Search
  • Follow NativePlanet
Share
» »மணிக்கு 1200 கிலோ மீட்டர் ஸ்பீடு... மும்பை டூ புனேவுக்கு சொய்யின்னு போகலாமா ?

மணிக்கு 1200 கிலோ மீட்டர் ஸ்பீடு... மும்பை டூ புனேவுக்கு சொய்யின்னு போகலாமா ?

ஒரு காலத்துல, அதாவது மோட்டார் வாகன வருகைக்கு முன்பு பத்து கிலோ மீட்டரைக் கடக்க சுமார் 1 மணி நேரம் தேவைப்பட்டுச்சு, இப்ப மோட்டார் வாகன ஆதிக்கத்துல என்னதான் ஸ்பீடா அந்த 10 கிலோ மீட்டரை அடைஞ்சாலும், தற்போதைய வாகன நெருக்கடி பழைய நிலைமைக்கே கொண்டுபோய்டுச்சு. எங்க பாத்தாலும் டிராஃபிக் ஜாம். ஒரு சில கிலோ மீட்டரைக் கடக்குறதுக்குள்ளேயே வாழ்க்கையை வெறுக்குற அளவுக்கு இப்ப ஆகிப்போச்சு.

அதுலயும், நம்ம இந்தியாவுல உள்ள நெருக்கடிய சொல்லவா வேணும். இங்க, போக்குவரத்து நிறைந்த பகுதியாக மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகள் அறியப்படுகின்றன. ஒரு சில கிலோ மீட்டர் தூரத்துக்கே இப்படி நெருக்கடின்னா, அப்ப பல மைல் தூரம் பயணிச்சு வெளியூர் போரவங்க நிலைமைய கொஞ்சம் நினைச்சு பாத்திங்களா?.

சென்னை டூ மும்பை மேஜிக்

சென்னை டூ மும்பை மேஜிக்

Map

இருக்கிறதுலேயே அதிவேக போக்குவரத்துன்னா அது விமானப் போக்குவரத்துன்னுதா சொல்லுவோம். ஆனா, அதுக்கே சவால் விடுறமாதிரி கலமிறங்க காத்திருக்கு ஹைப்பர்லூப் போக்குவரத்து. என்னது விமானத்துக்கே சவாலான்னு கேக்குறிங்களா... அட ஆமாங்க... இந்த வண்டில போனா 50 நிமிசத்துல சென்னையில இருந்து மும்பைக்கு போய்டலாம்னா பாருங்களேன்.

எங்க வரப்போகுதுன்னு தெரியுமா ?

எங்க வரப்போகுதுன்னு தெரியுமா ?

PC : Okras

சுமார், 1,200 கிலோ மீட்டர் ஸ்பீடுல சொய்யின்னு பறக்கக்கூடிய ரயில் மாதிரியான ஹைப்பர்லூப் போக்குவரத்து மும்பை- பூனே வழித்தடத்துல தாங்க அமைக்கப் போறாங்க. இப்ப மும்பையில இருந்து புனேவை சாலை வழியாகவும், ரயில் மார்க்கமாகவும் அடைவதற்கு கிட்டத்தட்ட 3 மணிநேரம் பிடிக்கிற நிலையில ஹைப்பர்லூப் சாதனத்தில் வெறும் 20 நிமிடங்களில் சென்றலாம்னா சும்மாவா. அப்புறம் என்ன நீண்ட தூரத்துல தங்கி வேலை செய்யுறவங்க கூட இனி தினமும் வீட்டுக்கு போய் ஜாமாயிச்சுட்டு வரலாம்...

மும்பை - புனே

மும்பை - புனே

Map

மும்பையில் இருந்து புனேவிற்கு இடைப்பட்ட தூரத்தைக் கடக்க கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வருகிறீர்கள் என்றால் மும்பை- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை வழியாக பெங்களூர் - மும்பை நெடுஞ்சாலையை அடைந்து, கடல் பாலத்தைக் கடந்தால் நவி மும்பையை அடையலாம். அங்கிருந்து ரசயானி, லொனவாலா வழியாக புனேவை வந்தடையலாம். இந்த இடைப்பட்ட தூரத்திலும் நீங்கள் காண வேண்டிய சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளன.

