Search
  • Follow NativePlanet
Share
» »இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர்களின் நகருக்கு செல்வோம் வாருங்கள்

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர்களின் நகருக்கு செல்வோம் வாருங்கள்

பண்டைய காலத்தில் தமிழகமெங்கும் பல்வேறு மன்னராட்சிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று வேறுபட்ட, தனெக்கென தனி அடையாளத்தை கொண்ட மன்னராட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் மதுரையில் வைகை நதிக்கரையில் முற்கால பாண்டியர்களின் ஆட்சி, பின் மூன்றாம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தை தலைநகராக கொண்டு தோன்றிய பல்லவர் ஆட்சி, 10ஆம் நூற்றாண்டு காலத்தில் தஞ்சையில் தோன்றிய சோழ வம்சத்தினரின் ஆட்சி, பின்னர் வந்த சோழர்கள், நாயக்கர்கள் போன்ற அனைவரது ஆட்சி காலத்தின் போதுமே கலைகள் போற்றி வளர்க்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக பல்லவர்களின் ஆட்சி காலத்தில் கற் சிற்பக்கலை அதன் உச்சத்தை அடைந்திருக்கின்றது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பல்லவர்களின் காலத்தில் மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் கோயில்கள் இன்றும் அவர்களின் கலை மாட்சிமையை உலகுக்கு பறைசாற்றி வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுக்காப்படும் மாமல்லபுரம் கோயில்களுக்கு போகலாம் வாருங்கள்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம்:

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது மாமல்லபுரம் நகரம்.

தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றான இதன் வரலாறு கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது.

eT-pek

மாமல்லபுரம்:

மாமல்லபுரம்:

'பெரிப்லுஸ்' என்ற பழமையான கிரேக்க குறிப்பேட்டில் கி.பி 1ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் மாமல்லபுரத்தில் துறைமுகம் அமைத்து கப்பல்கள் மூலம் வாணிபர்கள் கடல் மார்கமாக தெற்காசிய நாடுகளுக்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

Emmanuel DYAN

மாமல்லபுரம்:

மாமல்லபுரம்:

இந்த மாமல்லபுரம் நகரம் மூன்றாம் நூற்றாண்டில் தோன்றி வலுப்பெற்ற பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கிட்டத்தட்ட 600 வருடங்கள் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் இந்நகரம் இருந்திருக்கிறது.

அந்நாட்களில் தான் மாமல்லபுரம் எங்கும் பாறைகளில் குடையப்பட்ட கோயில்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த கோயில்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் சற்றே விரிவாக காண்போம் வாருங்கள்.

CK

கடற்கரை கோயில் :

கடற்கரை கோயில் :

முழுக்க முழுக்க கிரானைட் கற்களை கொண்டு 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது வங்காள விரிகுடாவை பார்த்தபடி இருக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயில்.

இந்த கோயில் தான் தென்னிந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான கற்கோயில் ஆகும்.

CK

கடற்கரை கோயில் :

கடற்கரை கோயில் :

ஒரு பெரிய கோயிலையும், இரண்டு சிறிய கோயில்களையும் கொண்டுள்ள இந்த கோயில் வளாகமானது இரண்டாம் நரசிம்ம வர்மனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

Vikas Rana

கடற்கரை கோயில் :

கடற்கரை கோயில் :

இங்கு மொத்தம் 7 கோயில்கள் கட்டப்பட்டதாகவும், அவை காலப்போக்கில் வெள்ளத்தாலும், கடலில் மூழ்கியும் அழிந்து போனதாக சொல்லப்படுகிறது.

இங்குள்ள மூன்று கோயிலில்களில் ஒன்றில் கோயிலில் சிவ பெருமானும், மற்ற இரண்டு கோயில்களில் விஷ்ணுவும் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

Arian Zwegers

கடற்கரை கோயில் :

கடற்கரை கோயில் :

மேலும் இந்த கோயில் வளாகத்தில் ஒற்றைக் கல்லினால் வடிக்கப்பட்ட சிங்கத்தின் சிற்பம் ஒன்று உள்ளது. இந்த சிற்பத்தில் சிங்கத்தின் மேல் பார்வதி தேவி மகிஷாசுரமர்தினியாக அமர்ந்திருப்பது போன்று வடிக்கப்பட்டிருக்கிறது.

