Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டிற்குள் இத்தனை அழகான தேனிலவு மலைவாசஸ்தலங்கள் இருக்கா – ஊட்டி, கொடைக்கனாலே வேண்டாம் போல!

தமிழ்நாட்டிற்குள் இத்தனை அழகான தேனிலவு மலைவாசஸ்தலங்கள் இருக்கா – ஊட்டி, கொடைக்கனாலே வேண்டாம் போல!

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குள் ஒரு தேனிலவு சுற்றுலா செல்ல வேண்டும், அல்லது நீண்ட காலமாக மனைவியுடன் ஒரு குட்டி ட்ரிப் போக வேண்டும் என்று ப்ளான் போட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? தமிழ்நாட்டின் இந்த பட்ஜெட் பிரண்ட்லி இடங்களுக்கு சென்று வாருங்கள்! தமிழ்நாட்டில் மிகவும் அருமையான குளிர் பிரதேசங்கள் நிறைய உள்ளன. இவற்றை விட்டுவிட்டு வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் தான் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லையே! இந்தப் பதிவை படித்து பாருங்கள்! உங்களுக்கே புரியும்!

பன்றிமலை

திண்டுக்கல்லின் பழனிமலை தொடரில் அமைந்துள்ள பன்றிமலை அதன் இதமான வானிலைக்காகவும், அழகிய வியூபாயின்ட்களுக்காகவும் மினி கொடைக்கானல் என்றழைக்கப்படுகிறது. திண்டுக்கல் மெயினில் இருந்து 50 கிமீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் அமைந்துள்ள பன்றிமலை பல நீர்வீழ்ச்சிகள், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும், வியூபாயின்ட்களையும் கொண்டுள்ளது. இந்த இடத்தில் டிரெக்கிங் செய்வது கேம்பிங் செய்வது மிகவும் அருமையான அனுபவத்தை கொடுக்கும். கூட்டம் இல்லாத ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இடம் தன் பெஸ்ட் சாய்ஸ்.

coonoor

குன்னூர்

ஊட்டிக்கு மிக அருகில் அமைந்துள்ள குன்னூர் நீங்கள் சந்திக்கப்போகும் மிக அழகான மற்றும் அமைதியான மலைவாசஸ்தலமாகும். மக்கள்தொகை குறைவாக இருப்பதால், மற்ற மலைவாசஸ்தலங்களில் இல்லாத அமைதியான மற்றும் நிம்மதியான சூழலை இது வழங்குகிறது. தனிமையை விரும்பும் தம்பதிகளுக்கு குன்னூர் தான் சரியான் சாய்ஸ். சிம்ஸ் பார்க், கேத்தரின் நீர்வீழ்ச்சி, ட்ரூக் கோட்டை, மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு, நீலகிரி மலைகள், லேடி கன்னிங்ஸ் சீட், லாம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ், தாவரவியல் பூங்கா ஆகியவை இங்கே நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

மாஞ்சோலை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை! களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் மேல் கோதையாருக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3500 அடி உயரத்தில் இந்த அழகிய சிறு கிராமம் அமைந்துள்ளது! தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாறா மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு நீங்கள் சென்று வாருங்களேன், உங்களது தேனிலவு நிச்சயம் மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவத்தைக் கொடுக்கும். டார்சன் குளம், காக்காச்சியில் உள்ள மினி கோல்ப் மைதானம், காக்காச்சி ஏரி, குதிரைவெட்டி, குட்டியார் அணை, மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், மணிமுத்தாறு அருவி, மேல் கோதையார் அணை ஆகியவை மாஞ்சோலை பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்கள் ஆகும்.

meghamalai

மேகமலை

இது ஒரு தேயிலை தோட்டமாக இருந்தாலும், இந்த இடத்திற்குச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதால் பலர் இதை ஒரு சுற்றுலாத் தலமாகக் கருதுகின்றனர். இந்த பகுதிக்கு செல்ல ஒருவர் 17 ஹேர்பின் வளைவுகள் வழியாக செல்ல வேண்டும். அணைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் காட்சி புள்ளிகள் தவிர, இந்த மலைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு பிரபலமானவை.

ஏலகிரி

ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி நகரங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் ஏலகிரி தமிழ்நாட்டின் ஒரு ஆஃப்பீட் மலைவாசஸ்தலம் ஆகும். பூங்காக்கள், கோவில்கள், ஏரிகள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றிருந்தாலும், ஏலகிரியின் முக்கிய சுற்றுலா அம்சம் சுவாமிமலை மலையாகும். ஏலகிரியில் ஃபண்டேரா பார்க், கிளவுட் ஃபாரஸ்ட் என்டர்டெயின்மென்ட் பார்க் போன்ற பல சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால், தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிப்புற சாகச முகாமில் பதிவு செய்யலாம். ஜிப் லைன்கள், பாராகிளைடிங், ட்ரெக்கிங் போன்ற செயல்பாடுகள் தங்கள் அட்ரினலின் பம்ப் செய்ய விரும்புவோருக்கு வழங்கப்படுகின்றன.

anaimalaihills1

ஆனைமலை

தமிழ்நாட்டு மலைகள் பட்டியலில் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு இடம் ஆனைமலை மலைகள். புலிகள் காப்பகத்திற்கு பிரபலமானது, இந்த மலைகளில் வசிப்பவர்களில் சிறுத்தை, காட்டுத் துளை, புள்ளிமான், மயில், யானைகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கவால் மக்காக்கள் ஆகியவை அடங்கும். வனவிலங்குகளைத் தவிர, இந்த மலைகள் தேக்கு, யூகலிப்டஸ் மற்றும் பைன் மரங்களின் பரந்த தோட்டங்களை வைத்திருப்பதாகவும் அறியப்படுகிறது. வனவிலங்குகளை நேசிக்கும் மக்களுக்கு இது சரியான விடுமுறையாக அமையும்.

கொல்லி மலை

வாகனம் ஓட்டுவது உங்கள் விருப்பமாக இருந்தால், இது உங்களுக்கான ஒரு அருமையான இலக்காக இருக்கும். ஏராளமான மற்றும் சவாலான 70 ஹேர்பின் வளைவுகளைக் கடப்பது என்பது உண்மையிலே உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கும். மூலிகை மற்றும் மருத்துவப் பண்ணைகளுக்கு பெயர் பெற்ற கொல்லிமலை தமிழ்நாட்டின் குளிர்ச்சியான இடங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. கொல்லிமலையில் ஏகப்பட்ட இயற்கை அதிசயங்கள் ஒளிந்து இருக்கின்றன. நீர்வீழ்ச்சி தொடங்கி பள்ளத்தாக்கு, பசுமையான தோட்டம் வரை அனைத்துமே இங்கு இருக்கிறது.

valparai1

வால்பாறை

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வால்பாறை, ஆனைமலை மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் அமைதியான மலைவாசஸ்தலமாகும். விஸ்பரிங் நீர்வீழ்ச்சி, சோலையார் அணை, சின்னக்கல்லார், பாலாஜி கோயில், காரமலை அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், குரங்கு அருவி, தொட்டபுர வியூ பாயின்ட், நாலாமுடி பூஞ்சோலை, நீரார் அணை, டாடா காபி எஸ்டேட் ஆகியவை நீங்கள் இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும். மூடுபனி வானிலையால் சூழப்பட்ட அழகான மலைப்பாங்கான சாலைகளில் மனதிற்கு பிடித்தவருடன் நடந்து சென்று பாருங்களேன். அலாதியாக இருக்கும்!

More News

Read more about: travel tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+