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

PC : Jorge Láscar

மரீன் டிரைவ், கேட்வே ஆஃப் இந்தியா, பேண்ட்ஸ்டாண்ட், மும்பை ஸீ லிங்க், லோனாவலா, சனிவார் வாடா, ஷிண்டே சாத்ரி உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தலங்கள் முப்பை முழுவதும் நிறைந்து கணப்படுகிறது. இவை, உங்களது பயணத்தை மேன்மையடைச்செய்யும். குறிப்பாக, அலுவல் பணி நிமித்தமமாக நீங்கள் சென்றிருந்தாலும் சரி, குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தாலும் சரி, இங்கு அமைந்துள்ள வணிகத் தலங்கள் குறைந்த விலையில் பலவற்றை அள்ளிவரச் செய்யும்.

மரீன் டிரைவ்

மரீன் டிரைவ்

PC : A.Savin

மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி கடற்கரையின் அழகில் மிதக்கலாம். மேலும், மும்பைக்கே பெயர்போன பானி பூரி, பேல் பீரி, ஃபல்லூடா போன்ற சுவைமிகு தெருவோர உணவுகளை ருசிக்க தவறிவிடாதீர்கள். மரீன் டிரைவ் பகுதி கைத்தறி ஆடைகளுக்கு மிகப்பிரபலம் என்பதால் உங்க வீட்டு பெண்களுக்கு பிடிச்சத கொஞ்சம் வாங்கிட்டு போயி அவங்களையும் சந்தோசப்படுத்துங்க.

கேட்வே ஆஃப் இந்தியா

கேட்வே ஆஃப் இந்தியா

PC : Government of Maharashtra

கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கேட்வே ஆஃப் இந்தியா, இந்து மற்றும் இஸ்லாமியர்களின் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் விதமாக எழுப்பப்பட்ட இது தற்போது வரை மும்பை வரும் பயணிகளை கவர்ந்து வருகிறது.

பேண்ட்ஸ்டாண்ட்

பேண்ட்ஸ்டாண்ட்

PC : Marek69

மும்பையில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று பேண்ட்ஸ்டாண்ட். இந்தப் பகுதி காதலர்களின் மையமாக கருதப்படுகிறது. இந்த இடத்துக்கு நீங்கள் வரும் சமயம் எண்ணற்ற காதலர்கள் உலாவிக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.

மும்பை ஸீ லிங்க்

மும்பை ஸீ லிங்க்

PC : Mintu500px

மும்பையின் அமைந்துள்ள பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் பாலத்தில் மொத்தம் 8 இடைவழிகள் இருக்கின்றன. இதுபோல இடைவழிகள் கொண்ட பாலங்கள் கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்தியாவில் அதிகமாக இவைபோன்ற பாலங்கள் கட்டப்படுவதில்லை. அப்படி இருந்தும் 8 இடைவழிகளுடன் உருவாக்க்கப்பட்டிருக்கும் மும்பை ஸீ லிங்க் ஒரு கட்டிடக் கலை அதிசயமே. மும்பையில் தவறவிடக்கூடாத தலங்களின் பட்டியலில் இந்தப் பாலமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

லோனாவலா

லோனாவலா

PC : Arjun Singh Kulkarni

மும்பை மற்றும் புனே நகரத்திலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த லோனாவலா. விமானம், ரயில், சாலை வழி என எதில் வந்தாலும் இப்பகுதியை எளிதில் அடைய முடியும். மிதமான சீதோஷ்ண நிலை, அமைதியான சூழல் மற்றும் மாசற்ற காற்று போன்றவை லோனாவலாவை ஒரு ஒப்பற்ற விடுமுறை பொழுதுபோக்கு தலமாக விளங்கச் செய்கிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல் தரை பூங்காக்கள், மலை ஏற்றம் உள்ளிட்டவை நிச்சயம் உங்களை அப்பகுதியில் இருந்து விலகச் செய்யாது.

புனேவில் எங்கெல்லாம் போகலாம் ?

புனேவில் எங்கெல்லாம் போகலாம் ?

