» »இந்தியாவை எதிர்க்கும் தமிழகம்- தனிநாடு கோருவதன் பின்னணி என்ன தெரியுமா ?

இந்தியாவை எதிர்க்கும் தமிழகம்- தனிநாடு கோருவதன் பின்னணி என்ன தெரியுமா ?

Written By: Sabarish

சமீப காலமாகவே தமிழகத்தில் அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் வார்த்தை என்றால் அது தமிழகத்தை தனி நாடாக பிரித்துக்கொடுத்துவிடு என்ற வார்த்தையாகவே இருக்கும். அதுவும், மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி மக்களின் ஒன்றுபட்ட ஓசையாக இவ்வார்த்தை கோரிக்கையாக எழுப்பப்படுகிறது. நம்மில் பெரும்பாலானோர் அறிந்த மீத்தேன் திட்டம் முதல் அணுமின் நிலையம் தொட்டு, தற்போதைய சூழ்நிலையில் பெரும் விவாதமாக உள்ள காவிரி பங்கீடு வரை மத்திய அரசால் பாதிக்கப்பட்டு வரும் தமிழகத்திற்கு உட்பட்ட இப்பகுதிகளில் அப்படி என்னவெல்லாம் இருக்கு என தெரிந்துகொல்லாம் வாங்க...

குளச்சல்- எண்ணூர்

குளச்சல்- எண்ணூர்


தமிழகத்தின் தெற்கே குளச்சலில் ஆரம்பித்து கூடங்குளம், கதிராமங்களம், காவிரி, எண்ணூர் வரை மத்தியில் ஆளும் அரசின் சார்பில் அணுமின் நிலையங்கள், எரிவாயுக் குழாய்கள், மீத்தேன் திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் தனக்கென இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஈடான பல சிறப்புகளைக் கொண்டுள்ளதே தனிநாடு கோருவதஙறகான முக்கிய ஆதாரமாக அமைகிறது. அப்படி தமிழகத்தில் மத்திய அரசின் நெருங்கிய பார்வையில் இருக்கும் மாவட்டங்கள் எவை ? அங்கே என்ன உள்ளது என பார்க்கலாம்.

குளச்சல்

குளச்சல்

தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே கன்னியாகுமரி அருகே அமைந்துள்ளது குளச்சல். இங்கே மத்திய அரசின் சார்பில் இணையம் துறைமுகம் என்ற நாட்டின் மிகப் பெரிய துறைமுகம் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நீர்வளத்தையும், மீன் வளத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை எதிர்த்த மக்கள் போராட்டத்திற்கு அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

Risvan Mohammed S

குளச்சல் சுற்றுலாத் தலங்கள்

குளச்சல் சுற்றுலாத் தலங்கள்


கன்னியாகுமரியில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலை ஒட்டியவாறு அமைந்துள்ளது குளச்சல். கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வரும் பெரும்பாலான பயணிகள் இங்கேயும் வந்து செல்வது வழக்கம். கடற்கரை அருகே உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மிகவும் பிரசிதிபெற்றது. குளச்சல் கடற்கரையில் உள்ள டச்சு- திருவாங்கூர் சமஸ்தான போர் வெற்றித் தூணைக் காணவும் சிலர் வருகின்றனர். இப்படி வருகின்ற உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் குளச்சல் துறைமுக பாலம் பகுதிக்கு சென்று கடற்கரை அழகை கண்டு களித்து செல்கின்றனர். பாலத்தின் மேல் காதலியின் கைகோர்த்து அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை ரசிக்க யாருதான் விரும்ப மாட்டார்கள்.

Sudhersan22

கூடங்குளம்

கூடங்குளம்


கன்னியாகுமரியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள கூடங்குளத்தில் அணல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலகட்டப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றது நாம் அறிந்த ஒன்றே. கன்னியாகுமரிக்கு இணையான சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ள கூடங்குளத்தில் தற்போது அனல் மின் நிலையமே மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.

wikipedia

தாமிரபரணி

தாமிரபரணி


நெல்லை மாவட்டம், பாபநாசம் அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. இதில் தோன்றிய இடம் முதல் கடலில் கலக்கும் முன்புவரை பல லட்சம் ஏக்கர் விவசாய டெல்டா நிலங்களைக் காக்கும் இந்த ஆற்றில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதன் மூலம் தற்போது சுற்றுவட்டார விவசாய நிலம் பாதிக்கப்பட்டு காய்ந்த நிலையில் காணப்படுகிறது.