கடற்கரை கோயில் :

கடற்கரை கோயில் :

கடற்கரை கோயிலை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள் .

Sundar M

பஞ்ச ரதங்கள் :

பஞ்ச ரதங்கள் :

பஞ்ச ரதங்கள் அல்லது பாண்டவ ரதங்கள் என்று அழைக்கப்படும் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பத் தொகுப்புகள் இந்தியாவில் ஒற்றைக்கல் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகின்றன.

இங்கு ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஐந்து மிகப்பெரிய சிறப்பங்கள் இருக்கின்றன.

Jean-Pierre Dalbéra

பஞ்ச ரதங்கள் :

பஞ்ச ரதங்கள் :

மகாபாரத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களையும் அவர்களின் மனைவியான திரௌபதியையும் குறிக்கும் விதமாக இந்த ஐந்து சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன.

இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் தர்மராஜா ராஜா ரதம், பீமன் ரதம், அர்ஜுனன் ரதம், நகுல சகாதேவன் ரதம் மற்றும் திரௌபதி ரதம் என அழைக்கப்படுகின்றன.

Aasif Iqbal J

பஞ்ச ரதங்கள் :

பஞ்ச ரதங்கள் :

இவை பார்பதற்கு கோயில்கள் போல தோன்றினாலும் உண்மையில் இக்கோயில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் இறந்துவிட்டதால் கட்டுமானப்பணிகள் கைவிடப்பட்டது.

ஆயிரம் வருடங்கள் கடந்தும் இன்றும் கட்டிமுடிக்கப்படாமலேயே இந்த பஞ்ச ரத சிற்பங்கள் இருக்கின்றன.

Christopher Porter

வராக குகை கோயில்கள் :

வராக குகை கோயில்கள் :

பஞ்ச ரதங்கள் மற்றும் கடற்கரை கோயில் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் இருக்கிறது பல்லவர்களின் புகழ்பெற்ற குடைவரை கோயிலான வராக குகை கோயில்கள்.

மற்ற இரண்டு இடங்களை போலவே ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த குகைகள் பண்டைய கால விஸ்வகர்மா ஸ்தபதிகளின் திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

Emmanuel DYAN

வராக குகை கோயில்கள் :

வராக குகை கோயில்கள் :

இங்குள்ள குகையில் அத்தனை தற்செயலாக தோற்றமளிக்கும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கே வராக பகவான் பூமா தேவியை தன் கொம்புகளில் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது போன்ற சிற்பம் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.

Srinivasan G

கடற்கரை :

கடற்கரை :

இந்த கோயில்களை தாண்டி மாமல்லபுரத்தில் அற்புதமான அசுத்தம் இல்லாத கடற்கரை ஒன்றும் இருக்கிறது.

இந்த கடற்கரையை ஒட்டி சுவையான கடல் உணவுகள் கிடைக்கும் உணவகங்கள் இருக்கின்றன. வார விடுமுறையில் வர இந்த மாமல்லபுரம் மிகச்சிறந்த இடமாகும்.

CK

அர்ஜுனன் தபசு பாறை :

அர்ஜுனன் தபசு பாறை :

மாமல்லபுரத்தில் பஞ்ச ரத சிற்பங்களுக்கு அருகில் இருக்கும் 43அடி உயரம் கொண்ட திறந்தவெளி பாறை புடைப்பு சித்திரங்கள் தான் அர்ஜுனன் தபசு பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு பகுதிகளாக இருக்கும் இந்த சித்திரங்களில் புராண கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

Dietmut Teijgeman-Hansen

அர்ஜுனன் தபசு பாறை :

அர்ஜுனன் தபசு பாறை :

இந்த பாறை சித்திரங்களின் ஒரு பகுதியில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்யும் காட்சியும் மற்றுமொரு பகுதியில் பகீரத மன்னன் புனித நதியான கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி தவம் செய்யும் காட்சியும் வடிக்கப்பட்டிருக்கிறது.

Mahesh Balasubramanian

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X