Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் இணைக்கும் முக்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்லைகள் விரிவாக்கம்!

சென்னையின் இணைக்கும் முக்கிய தேசிய மற்றும் மாநில நெடுஞ்லைகள் விரிவாக்கம்!

தமிழக மாநிலத்தின் கட்டமைப்பும் கட்டுமான திட்டங்களும் வெளி நாடுகளுக்கே சவால் விடும் அளவுக்கு தரத்தை தொட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 24 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. அனைத்து நெடுஞ்சாலைகளின் மொத்த தூரம் 4462 கிமீ ஆகும். தமிழ்நாட்டிற்குள் இயங்கும் பன்னிரண்டு நெடுஞ்சாலைகள், நான்கு கேரளாவுடன், இரண்டு ஆந்திரப் பிரதேசத்துடனும், மூன்று கர்நாடகாவுடனும் மற்றும் மூன்று பல மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இப்பொழுது புதிதாக சில உலகத்தர கட்டுமானங்கள் சென்னையில் அரங்கேற இருக்கின்றன. பொதுமக்கள் அவற்றால் அதீத பலன் பெற உள்ளனர்.

சூரத் - சென்னை எக்ஸ்பிரஸ்வே

1271 கிமீ சூரத் - சென்னை எக்ஸ்பிரஸ்வே NHAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட 6 வழிப்பாதை பகுதி அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும், இது நாசிக், அகமதுநகர், சோலாப்பூர், கலபுர்கி, கர்னூல், கடப்பா மற்றும் திருப்பதி வழியாக குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை இணைக்கிறது. இதற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 45,000 கோடி ஆகும். இதில் 564 கிமீ சூரத் - நாசிக் - அகமதுநகர் - சோலாப்பூர் பொருளாதார வழித்தடத்தின் கீழ் வருகின்றது. 707 கிமீ சோலாப்பூர் - கர்னூல் - சென்னை பொருளாதார வழித்தடத்தின் கீழ் வருகின்றது. இந்த சாலை டிசம்பர் 2025 இல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை

ஏறக்குறைய ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் 22-கிமீ பாடி-திருநின்றவூர் பாதையின் ஆறு வழிச்சாலை விரைவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் மாற்றுவதில், ஒரு சில அரசு நிறுவனங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2010-11ல் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, 2013ல் தின எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது. NHAI அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. நான்கு வழிச்சாலை இன்னும் 18 மாதங்களில் தயாராகிவிடும்" என்றார்.

சென்னை – பெங்களூர் எக்ஸ்ப்ரஸ்வே

சென்னை – பெங்களூர் எக்ஸ்ப்ரஸ்வே

17,000 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் பெங்களூரு to சென்னை வரையிலான விரைவுச் சாலை திட்டம் மார்ச் 2024க் குள் தயாராகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை 285.3 கிமீ தூரம் கொண்ட நான்கு வழிச்சாலை திட்டம் ஆகும். இது முக்கிய நகரங்கள் மற்றும் நெரிசலான பகுதிகள் வழியாக செல்வதில் தாமதத்தைத் தவிர்க்க உதவுவதோடு பயண நேரத்தை பாதியாக குறைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் பயணிகள் 2 மணி நேரத்தில் பெங்களூருவை அடைந்திடலாம்.

சென்னை போர்ட் - மதுரவாயல் விரைவுச்சாலை

சென்னை போர்ட் - மதுரவாயல் விரைவுச்சாலை

சென்னை துறைமுக மதுரவாயல் விரைவுச்சாலை என்பது அருகிலுள்ள பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லைகளை இணைக்கும் புதுமையான மற்றும் உயர்தர உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்த உயர்த்தப்பட்ட கட்டமைப்பு முடிவடைந்தவுடன், நாட்டின் மிக நீளமான வழித்தடமாக இருக்கும். சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்காக இது பிரத்யேக அடுக்குகளைக் கொண்டிருக்கும். இந்த சாலை மதுரவாயல், வானகரம், கோயம்பேடு மற்றும் சூளைமேடு வழியாக சென்னை துறைமுகத்தை வந்தடையும்.

மாநில நெடுஞ்சாலைகள்

மேற்கூறிய யாவும் மத்திய அரசாங்கத்தால் கட்டப்படும் கட்டுமானங்கள் ஆகும். இது தவிர தமிழக அரசாங்கமும் பல விரைவு வழிச் சாலைகளைக் கட்டி கொண்டிருக்கிறது. சென்னை - தடா பிரிவு ஆறு வழிச்சாலை, ஓசூர் - கிருஷ்ணகிரி பிரிவு ஆறு வழிச்சாலை, கிருஷ்ணகிரி - வாலாஜாபேட்டை பிரிவு ஆறு வழிச்சாலை, பூந்தமல்லி - வாலாஜாபேட்டை பிரிவு ஆறு வழிச்சாலை, திருச்சி - கரூர் 4 வழிச்சாலை, செங்கப்பள்ளி - வாளையார் பிரிவில் 4 வழிச்சாலை, நான்கு வழிச்சாலை. திருப்பதி - திருத்தணி - சென்னை, திண்டுக்கல் - தேனி - குமிளி பிரிவு, திண்டிவனம் - கிருஷ்ணகிரி பிரிவு, திருச்சி - காரைக்குடி பிரிவு, நாகப்பட்டினம் - தஞ்சாவூர் பிரிவு, திருமயம் - மானாமதுரை பிரிவு, தஞ்சாவூர் - புதுக்கோட்டை பிரிவு, காரைக்குடி - ராமநாதபுரம் - ராமநாதபுரம் பிரிவு ஆகியவை இதில் அடங்கும்.

Read more about: tamil nadu chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X