Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஒரு நாள் சாமி கும்பிட்டால் போதும் – 365 நாள் சாமி கும்பிட்டதற்கான புண்ணியம் கிடைக்குமாம்!

இந்த ஒரு நாள் சாமி கும்பிட்டால் போதும் – 365 நாள் சாமி கும்பிட்டதற்கான புண்ணியம் கிடைக்குமாம்!

மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். இந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி சிறப்பான வாழ்வை பெறலாம். மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பது என்பது ஐதீகம். அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். மாசி மகம் அனைத்து தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளாகும். இந்த ஒரு நாளில் சாமி தரிசனம் செய்வது வருடம் 365 நாளில் சாமி கும்பிட்டதற்கான புண்ணியம் வந்து சேரும்!

மிகவும் விசேஷமான மாசி மகம்

அனைத்து மாதங்களிலும் பௌர்ணமி வரும் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. எனவே, குறிப்பிட்ட நாளில் மட்டும் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது என்பதால் அந்நாளில், விரதம் இருந்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும் மற்றும் நினைத்தது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், தமிழ் மாதமான மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. ஏனென்றால், பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாள் தான் நாம் மாசி மகம் திருவிழாவாக கொண்டாடுகிறோம். மகம் என்பது 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும். மேலும் இந்நாளில் பல கோவில்களில் தீர்த்த உற்சவம் நடைபெறும்.

masimagam attend

மோட்சம் தரும் மாசி மக வழிபாடு

இந்தப் பண்டிகை தூய்மைப்படுத்தும் சடங்குடன் தொடர்புடையது. மாசி மகத்தின் போது புண்ணிய நதிகளிலோ அல்லது கடல்களிலோ நீராடுவது முக்கிய அடைவதற்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் மட்டுமின்றி தமிழ் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் பிரபலமானது. மேலும் இந்நாளில் வழிபடும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் கடல் கரைகள் ஆறுகள் அல்லது குளங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறும் மற்றும் மங்களகரமான நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். மாசி மகம் அன்று கடல் ஆறு குளங்களில் நீராடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அன்னதானம் வழங்குவது சிறந்தது

மாசி மகத்தன்று அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். முடிந்த வரை இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் வழங்கலாம். மனிதர்களுக்கு உணவு வழங்க முடியா விட்டாலும் காகம், நாய், பூனை போன்றவற்றிற்கும் உணவு வழங்கலாம். முன்னோர்களுக்கு மாசி மகத்தன்று நீர் நிலைகளுக்கு அருகில் வைத்து தர்ப்பணம் கொடுப்பதால் ஏழு தலைமுறையில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, நம்முடைய முன்னோர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், நமக்கும் நன்மைகளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

masimagam darshan

மகத்தன்று நன்மைகள் செய்ய வேண்டும்

மாசி மகத்தன்று தான் தட்சனின் மகளாக பார்வதி தேவி அவதரித்தார் என புராணங்கள் சொல்கின்றன. இதனால் இந்த நாளில் குங்குமத்தால் அம்பிகையையும், வாசனை மலர்களால் சரஸ்வதியை தேவியையும் வழிபட்டால் இன்பமும், வெற்றியும், ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாசி மகத்தன்று நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் இரண்டு மடங்கு பலனை தரும் என்பதால் தான, தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் நாம் செய்யும் தர்மங்களால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

ஒரு நாள் சாமி கும்பிட்டால் 365 நாள் பலன்

குறிப்பாக மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். இன்றைய நாளில் சாமி தரிசனம் செய்வது வருடம் முழுக்க சாமி தரிசனம் செய்ததை போல புண்ணியத்தை வழங்குகிறது..

2024 மாசி மகம் தேதி மற்றும் நேரம்

இந்த ஆண்டு மாசி மகம் பிப்ரவரி 24 சனிக்கிழமை அன்று வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6.51 வரை பௌர்ணமி திதி கொடுக்கலாம். அதுபோல், பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 8.40 மணி முதல் பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. எனவே, பிப்ரவரி 24ஆம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் கடல், ஆறு மற்றும் குளங்களுக்கு சென்று புனித நீராடலாம்.

More News

    Read more about: interesting facts masi magam
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+