Search
  • Follow NativePlanet
Share
» » 2023 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட இந்தியாவில் உள்ள இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

2023 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட இந்தியாவில் உள்ள இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

டிசம்பர் பிறந்துவிட்டது, கிறிஸ்துமஸ் மணிகளின் ஓசையும் புத்தாண்டின் கொண்டாட்டமும் களைகட்ட தொடங்கும் நேரமிது. இந்த 2023 ஆம் புத்தாண்டை உங்கள் அன்பிற்குரியவர்கள், நண்பர்களுடன் வரவேற்க ஆசையாக உள்ளதா. இப்பொழுதே திட்டமிடுங்கள்! இந்தியாவின் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். பு திய நம்பிக்கைகள், இலக்குகள், தீர்மானங்கள் மற்றும் உணர்வுகளுடன் இந்த புத்தாண்டை ஒரு புதிய இடத்தில் கொண்டாடுங்கள். இதோ உங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்ட ஐடியாஸ்!

கோவா

கோவா

அமெரிக்காவிற்கு ஒரு லாஸ் வேகாஸ் போல இந்தியாவில் பார்ட்டிகள், கேளிக்கைகள், நடனங்கள், கேசினோக்கள் என மேற்கத்திய சாராம்சங்கள் நிறைந்து ஒரு உற்சாகமான நகரமாக ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்கிறது கோவா. இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் முதன்மையான இடம் பிடித்திருப்பது கோவா தான். அற்புதமான கடற்கரைகள், அதிக உற்சாகத்துடன் கூடிய சுற்றுலாப் பயணிகளின் கூட்டம், இனிமையான வானிலை மற்றும் தனித்துவமான கலாச்சாரம் ஆகியவை புத்தாண்டை வரவேற்க கோவா சரியான தேர்வு என்பதை உணர வைக்கிறது.

பெங்களூர்

பெங்களூர்

நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூருவில் வரவிருக்கும் புத்தாண்டை அனுபவிக்க தயாராகுங்கள். இனிமையான வானிலை மற்றும் உற்சாகமான சூழலுடன், புத்தாண்டைக் கொண்டாட இந்தியாவின் சிறந்த இடங்களில் பெங்களூரு திகழ்கிறது. பசுமையான பூங்காக்கள், பப்கள், கஃபேக்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் ஆடம்பரமான பார்ட்டிகள் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் உங்கள் கொண்டாட்ட மனநிலையை பற்றவைக்க பெங்களூரில் நிறைய சாய்ஸ்கள் உள்ளன.

புதுச்சேரி

புதுச்சேரி

கடற்கரை, பிரெஞ்சு காலனி, அமைதியான ஆசிரமங்கள், கஃபேக்கள், துடிப்பான கலாச்சாரம் என புதுச்சேரி ஒரு கம்மி பட்ஜெட் கோவா போல மின்னுகிறது. புதுச்சேரியில் ஆண்டுக்கு ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் மெருகேறிக் கொண்டே போகின்றன. ரிசார்ட்டுகள் மற்றும் பப்கள் முதல் கடற்கரைகள் மற்றும் கிளப்புகள் வரை பலவிதமான விருந்துகள் உள்ளன. பாண்டிச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான சில அற்புதமான வழிகள் போர்ட் பீச் பார்ட்டி, பீச் பாஷ் NYE மற்றும் கேடமரன் பீச் ஃபெஸ்டிவல் ஆகும்.

சென்னை

சென்னை

வரவிருக்கும் 2023 புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க சென்னையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அற்புதமான ஹோட்டல்கள், பார்கள், பப்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் ஆகியவை சென்னையில் சிறந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை உறதி செய்கின்றன. சென்னையில் உள்ள இந்த சிறந்த பார்ட்டி ஸ்பாட்களில் லைவ் மியூசிக், வரம்பற்ற உணவு மற்றும் பானங்களுடன் புத்தாண்டைத் தழுவிக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் சென்னை இ.சி.ஆர் சாலை, தீவுத்திடல், மரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை போன்ற இடங்களிலும் புத்தாண்டு களைகட்டும்.

மும்பை

மும்பை

இந்தியாவின் தூங்கா நகரம் என்றழைக்கப்படும் மும்பை மாநகரம், சிறந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை வழங்குகிறது. நீங்கள் இரவு முழுவதும் பார்ட்டி செய்ய விரும்பினால், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நீங்கள் மும்பைக்கு செல்ல வேண்டும். அது ஒரு ஹோட்டல் பார்ட்டியாக இருந்தாலும் அல்லது கடற்கரை கூட்டமாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். நகரம் முழுவதும் துடிப்பானதாகவும், இரவில் பட்டாசுகளாலும் வண்ண விளக்குகளாலும் ஒளிரும். கடற்கரைகள், இரவு வாழ்க்கை, சிறந்த உணவு, ஷாப்பிங் என உங்கள் புத்தாண்டு நிச்சயம் கோலாகலமாக இருக்கும்.

