பொதுவாக ஜப்பானில் காணப்படும் இந்த மியாசாகி மாம்பழங்கள் தான் உலகின் விலையுர்ந்த மாம்பழ வகையாகும். அரியவகை மாம்பழம் தற்போது இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் காணப்படுகிறது. இந்த மியாசாகி மாம்பழம் ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படி என்ன இருக்கிறது இந்த பழத்தில், சுவை ஒருவேளை வித்தியாசமாக இருக்குமோ? என்ன இருந்தாலும் 3 லட்சத்திற்கு இதில் என்ன இருக்கும்? பார்ப்போம் வாருங்கள்!
உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம்
இந்தியாவில் சில பண்ணைகளில் வளர்க்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் ஜப்பானில் காணப்படும் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும். வெப்பமான காலநிலை, வளமான மண் மற்றும் சுத்தமான நீர் அணுகல் போன்ற சிறந்த சூழ்நிலைகள் தேவைப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்படுவதால், இது உலகின் விலையுயர்ந்த பழங்களில் ஒன்றாக உள்ளது.
ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.3 லட்சம்
இந்தியாவில் கோடைகாலம் என்பது வெயிலின் தாக்கத்தை கொடுத்தாலும், 'பழங்களின் ராஜா' என்று அன்புடன் அழைக்கப்படும் இனிப்பான, ருசியான, சுவையான மாம்பழங்களை நமக்கு கொடுப்பதால் வெயில் காலத்தை நாம் எதிர்பார்க்கிறோம். வழக்கமாக சீசனில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.100 முதல் ரூ.200 வரை விலை போகிறது, அதை தான் சாமானியர்களாகிய நாம் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நாட்டின் சில பகுதிகளில் விளையும் ஜப்பானிய வகை பழம் கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்கப்படுகிறது தெயர்யுமா மக்களே!

மிகவும் பாதுகாப்புடன் இந்தியாவில் விளைவிக்கப்படும் மியாசாகி
இந்தியாவில் சில பண்ணைகளில் வளர்க்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் ஜப்பானில் காணப்படும் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு சிலிகுரி மற்றும் ராய்ப்பூரில் நடந்த மாம்பழத் திருவிழாவின் போது இது காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த மாம்பழம் இந்தியா முழுக்க பிரபலமானது. அதிலிருந்து இந்த மாம்பழங்கள் மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. கம்பு, கட்டைகளுடன் ஆட்களை போட்டு இந்த மாம்பழங்களை உரிமையாளர்கள் பாதுகாக்கின்றனர்.
தனித்துவமான சாகுபடி நுட்பங்கள்
மியாசாகியை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் தனித்துவமான சாகுபடி நுட்பங்கள் அதை விலையுயர்ந்ததாக ஆக்குகின்றன. வெப்பமான காலநிலை, வளமான மண் மற்றும் சுத்தமான நீர் அணுகல் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறந்த சூழ்நிலையில் மாம்பழம் வளர்க்கப்படுகிறது. இது மற்ற மாம்பழ வகைகளை விட பெரியதாகவும், இனிப்பானதாகவும், ஜூசியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவப்பு நிறத்தில் ஆப்பிள் மாம்பழம்
மியாசாகி மாம்பழம் பழுக்க வைக்கும் போது ஒரு மயக்கும் மாற்றத்திற்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், அதன் நிறம் ஊதா. இருப்பினும், அதன் உச்சநிலையை அடைந்தவுடன், அது எரியும் சிவப்பு நிறமாக மாறும். அந்த நிரதிர்காகவே இது ஆப்பிள் மாம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு மியாசாகி மாம்பழம் தோராயமாக 350 கிராம் எடை கொண்டது.
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாம்பழம்
மாம்பழங்கள் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். வைட்டமின் சி ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது, அதே நேரத்தில் வைட்டமின் ஏ நல்ல பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஃபைபர் உள்ளடக்கம் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான குடலுக்கு பங்களிக்கிறது.
என்ன இருந்தாலும் ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.3 லட்சம் என்பது எல்லாம் ரொம்ப அதிகம் தான்!



Click it and Unblock the Notifications