PC : Rameshng

புனேவிற்று சுற்றுலாச் செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் கண்டிப்பாக இந்தப் பகுதிகளையெல்லாம் மிஸ் பன்னிடாதீங்க. முல்ஷி ஏரி, சனிவார் வாடா, ஷிண்டே சாத்ரி, ஆகா கான் கோட்டை, விஸாபூர் கோட்டை, கத்ரஜ் பாம்பு பண்ணை சுற்றுலாத் தலங்கள் உங்களது பயணத்தை பயனுள்ளதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும வகையில் இருக்கும்.

முல்ஷி ஏரி

முல்ஷி ஏரி

PC : Vishalsdhumal

பல்வேறு மாநில சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையிலான முல்ஷி ஏரி முல்ஷி அணை நீர்த்தேக்கத்தின் அருகில் அமைந்துள்ளது. குடும்பத்துடன் மாலைப்பொழுதில் சுற்றுலா செல்வதற்கு மிகச்சிறந்த இடம் இதுவாகும். மேலும், இங்கு நீர் விளையாட்டுகள், பறவை வேடிக்கை போன்ற பொழுது போக்கு அம்சங்களும் ஏராளமாக உள்ளது.

சனிவார் வாடா

சனிவார் வாடா

PC : Ashok Bagade

சனியார் வாடா அரண்மனை பேஷ்வா ராஜ வம்ச ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் 1730ம் ஆண்டு பாஜி ராவ் மன்னரால் இது கட்டப்பட்டது என சான்றுகள் கூறுகின்றன. ஒரு தீ விபத்தில் இந்த அரண்மனையின் பெரும்பகுதி நாசமடைந்திருந்தாலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. மராத்திய கட்டிடக் கலையையும் முகலாய கட்டிடக்கலையையும் ஒன்று சேர்த்த கலவையான இயல்பை இந்த அரண்மனை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிண்டே சாத்ரி

ஷிண்டே சாத்ரி

PC : Rupeshpjadhav

வானோவ்ரி என்ற இடத்தில் அமைந்திருக்கும் நினைவிடமான ஷிண்டே சாத்ரி 18ம் நூற்ண்டில் வாழ்ந்த ஷீ மஹாட்ஜு ஷிண்டே என்று அழைக்கப்படும் மராத்திய மஹா வீரருக்காக அமைக்கப்பட்டதாகும். பேஷ்வாக்களின் ஆட்சியில் இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த தளபதியாக விளங்கினார். இந்த நினைவிடம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு வாஸ்து ஹரா கட்டிடக்கலை நிர்மாண விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை பார்க்கலாம்.

ஆகா கான் கோட்டை

ஆகா கான் கோட்டை

PC : Ramnath Bhat

இந்திய சுதந்திர போராட்டப் பின்னணியை கொண்ட ஆகா கான் கோட்டை சுல்தான் முகமது ஷா மூன்றாம் ஆகா கான் என்ற மன்னரால் கட்டப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியின்போது பல சுதந்திர போராட்ட வீரர்களையும், புரட்சியாளர்களையும் இங்குதான் சிறை வைத்திருந்தனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தி 1942ல் நடத்தியபோது அவரும் கஸ்தூரிபா காந்தியும் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளில் நினைவாக மியூலா ஆற்றின் அருகாமையில் இக்கோட்டைக்குள் நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விஸாபூர் கோட்டை

விஸாபூர் கோட்டை

PC : Elroy Serrao

புனேயில் அமைந்துள்ள விஸாபூர் கோட்டை லோஹாகட்-விஸாபூர் எனும் இரண்டு கோட்டைகளை உள்ளடக்கியது. இந்தக் கோட்டை பேஷ்வா வம்சத்தின் முதன் மன்னர் பாலாஜி விஸ்வநாத் என்பவரால் கட்டப்பட்டதாகும். இதற்குள் பல நுட்பமான குகை அறைகளும், தூண்களும், உயர்ந்த சுவர்களும், பழமையான வாழிடங்களும் உள்ளது. பேஷ்வாக்களின் அரண்மனை ஒன்றும் இக்கோட்டைக்குள் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X