Search
  • Follow NativePlanet
Share
» »உண்மையான தூக்கு துரையின் வரலாற்று பூமி எங்க இருக்கு தெரியுமா?

உண்மையான தூக்கு துரையின் வரலாற்று பூமி எங்க இருக்கு தெரியுமா?

உண்மையான தூக்கு துரையின் வரலாற்று பூமி எங்க இருக்கு தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நீர் வீழ்ச்சியான மணிமுத்தாறு பற்றியும், அதன் வழியில் அமைந்திருக்கும் மாவீரர் தூக்குதுரை வாழ்ந்த பகுதியான சிங்கம்பட்டி பற்றியும் இந்த பதிவில் காண்போம். அஜித்தின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானவுடன் பிரபலமானது இந்த பெயர். தூக்குதுரை யார் என்ற தேடுதல் வேட்டை மன்னர்களாக நெட்டிசன்கள் கிளம்பிவிட்டனர். சுற்றுலாவுக்கான தளமான நாமும் தூக்குதுரை வாழ்ந்த பூமியை நோக்கி இயற்கை சுற்றுலா செல்வோம். நண்பருக்காக தூக்கு தண்டனை பெற்று உயிரை நீத்த தூக்கு துரை வாழ்ந்த சொர்க்க பூமியை பாருங்கள்.

 எங்குள்ளது

எங்குள்ளது

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள, வளமான ஒரு பூமி அம்பாசமுத்திரம். இது காண்பதற்கு அழகாகவும், அமைதியாகவும் இருக்கும் தளமாகும். இங்கு இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் அமைந்துள்ளதுதான் சிங்கம்பட்டி எனும் பகுதி. மணிமுத்தாறு பற்றி பார்ப்பதற்கு முன் சிங்கம்பட்டியையும் பார்த்துவிட்டு போகலாம்.

சிங்கம்பட்டி, திருநெல்வேலி மாவட்டத்தின் பிரபலமான ஊர். இங்கு தூக்கு துரை என்பவர் சிங்கம்பட்டி ஜமீனின் 24 வது அரசர். நண்பனை காப்பாற்றுவதற்காக செய்த கொலையால், தூக்கு தண்டனை பெற்று, இறுதிவரை சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறிய மாவீரர். அவர் வாழ்ந்த பகுதியை காண்போம் வாருங்கள்.

அம்பையிலிருந்து பயணம்

அம்பையிலிருந்து பயணம்

அம்பாசமுத்திரத்திலிருந்து 25 நிமிட பயணத்தில் இந்த இடத்தை அடைய முடியும். பயணத்தின் மொத்த தொலைவு 11.2 கிமீ ஆகும். இங்கு செல்வதற்கு இன்னொரு சுலபமான வழியும் இருக்கிறது.

அது 22 நிமிடத்தில் நம்மை சிங்கம்பட்டிக்கு அழைத்துச் செல்லும். மொத்த தொலைவு 8 கிமீ தூரம் ஆகும்.

 வீரத்தின் விஸ்வாச வரலாறு

வீரத்தின் விஸ்வாச வரலாறு

கிபி 1100ம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் உதயம் ஆனது. சிறிய அரசுதான் என்றாலும், இந்த வம்சத்தில் பிறந்தவர்கள் எல்லாருமே தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் போற்றி பரந்த பெருமை கொண்ட ஜமீன் இதுவாகும். இங்கு பல சிற்றரசர்கள் ஆட்சி செய்தார்கள்.

 மீட்டெடுத்து உயர்த்தப்பட்ட கலைகள்

மீட்டெடுத்து உயர்த்தப்பட்ட கலைகள்

சிங்கம்பட்டி ஜமீன் காரர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில், திரு உத்திரகோசமங்கையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கலைகள் வளர்த்ததுபோல. தென்னாடு எங்கும் கலைகள் வளர்க்கப்பாடுபட்டார்கள். அதன்படி சண்டைக் கலையிலும் சிறந்து விளங்கினார்கள்.

 சண்டையின் வரலாற்று துரோகம்

சண்டையின் வரலாற்று துரோகம்

மதுரை மாநகரில் பாண்டியரது ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, திடீரென தோன்றிய பூசலால், மகனுக்கு சிற்றப்பனுக்கும் பயங்கர மோதல். சிற்றப்பன் ஈழ தேசத்துடன் ஒப்பந்தம் போட, மகன் குலசேகரப் பாண்டியன் சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்ததாக வரலாறு.

 அரசவைக்குள்ளேயே பூசல்

அரசவைக்குள்ளேயே பூசல்

இலங்கைப் படைகள் உதவியுடன், பராக்கிரம பாண்டியன், ராமநாதபுரம் ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தான். இதை முறியடிக்க குலசேகரப் பாண்டியன் தலைமையிலான சோழர் படை போரிட்டு எதிரிகளை அனுராத புரம் வரை புறமுதுகு காட்டி ஓட விட்டனர்.

 ராமநாதபுரம் சேதுபதிகள் வீழ்ச்சி

ராமநாதபுரம் சேதுபதிகள் வீழ்ச்சி

அதுவரை ராமநாதபுரம் உள்ளிட்ட சில சிற்றரசுகள் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டன. இவை பாண்டியர்களின் கீழ் அரசாண்டு கொண்டிருந்தன. இந்த போருக்குப் பிறகு அவையும் சோழ வசம் வந்தன.

