியின் அனைத்து 64 வடிவங்களுக்கும் தாயாக இருப்பதாகவும், ஒவ்வொரு வடிவமும் செல்வம், நல்வாழ்வு மற்றும் பொக்கிஷங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படுகிறது.

5. லட்சுமி குபேரர் கோயில், ரத்தினமங்கலம்

சென்னை வண்டலூரின் ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் நீங்கள் லட்சுமி தேவியையும், குபேர பெருமானையும் ஒரு சேர தரிசிக்கலாம். லட்சுமி தேவி வாரி வழங்கும் செல்வத்தை, குபேரர் முன்னின்று காத்து அருள் புரிவாராம். இங்கே வந்து லட்சுமி குபேரருக்கு பூஜை செய்வது இழந்த செல்வதையும் மீட்டு தருகிறது. திருப்பதி செல்வதற்கு முன் இங்கே வந்து செல்வது, பலனை இரட்டிப்பாக்கும் என்று பலர் கூறுகின்றனர்.

6. மகாலட்சுமி கோயில், திருவள்ளூர்

திருவள்ளூரின் கண்டிகையில் அமைந்துள்ள இந்த மகாலட்சுமி கோயில் மிகவும் பிரபலமான ஒரு கோயிலாகும். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மனமுருகி அன்னையை வேண்டி செல்கின்றனர். நீங்களும் இந்தக் கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

மேலும் திருவாரூர் மாவட்டம் படியனல்லூரில் உள்ள மகாலட்சுமி கோயில், சென்னை தச்சூர் சுயம்பு துர்காலட்சுமி மகாலட்சுமி கோயில், சென்னை மகாலட்சுமி கணபதி கோயில், சென்னை ஸ்ரீ வரசித்தி விநாயகர் மகாலட்சுமி கோயில் ஆகியவற்றிற்கும் நீங்கள் சென்று வரலாம். வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும்.

Read more about: mahalakshmi temples chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X