Search
  • Follow NativePlanet
Share
» »கடைகோடியில் உள்ள இந்தியாவின் இந்த அழகான கிராமங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கடைகோடியில் உள்ள இந்தியாவின் இந்த அழகான கிராமங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்களும் விவசாயமும் தான்! என்ன தான் அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என நம் நாடு வளர்ச்சி அடைந்தாலும் கிராமங்களுக்கு என நம் மனதில் இருக்கும் ஆசா பாசமும், உறவும் மாறவில்லை. ஒரு போதும் மாறவும் மாறாது அன்பர்களே! என்ன தான் நகரத்திற்குள் நாம் சுற்றி வந்தாலும், மரங்கள், மலைகள், காடுகள், வயல்வெளி நிறைந்த கிராமத்தில் ஒரு நாள் தங்கி இருப்பதற்கு நகர வாழ்க்கை ஈடாகுமா? ஆம்! இந்தப் பதிவில் நாம் இந்தியாவின் கடைகோடியில் உள்ள குறைந்த மக்கள் தொகை கொண்ட அழகான இமயமலை கிராமங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்!

சுஷுல், லே

சுஷுல், லே

சுஷுல் என்பது இந்திய (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) LAC க்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஆகும். கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுடன் பாங்காங் ஏரி மற்றும் ரெசாங் லாவிற்கு அருகில் உள்ளது. சுமார் 4360 மீ உயரத்தில் இது முன்பு லடாக் பகுதியில் உள்ள சாங்தாங் தொகுதியின் முக்கிய கிராமமாக இருந்தது.

LAC இல் அமைதியைப் பேணுவதற்காக முறையான சந்திப்புகளை நடத்துவதற்காக இரு நாடுகளின் எல்லைப் பணியாளர்கள் சந்திக்கும் LAC யில் உள்ள ஐந்து நியமிக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கிராமத்தில் வெறும் 949 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இந்த அழகிய கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள விமான நிலையம் லே குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையம் ஆகும்.

கர்சோக், லே

கர்சோக், லே

கர்சோக் அல்லது கோர்சோக் என்பது இந்தியாவின் லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது நியோமாவுக்கு அருகில், ருப்ஷு பகுதி மற்றும் தொகுதியில், டிசோ மோரிரி ஏரியின் கரையில் அமைந்துள்ளது. இது உலகின் மிக உயரமான நகரங்களில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகும். 4595 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 1291 பேர் வசிக்கின்றனர். லே சாலை வழியாக கர்சோக்கை அடையலாம். லே நகரம் கர்சோக்கிலிருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கர்சோக்கில் அமைந்துள்ள ஒரு மடாலயம் மிகவும் பழமையான மடாலயம் ஆகும்.

மணா, உத்தராகண்ட்

மணா, உத்தராகண்ட்

மனா இந்தியாவின் கடைசி கிராமம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் பத்ரிநாத்திலிருந்து இந்த அமைதியான கிராமத்திற்கு ஏகப்பட்ட யாத்ரீகர்கள் வந்து செல்வதை நீங்கள் காணலாம். இந்த கிராமத்தில் இயற்கை சார்ந்தஇடங்கள், மத வழிபாட்டு இடங்கள், செழிப்பான ஆறுகள் & நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

இந்து நூல்களின்படி, சொர்க்கத்திற்கான பாதை இங்கிருந்து செல்கிறது, பாண்டவர்கள் சொர்க்கத்திற்கான பயணத்தின் போது மனா வழியாக சென்றதாக நம்பப்படுகிறது. 3,200 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 9216 பேர் வசிக்கின்றனர். நீல்கந்த் சிகரம், வசுதரா நீர்வீழ்ச்சி, மாதா மூர்த்தி கோயில், வியாசா குபா, பீம் புல் ஆகியவை இங்குள்ள சுற்றுலாத் தலங்களாகும்.