Unbound Rover

 சிங்கம்பட்டி ஜமீனின் முதல் மன்னர்

சிங்கம்பட்டி ஜமீனின் முதல் மன்னர்

சிங்கம்பட்டி ஜமீன் பல ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்திருந்தாலும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வேறு ஒரு குடும்பத்திலிருந்து வந்து போரிட்டு, வென்று சிங்கம்பட்டியின் முதல் ஜமீனாக தன்னை அறிவித்துக்கொண்டவர் பிரீதிபாலு என்பவர். இவர் பாண்டியர்களுடன் நெருக்கம் காட்டினார். பெண் கொடுத்து பெண் எடுக்கும் வரை அந்த நெருக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

Seshadri.K.S

கலிதப்பாண்டியனின் கட்டளையும், பிரீதிபாலுவின் வெற்றியும்

கலிதப்பாண்டியனின் கட்டளையும், பிரீதிபாலுவின் வெற்றியும்

உக்கிரன் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு தென் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த கலிதப் பாண்டியன் பிரீதிபாலுவுக்கு கொடுத்த கட்டளையின் அடிப்படையில், கன்னட ராஜ்ய அரசனைத் தோற்கடித்து பரிசுகளைப் பெற்றதாக வரலாறு.

Aniprasanth

 தூக்குதுரை சிலை

தூக்குதுரை சிலை

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் வாழ்ந்த ஜமீன்கள் தங்கள் அரண்மனை முன்பு மகாதேவர் எனும் கோவிலைக் கட்டியுள்ளனர். அதை தினமும் வணங்குவார்களாம். இங்குதான் தூக்குதுரை எனும் பெரியசாமி அவர்களின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Arun Gopi

தோற்றம்

தோற்றம்

முறுக்கிய மீசை, கம்பீர உருவம் என அவர் வாழும்போது இருந்ததாக நம்பப்படுகிறது. அதை வைத்தே இந்த சிலை உருவாக்கப்பட்டது. அவருக்கு சிலை உருவாக்கும் அளவுக்கு என்ன செய்தார் என்ற சந்தேகம் நமக்கு வராமல் இல்லை. ஆனால் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த அவரின் வரலாற்றை படிக்காமல் விட்டுவிடுவோமா என்ன?

Varkey Parakkal

நட்புக்காக

நட்புக்காக


சிறையில் அடைப் பட்டிருந்த அப்பாவியான நண்பனை காக்க நினைத்து, சிறை காவலாளியை கொலை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. நண்பனுக்காக இந்த கொலைப்பழியை தாமே ஒத்துக்கொண்டு தூக்கு மேடை ஏறியவர் இவர். ஆனால் ஒரு உண்மை தெரியுமா? சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளின் மிகத் திறமைசாலி இவர்தானாம்.

PlaneMad

காரையாறு சொரிமுத்து அய்யனார்கோவில்

காரையாறு சொரிமுத்து அய்யனார்கோவில்

இந்த பகுதியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

இந்த கோவில் குறித்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இங்கு பூசை செய்தால் நூறு சதவிகிதம் அடுத்த சில நாட்களில் மழை வரும் என்று கூறுகிறார்கள்.

இந்த சொரிமுத்து அய்யனார் கோவில் லோயர் கேம்ப்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடப்புறத்தில் அமைந்துள்ளது.

Dr.Harikrishna Sharma

சிங்கம்பட்டி அரண்மனை

சிங்கம்பட்டி அரண்மனை

சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனை. இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது. இந்த அரண்மனையில் சமீன்தார் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.

kodikhanmusthafa

தர்பார் மண்டபம்

தர்பார் மண்டபம்

இந்த அரண்மனையில் மன்னராட்சி கால தர்பார் மண்டபம் உள்ளது. இது மன்னரின் வாரிசை பார்க்கவரும் பார்வையாளர்களுக்கான காத்திருப்பு மண்டபமாக இப்போது உள்ளது. சிங்கம்பட்டி ராஜாக்களின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் படங்கள் தர்பார் மண்டபச் சுவர் முழுக்க அமைக்கப்பட்டுள்ளன.

சுபநிகழ்வுகள்

இந்த மண்டபத்தை, சிங்கம்பட்டி மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்வுகளுக்கு பயன்படுத்திவருகின்றனர். ஜமீன் வாரீசுகளால், அதன் பாரம்பரியமான சில பொருள்களை இப்போதும் பாதுகாத்து வருகிறனர். அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது.

காப்பகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது

சுவாமி விவேகானந்தர், ராமநாதபுர சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு பரிசளித்த யானை சிற்பம் ஒன்று இங்கு உள்ளது

ஜமீன் ஆசையாக வளர்த்த குதிரை ஒன்றின் குளம்புடன் வெள்ளிப் பூண் போட்டு மாற்றப்பட்ட சாம்பல் கிண்ணம் ஒன்றும் உள்ளது.

இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் அளவுக்கு பெரிய மரக்கால் ஒன்று உள்ளது. இது நெல்லை அளக்கப்பயன்படுத்தப்படும்.

மூன்று கிலோ எடை கொண்ட பூட்டு

யானை ஒன்றின் எலும்புக் கூடு

மணிமுத்தாறு

மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம். இயற்கை வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது.

புகைப்படமெடுக்க

மணிமுத்தாற்றில் மலைகளும், தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் அக்காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். புகைப்படங்கள் எடுக்கவும் இயற்கை சுற்றுலாவுக்கும் மிகச் சிறந்த இடமாகும்.

மணிமுத்தாறு அருவி

மணிமுத்தாறு அருவி, அணையிலிருந்து சிறிது தூரம் தொலைவில் தான் உள்ளது. இதுவும் அணையின் அழகிற்கு சிறிதும் சளைத்தது அல்ல. இங்கே நீராடவும் செய்து இயற்கை அன்னையின் அழகிடம் நம் மனதை முழுவதுமாக பறிகொடுக்கலாம்.

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

அழகிய மணிமுத்தாறு


மணிமுத்தாற்றின் அழகில் மயங்கலாம் வாங்க

More News

Read more about: travel tirunelveli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+