Search
  • Follow NativePlanet
Share
» »நண்பர்களுடன் சென்னையில் சுற்றிப் பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான இடங்களின் லிஸ்ட்!

நண்பர்களுடன் சென்னையில் சுற்றிப் பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான இடங்களின் லிஸ்ட்!

என்னதான் குடும்பம், குழந்தைகள் மற்றும் சொந்த பந்தத்தினரோடு சுற்றுலா சென்றாலும், நண்பர்களுடன் டூர் போவதற்கு அது ஈடாகாது தானே! எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாம் நாமாக இருப்பது நம்முடைய நண்பர்களுடன் தான்! யாரிடமும் பகிரந்து கொள்ளாத விஷயங்களை நாம் நம் மனதிற்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறுகிறோம். நண்பர்கள் என்றாலே ஒரு வித மகிழ்ச்சி தான், இல்லையா?

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க ஏராளமான சாய்ஸ் உள்ளன. இந்த வார இறுதியை உங்கள் பிரண்ட்ஸ் உடன் அட்டகாசமாக கொண்டாட இதோ உங்களுக்கான டிப்ஸ்!

 சென்னையின் மால்கள் மற்றும் சினிமா அரங்குகள்

சென்னையின் மால்கள் மற்றும் சினிமா அரங்குகள்

ஒரே இடத்தில் அற்புதமான உணவகங்கள், பிராண்டட் ஷோரூம்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தையும் பெறக்கூடிய 'ஆல் இன் ஒன்' விருப்பத்தை தான் மால்கள் நமக்கு வழங்குகின்றன. அதிலும் சென்னையில் ஏகப்பட்ட பிரமாண்டமான மால்களும், சினிமா அரங்கங்களும் உள்ளன.

காலையில் நண்பர்களுடன் சென்றால், சினிமா, ஷாப்பிங், கேளிக்கை, உணவு என எல்லாவற்றிலும் குதுகலித்துவிட்டு இரவு தான் வெளியே வர முடியும். அந்த அளவிற்கு சென்னையில் சாய்ஸ் உண்டு.

இந்தியாவின் மூன்றாவது பெரிய பொழுதுபோக்கு வளாகமான வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மால், எக்ஸ்பிரஸ் அவென்யு, விஆர் மால், மரினா மால், ஃபோரம் மால்,காற்றோட்டமான ஓபன் டிரைவ் - இன் தியேட்டரான பிரார்த்தனா, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சினிமா பார்க் ஆன மாயாஜால் சினிமாஸ் ஆகியவை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

வண்ணமயமான கடற்கரைகள்

வண்ணமயமான கடற்கரைகள்

சென்னை இயற்கையான கண்கவர் காட்சிகளை வழங்கும் ஏராளமான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. குதிரை சவாரி, காத்தாடி விடுவது, பல வகை சுவையான உணவுகளை ருசிப்பது என பல அமசங்களைக் கொண்ட ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையான மரினா பீச், நவநாகரீக உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் நிறைந்த சுத்தமான கடற்கரையான எலியட்ஸ் பீச், நீச்சல் மற்றும் சர்ஃபிங்கிற்கு ஏற்ற கோவளம் கடற்கரை ஆகியவை உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

அட்டகாசமான ஷாப்பிங்

அட்டகாசமான ஷாப்பிங்

கடற்கரைகள், கோவில்கள், பார்க், சினிமா என்று செல்வதை காட்டிலும் சில பேருக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும். சென்னையில் அதற்கும் இடமுண்டு! ஆம், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் பல ஷாப்பிங் அவென்யூக்கள் சென்னையில் உள்ளன.

புதுவிதமான குர்திகள், ஷர்ட்ஸ், பேன்ட்ஸ், அணிகலன்கள், ஷூ, செருப்புகள், மொபைல் கேஸ், ஹேன்ட் பேக்ஸ், புடவைகள் என எல்லாவற்றையும் நாம் வாங்கி மகிழலலாம். இவை அனைத்தும் நாம் அசரக்கூடிய அளவிற்கு மலிவு விலையில் கிடைக்கின்றன.

பாண்டி பஜார், சவுகார்பேட்டை மார்கெட், ரிச்சி ஸ்ட்ரீட், தி.நகர், ஜார்ஜ்டவுன், பர்மா பஜார், காட்டன் ஸ்ட்ரீட், பனகல் பார்க், பாரிஸ் கார்னர் ஆகியவை நீங்கள் ஷாப்பிங்கிற்காக செல்ல வேண்டிய இடங்களாகும்.

சென்னையில் இரவு வாழ்க்கை

சென்னையில் இரவு வாழ்க்கை

விருந்து, கேளிக்கை மற்றும் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் சூழ்நிலைகள் தலைநகரான சென்னையில் நிறைய உள்ளன என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்! அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்வது யாருக்குத் தான் பிடிக்காது. சென்னையில் இரவு நேர வாழ்க்கை மிகவும் துடிப்பானது, வண்ணமயமானது.

சென்னையில் பிரதான நிலப்பரப்பில் உள்ள ஒரு ஆடம்பரமான பிரிட்டிஷ் பப் ஆன 10 டவுனிங் ஸ்ட்ரீட், நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபலமான பாஷா, எப்போதுமே களைக்கட்டி இருக்கும் கேட்ஸ்பை 2000, பார்க் ஹயாட் இல் உள்ள தி ஃபிளையிங் எலிஃபென்ட், பார்க், பிளேன்ட், பே 146 ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று வார இறுதியை தரமாக கொண்டாடுங்கள்.

சென்னையில் உள்ள உயிரியல் பூங்காக்கள்

சென்னையில் உள்ள உயிரியல் பூங்காக்கள்

நெரிசலான நகரத்திலிருந்து விலகி உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவதில் உயிரியல் பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அமைதியான சூழல், வனவிலங்குகள் என இயற்கையின் சாம்ராஜ்யத்தில் அந்த நாளை சிறப்பாக அனுபவிக்க முடியும். அவற்றில் வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை ஸ்நேக் பார்க், கிண்டி தேசியப் பூங்கா, க்ரோக்கடைல் பார்க், புலிகட் லேக், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், இவை யாவும் சென்னைக்கு மிக அருகில் தான் அமைந்துள்ளன.

 சென்னையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள்

சென்னையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள்

கேளிக்கை பூங்கா என்ற பெயரைப் போலவே, இவை ஒரு பெரிய வளாகத்தில் அற்புதமான சவாரிகள், நீர் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்ட மெகா கேளிக்கை மையங்களாக திகழ்கின்றன. எல்லாவற்றையும் மறந்து சாகச உணர்வில் திளைத்து நண்பர்களுடன் ஆனந்தாமாக இருக்க இப்பூங்காக்கள் ஒரு இனிய வாய்ப்பை வழங்குகின்றன.

எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்ட், குயின்ஸ்லாந்து, விஜிபி யுனிவர்சல் கிங்டம், விஜிபி ஸ்னோ கிங்டம், கிஷ்கிந்தா தீம் பார்க், வைல்ட் ட்ரைப் ராஞ்ச், டாஷ்-என்-ஸ்பிளாஸ் ஆகியவை முற்றிலும் உங்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகவே, வார இறுதியை நண்பர்களுடன் மேலே குறிப்பிட்ட இடங்களில் ஏதோ ஒன்றிக்கு சென்று குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்!

Read more about: chennai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X