நிடி, உத்தராகண்ட்

நிடி, உத்தராகண்ட்

நிடி என்பது ஜோஷிமத்தின் நிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். சாமோலி மாவட்டத்தில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லையில் உள்ள கடைசி கிராமம் இதுவாகும். குளிர்காலத்தில், நித்தி கிராமம் மற்றும் பள்ளத்தாக்கு கடுமையான பனியால் மூடப்பட்டிருக்கும். நித்தி கிராம மக்கள் மலைகளில் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இன்றும் பின்பற்றுகின்றனர். இந்த கிராமத்தில் 100 க்கும் குறைவான மக்களே வாழ்கின்றனர்.

மலாரி, உத்தராகண்ட்

மலாரி, உத்தராகண்ட்

மலாரி கிராமம் தௌலி கங்கை பள்ளத்தாக்கின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மூலைகளில் அமைந்துள்ளது, இந்த சிறிய கிராமம் திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ள நந்தா தேவி உயிர்க்கோள காப்பகத்தில் அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். மலாரி கிராமத்தில் போடியா என்று அழைக்கப்படும் இந்தோ-மங்கோலிய பழங்குடியினர் வசித்து வருகின்றனர். 2050மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 2,165 பேர் வசிக்கின்றனர்.

லாச்சென், சிக்கிம்

லாச்சென், சிக்கிம்

வசீகரிக்கும் இயற்கை அழகு, ஆல்பைன் மேய்ச்சல் நிலங்கள், மர வீடுகள் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ள இந்த விசித்திரமான இமயமலை கிராமம். லாச்சென் மடாலயம், பசுமை ஏரி, சோப்தா பள்ளத்தாக்கு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய லாச்செனில் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. காஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா மலையேற்றங்கள் போன்ற பல பிரபலமான மலையேற்ற பாதைகளுக்கான அடிப்படை நிலையம் இந்த கிராமமே ஆகும். 2600மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 1,325 பேர் வசிக்கின்றனர்.

 ஞானதாங், சிக்கிம்

ஞானதாங், சிக்கிம்

க்னாதாங் பள்ளத்தாக்கு "கிழக்கு இந்தியாவின் லடாக்" என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கந்தாங் பள்ளத்தாக்கு, பனி படர்ந்த மலைக் காட்சிகளால் சூழப்பட்ட ஒதுங்கிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு அழகிய இடமாக புகழ்பெற்றது. இது 13,000 அடி உயரத்தில் உள்ள 8,860 பேர் வசிக்கின்றனர். புதிய ஜல்பியாகுரி இரயில் நிலையம், பாக்டோக்ரா விமான நிலையம் ஆகியவை இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள இரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகும்.

ஜெமிதாங், அருணாச்சல பிரதேசம்

ஜெமிதாங், அருணாச்சல பிரதேசம்

நியாம்ஜாங் சூ ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஜெமிதாங் கிராமம் பரந்த தங்க விவசாய நிலங்கள், பரந்த திறந்த பள்ளத்தாக்குகள் மற்றும் கம்பீரமான மலைகளுக்கு பெயர் பெற்றது. 8000 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில் 2,498 பேர் வாழ்கின்றனர். பனி மூடிய சிகரங்களையும், பலவிதமான அரியவகை தாவரங்களையும், விலங்குகளையும், பறவைகளையும் இங்கே நீங்கள் காணலாம். அதே போல இங்கு ட்ரெக்கிங் செய்வதும் மிகவும் பேமஸ் ஆகும்.

தக்சிங், அருணாச்சல பிரதேசம்

தக்சிங், அருணாச்சல பிரதேசம்

சுபன்சிரி ஆற்றின் தென் கரையில் 2,200 அடி உயரத்தில் இந்த தக்சிங் கிராமம் அமைந்துள்ளது. சுபன்சிரி ஆற்றின் தென்கரையில் தக்சிங் வட்டத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 1,295 பேர் வசிக்கின்றனர். இந்த அழகிய கிராமத்தின் மக்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்குகிறார்கள்.

கிபிதூ, அருணாச்சல பிரதேசம்

கிபிதூ, அருணாச்சல பிரதேசம்

கிபித்தூ அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மிகத் தொலைதூர வட்டத் தலைமையகங்களில் ஒன்றாகும். கிபிதூ ஹவாய்க்கு வடகிழக்கே 87 கிமீ தொலைவில், லோஹித் ஆற்றின் வலது கரையில், கடல் மட்டத்திலிருந்து 1305 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+