Search
  • Follow NativePlanet
Share
» »நாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..!

நாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..!

எத்தனையோ அனுபவங்களை தரும் ரயில் பயணத்தை நாம் மேற்கொண்டிருப்போம். ஆனால், ஒரே பயணத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள் எது தெரியுமா ?

எத்தனையோ மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என மாறுபட்டிருப்பது நம் இந்திய நாடு. பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்ட நம் நாட்டின் அனைத்து மக்களை இணைப்பதிலும், போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ரயில்கள்தான். உலகிலேயே மிக நீண்ட தூர ரயில் கட்டமைப்பு கொண்ட நாடாகவும் இந்தியா முன்னிலை பெறுகிறது. பல மாநிலங்கள், கலாச்சாரங்களை கடந்து மக்களை இணைக்கும் பாலமாகவும், குறைந்த கட்டண போக்குவரத்து சாதனமாகவும் விளங்கி வரும் இந்திய ரயில் சேவையில் நாட்டையே சுத்திக்காட்டும் அந்த எட்டு ரயில்கள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

விவேக் எக்ஸ்பிரஸ்

விவேக் எக்ஸ்பிரஸ்


இந்தியாவின் மிக நீண்ட தூர பிரயாணத்தை மேற்கொள்ளும் ரயில் இதுதான். இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, அசாம் மாநிலத்திலுள்ள திப்ரூகருக்கு செல்கிறது. இரு இடங்களுக்கும் இடையிலான 4,273 கிமீ தூரத்தை 80 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. இடையில் 56 இடங்களில் நின்று செல்கிறது.

Jaaron95

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்


இந்தியாவின் தென்கோடியையும், வடகோடியையும் இணைக்கும் ரயில் என்ற பெருமைக்குரியது ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ். அதுமட்டுமின்றி, நாட்டின் இரண்டாவது மிக நீண்ட தூர ரயிலும் இதுதான். கன்னியாகுமரியிலிருந்து ஜம்முவை இணைக்கிறது. இந்த ரயில் 3,787 கிமீ தூரத்தை 71 மணி 35 நேரத்தில் கடக்கிறது. இடையில் 72 இடங்களில் நின்று செல்கிறது.

Pinakpani

நவ்யுக் எக்ஸ்பிரஸ்

நவ்யுக் எக்ஸ்பிரஸ்


நவ்யுக் எக்ஸ்பிரஸ் கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து காஷ்மீர் வரை பயணிக்கிறது. இந்த ரயில் 3,685 கிமீ தூரத்தை 68 மணி 20 நிமிடத்தில் கடக்கிறது. இடையில் 61 இடங்களில் நின்று செல்கிறது.

KALX999

திருநெல்வேலி- ஜம்மு எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி- ஜம்மு எக்ஸ்பிரஸ்


மிக நீண்ட தூரம் பயணிக்கும் பட்டியலில் திருநெல்வேலியிலிருந்து காஷ்மீர் மாநிலம் கத்ரா வரை செல்லும் இந்த டென் ஜம்மு எக்ஸ்பிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் 3,637 கிமீ தூரத்தை 70 மணி நேரத்தில் கடக்கிறது. இடையில் 70 இடங்களில் நின்று செல்கிறது. புறப்பட்டு நான்காவது நாள் செல்லுமிடத்தை அடைகிறது. தென் தமிழகத்திலிருந்து சென்னை செல்லாமல் நேரடியாக டெல்லி சென்று, அங்கிருந்து காஷ்மீரை அடைகிறது.

Arnabsaha2212

கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

கவுகாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்


கேரள தலைநகர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, கவுகாத்தி செல்லும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயிலாகும். இந்த ரயில் 3,559 கிமீ தூரத்தை 65 மணி நேரத்தில் கடக்கிறது. 49 இடங்களில் நின்று செல்கிறது.

Jubair1985

திப்ரூகர் எக்ஸ்பிரஸ்

திப்ரூகர் எக்ஸ்பிரஸ்


பெங்களூரிலுள்ள யஷ்வந்த்பூரிலிருந்து, அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் ரயில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ். சுமார் 3,547 கிமீ தூரத்தை 68 மணி நேரத்தில் கடந்து அன்றாடம் மக்களுக்கு சேவையாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இது தனது ஒரு பயணத்தின் போது 33 இடங்களில் நின்று செல்கிறது.

UY Scuti

டேராடூன்- கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்

டேராடூன்- கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்


கேரளாவிலிருந்து செல்லும் ரயில்களில் பிரசித்தமானது டேராடூன்- கொச்சுவேலி எக்ஸ்பிரஸ். கேரளாவிலுள்ள கொச்சுவேலி செல்லும் இந்த ரயில் 3,465 கிமீ தூரம் பயணிக்கிறது. இந்த தூரத்தை 61 மணிநேரத்தில் கடக்கிறது. இடையில் 25 இடங்களில் நின்று செல்கிறது.

Adityamadhav83

கவுகாத்தி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்

கவுகாத்தி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்


இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கும் இந்த ரயில் பயணிக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 3,337 கிமீ தூரம் பயணித்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை வந்தடைகிறது. மொத்தமாக 59 மணி 45 நிமிடங்கள் பயணிக்கிறது. 43 நிறுத்தங்களில் நின்று வருகிறது.

Sreejithk2000

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X