காஷ்மீர்

காஷ்மீர்

என்ன தான் பார்ட்டி, நடனம், கேளிக்கை என பெரும்பாலான மக்கள் புத்தாண்டை வரவேற்க பெருநகரங்களுக்கு பறந்தாலும், எப்பொழுதும் அந்த நகரங்களில் உலாவி கொண்டிருக்கும் நபர்கள் ஒரு அமைதியான சூழலை கொண்டாட்டத்திற்கு தேர்வு செய்வார்கள். அதுவும் பனி மலைகளுக்கு நடுவே, கடும் குளிரில், கம்பளி உடைகள் அணிந்து, கேம்ப்ஃபயரில் நடனமாடி உற்சாகமாக இயற்கையின் மடியில் புத்தாண்டை வரவேற்கலாம். காஷ்மீரின் குல்மார்க், சோன்மார்க், லடாக், பாட்னிடோப் மற்றும் லே போன்ற பகுதிகளுக்கு நீங்கள் செல்லலாம்.

டெல்லி

டெல்லி

தேசத்தின் இதயமான டெல்லியில் சிறந்த புத்துணர்வு, மெல்லிசை, விளக்குகள், நடனம் மற்றும் பலவற்றை அனுபவித்து புத்தாண்டை வரவேற்க பல சாய்ஸ்கள் உள்ளன. இந்தியாவின் தலைநகரில் பல இரவு விடுதிகள் மற்றும் உயரடுக்கு புத்தாண்டு விருந்துகள் உள்ளன, அங்கு நீங்கள் சிறப்பு மற்றும் மறக்கமுடியாத வகையில் புத்தாண்டை அனுபவிக்க முடியும். பிரபலங்களுக்குச் சொந்தமான கிளப்களில் நாட்டின் சிறந்த டிஜேக்கள் இசைக்கும் பாடல்களுக்கு நீங்கள் நடனமாடலாம்.

கொல்கத்தா

கொல்கத்தா

இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க நகரங்களில் ஒன்றான கொல்கத்தா புத்தாண்டை மிகுந்த உற்சாகமாக கொண்டாடுகிறது. சிட்டி ஆஃப் ஜாய் என்றழைக்கப்படும் கொல்கத்தா நகரம் முழுவதிலும் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் பாலங்கள் உட்பட முழு நகரமும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். பல்வேறு கிளப்களில் DJக்கள், பிரபல விருந்தினர்கள், நடனம் மற்றும் உதட்டைப் பிழியும் பஃபே ஆகியவற்றுடன் பல புத்தாண்டு விருந்துகள் இங்கு களைகட்டும்.

மணாலி

மணாலி

'கடவுளின் பள்ளத்தாக்கு' என்றழைக்கப்படும் மணாலி ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. ஆனால் புத்தாண்டின் போது, மணாலி பார்க்கத் தகுந்தது. உங்கள் புத்தாண்டைத் தொடங்க இந்த நகரம் ஒரு அழகான இடம் ஆகும். மணாலியின் பிரபலமான இடங்களில் குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் நடனமாடலாம். உறைபனி சூழலில் நடனமாடி புத்தாண்டை வரவேற்பது மிகவும் உற்சாகமாக இருக்கும் தானே!

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் புத்தாண்டைக் கொண்டாட பல்வேறு பார்கள், நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் அற்புதமான இசையுடன் கூடிய பப்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் பல இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். புத்தாண்டின் போது நிஜாம் நகரம் ஒரு முழுமையான பார்ட்டி மையமாக மாறுகிறது, மேலும் நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துகளைத் தேடிக்கொண்டிருந்தால் இது உங்களுக்கு சரியான சாய்ஸ் ஆகும்.

என்ன தான் நாம் மிகவும் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த நாடாக இருந்தாலும், புத்தாண்டு கொண்டாட்டம் என்று வரும் போது இந்தியாவின் பல பகுதிகள் மேலை நாடுகளை தோற்கடிக்கும் வகையில் மின்னுகின்றன. இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கேற்க இப்போதே திட்டமிடுங்கள்!

More News

    Read more about: new year 2023 chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+