Karthikeyan.pandian

தாமிரபரணி சுற்றுலாத் தலங்கள்

தாமிரபரணி சுற்றுலாத் தலங்கள்


காரையார் அணை, தாமிரபரணி ஆறு, விக்ரமசிங்கபுரம், மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி, பாபநாசம், அம்பாசமுத்திரம் உள்ளிட்டவை இப்பகுதியில் மிகவும் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்கின்றன.

Sukumaran sundar

தேனி

தேனி


வைகை அணை, சுருளி அருவி, முல்லைப் பெரியாறு அணை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, மேகமலை, போடி மெட்டு, வெள்ளிமலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் பசுமைக் காடுகளையும் கொண்டுள்ள தேனியில் நியூட்ரினோ திட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் மர்மமான முறையில் அழிவும் நடைபெற்று வருகிறது.

அ.உமர் பாரூக்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்


திருச்சிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது தஞ்சாவூர் மற்றும் திருவாரூர். தமிழகத்தின் தானியக் களஞ்சியம் என்ற பெருமைகொண்ட இப்பகுதிகள் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. காரணம் இப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மீத்தேன் எரிவாயுத் திட்டம். மத்திய அரசின் சார்பில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது தஞ்சாவூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என உங்களால் ஏற்க முடிகிறதா?.

Gsnewid

நெடுவாசல்

நெடுவாசல்

தஞ்சாவூரில் இருந்து சுமார் 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நெடுவாசல். மீத்தேன் என்ற திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டம் என மத்திய அரசால் பெயர் மாற்றப்பட்ட திட்டம் இங்கேதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருபுறம் புதுக்கோட்டை, மறுபுறம் பட்டுக்கோட்டை, வங்காள விரிகுடா என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இப்பகுதியில் உள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இயற்கை வளங்களும் நாசகரமாகும்.

Magentic Manifestations

கதிராமங்கலம்- கும்பகோணம்

கதிராமங்கலம்- கும்பகோணம்


கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் மட்டுமே 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ சாரங்கபாணி கோவில், ஸ்ரீ ராமசாமி கோவில் ஆகியவை இங்குள்ள கோவில்களில் குறிப்பிடத்தக்கவை. இதனைத் தவித்து இன்னும் பல சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள கும்பகோணத்தில் உள்ள கதிராமங்கலத்தில் அமைக்கப்பட உள்ள ஒஎன்ஜிசி கரிவாயு குழாய்கள் மூலம் அப்பகுயிதின் ஒட்டுமொத்த வளமும் பாதிக்கப்படும் சூழ்நிலையை ரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

Saminathan Suresh

காவிரி

காவிரி


காவிரி, சமீப காலமாக தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் ஒற்றை வார்த்தை. இருமாநிலங்களுக்கு இடையேயான பங்கீட்டு பிரச்சனை. பல ஆண்டுகளான இது தொடர்ந்து வந்தாலும் அரசின் அவலநிலையால் இன்றளவும் உரிமையை இழந்த அகதிகள் போலவே இப்பிரச்சனையில் தமிழர்கள் பாவிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் காவிரிக்கு உட்பட்டு ஒக்கேனக்கல், தர்மபுரி, மேட்டூர் என இன்னும் பல நீர்த்தேக்கப் பகுதிகளும், பல லட்ச ஏக்கர் விவசாய நிலங்களும் காவிரிக்காக ஏங்கிகாத்திருப்பது நாம் அறிந்ததே.

L.vivian.richard

எண்ணூர்

எண்ணூர்


இந்தியாவின் 12வது பெரிய துறைமுகமான எண்ணூர் சென்னை அருகே அமைந்துள்ளது. பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டிய இதன் மீது 26,000 மில்லியன் ரூபாய்களை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்துறையின் பங்குகளில் 68 சதவிகிதம் மத்திய அரசிடம் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் எண்ணைக் கசித்து மாபெரும் அழிவு நிகழ்தது. சென்னையில் முக்கிய சுற்றுலாத் தலமான எண்ணூர் பல சீரழிவுகளைக் கண்டது.

Musterknabe97

இந்தியாவை எதிர்க்கும் தமிழகம்

இந்தியாவை எதிர்க்கும் தமிழகம்


இவ்வாறு மத்திய அரசின் தலையீட்டின் படி தமிழகம் பல்வேறு அழிவுச் சம்பவங்களை அனுபவித்து வருகிறது. விவசாய நிலங்களும், உலக நாடுகளே கண்டு ரசித்த சுற்றுலாத் தலங்களும் இன்று வளர்ச்சிப் பாதை என்னும் பெயரில் சிதிலமடைந்து வருகிறது. அவற்றை மீட்டுப் பாதுகாக்க வேண்டும்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்