Search
  • Follow NativePlanet
Share
» »2023 இல் தமிழ் பண்டிகைகளும் செல்ல வேண்டிய முக்கிய கோவில்களும்!

2023 இல் தமிழ் பண்டிகைகளும் செல்ல வேண்டிய முக்கிய கோவில்களும்!

புதிய வருடம் பிறந்து பத்து தினங்கள் முடிந்து விட்டது, இந்த வருடத்தில் தமிழ் நாட்காட்டியில் உள்ள தமிழ் மற்றும் இந்துக்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? மாதந்தோறும் நம் தமிழ் நாட்காட்டியில் ஏதோ ஒரு விசேஷம் வந்து கொண்டே தான் இருக்கும், தமிழ் மற்றும் இந்துக்கள் பண்டிகைகளுக்கு சற்றுமே பஞ்சம் இல்லை. இந்த வருடத்தின் முக்கிய பண்டிகைகள் மற்றும் அந்தந்த விசேஷ நாட்களில் நாம் செல்ல வேண்டிய கோவில்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக!

2023 இல் தமிழ் பண்டிகைகள்

ஜனவரி மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

ஜனவரி 11 கெர்போட்ட நிவர்த்தி - ரத்தினமங்கலம் அரைக்காசு அம்மன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்

ஜனவரி 14 போகிப் பண்டிகை - குல தெய்வ கோவில்கள்

ஜனவரி 15 தைப் பொங்கல்/ மகர ஜோதி - திருவிடைமருதூர் சூரியனார் கோவில் மற்றும் ஐயப்பன் கோவில்கள்

ஜனவரி 16 மாட்டுப் பொங்கல் - சிவன் மற்றும் பெருமாள் ஆலயங்கள்

ஜனவரி 17 உழவர் திருநாள்/ காணும் பொங்கல் - ஏதேனும் தமிழ் கடவுளின் சன்னதிகள்

ஜனவரி 21 தை அமாவாசை - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, திருபுவனம் புவனநாத சுவாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம், தேவிபட்டினம் மகிசாசுரமர்தினி ஆலயம்

பிப்ரவரி மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

பிப்ரவரி 05 தைப்பூசம் - பழனி முருகர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், வடலூர் வள்ளலார் கோவில்

பிப்ரவரி 18 மஹா சிவராத்திரி - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், திருவாலங்காடு சிவன் கோவில் மற்றும் ஏனைய சிவன் கோவில்கள்

மார்ச் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

மார்ச் 06 மாசி மகம் - மாசி மகம் தீர்த்தவாரி நடைபெறும் அனைத்து தமிழக மற்றும் புதுவை கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகள்

மார்ச் 30 ராம நவமி - ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில், திருவெள்ளியங்குடி கோலவிழி ராமர் கோவில்

ஏப்ரல் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

ஏப்ரல் 05 பங்குனி உத்திரம் - ஏனைய சிவன், முருகன், பெருமாள் மற்றும் அம்மன் கோவில்கள்

ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், புதுவை மணக்குள விநாயகர் கோவில், சென்னை கபாலீஸ்வரர் கோவில்

ஏப்ரல் 23 அட்சய திரிதியை - ஸ்ரீ அபிவ்ருத்தி நாயகி சமேத ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர் ஆலயம், விளாங்குளம்

மே மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

மே 02 மீனாட்சி திருக்கல்யாணம் - மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

மே 05 சித்ரா பௌர்ணமி - அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் ஆலயம், திருவக்கரை வக்ர காளியம்மன் கோவில், மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில்

ஜூன் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

ஜூன் 02 வைகாசி விசாகம் - பழனி முருகன் கோவில், சுவாமி மலை முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவில்கள்

ஜூலை மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

ஜூலை 22 ஆடிப்பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில்

ஜூலை 28 ஆடி அமாவாசை - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில், ஏனைய அம்மன் மற்றும் காளி கோவில்கள்

ஆகஸ்ட் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

ஆகஸ்ட் 03 ஆடிப்பெருக்கு - காவிரி நதிக்கரை கோவில்கள்

ஆகஸ்ட் 30 ஆவணி அவிட்டம் - சென்னை வரசித்தி விநாயகர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில்

செப்டம்பர் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

செப்டம்பர் 06 கோகுலாஷ்டமி - மன்னார்குடி கிருஷ்ணர் கோவில், சென்னை இஸ்கான் கோவில்

செப்டம்பர் 18 விநாயகர் சதுர்த்தி - பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், திருச்சி உச்சிபிள்ளையார் கோவில் மற்றும் ஏனைய பிள்ளையார் கோவில்கள்

அக்டோபர் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

அக்டோபர் 14 மகாளய அமாவாசை - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருகாஞ்சி கங்கைவராக நதீச்வரர் கோவில்

அக்டோபர் 23 சரஸ்வதி பூஜை - கூடலூர் சரஸ்வதி கோவில், மயூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

நவம்பர் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்ந

வம்பர் 12 தீபாவளி பண்டிகை - அனைத்து கோவில்கள்

நவம்பர் 18 கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம் - திருச்செந்தூர் முருகன் கோவில்

நவம்பர் 26 திருக்கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்

டிசம்பர் மாதத்தின் தமிழ் பண்டிகைகள் மற்றும் செல்ல வேண்டிய கோவில்கள்

டிசம்பர் 23 வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில்

பண்டிகை நாட்களில் நம் வீடுகளில் தெய்வ வழிபாடு செய்துவிட்டு, ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் கூடுதல் நன்மையையும், மன நிம்மதியையும் அடையலாம்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X