Search
  • Follow NativePlanet
Share
» »காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!

காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!

தலைப்பை படித்தவுடன் ஸ்டாரு வியப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால் இது உண்மைதான். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 15 கிமீ தூரத்தில் நைனார் கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு சௌந்தர நாயகி சமேத நாக நாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இஸ்லாமியர்களுக்கான சிவன் கோவில் என்று சொல்லப்படுகிறது. காலம் காலமாக இங்கு இஸ்லாமியர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனராம். கோவிலுக்குள் அவர்கள் தொழுகை செய்து வேண்டுதல் செலுத்தி விட்டு செல்கின்றனர். இது ஏன்? இந்த கோவிலில் வேண்டினால் அனைத்தும் கிடைக்கிறது என்கிறார்களே அது எப்படி? எவ்வாறு இந்த கோவிலுக்கு வருவது என்பது குறித்து கீழே காண்போம்.

இஸ்லாமியர்களின் நைனார் கோயில்

இஸ்லாமியர்களின் நைனார் கோயில்

முல்லா சாகிப் என்ற இஸ்லாமியர் ஒருவரால் தான் இந்த ஊருக்கு நைனார் கோவில் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பிறவியிலேயே பேசும் திறனற்ற தன் பெண் குழந்தைக்கு பேச்சு வரவைக்க முல்லா சாகிப் பல மசூதிகள், கோவில்கள், வழிபாடு, மருத்துவம் என அனைத்தும் செய்து பார்த்தும் எந்த பலனும் இல்லை. பின்னர் இங்கு வந்து வாசுகி தீர்த்தத்தில் குளித்து விட்டு சாமி வழிபாடு செய்த உடன், அந்த சிறுமி கோயில் வளாகத்திலேயே "நைனா" என்று பேசி விட்டாராம். அதனாலேயே இந்த கோவிலுக்கு நைனார் கோவில் என்று பெயர் வந்ததாம். அதிலிருந்து பேசும் திறனற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இஸ்லாமியர்களுக்கான சிவன் கோவில்

இஸ்லாமியர்களுக்கான சிவன் கோவில்

இந்த கோவிலுக்கு உள்ளூரில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் வந்து செல்கின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த சிவபெருமான கருதப்படும் இக்கோயில் மூலவரை அவர்கள் "நைனா முகமது" என்று அன்புடன் அழைக்கின்றனர். தங்களது உடல் நலம் சரி இல்லாத குழந்தைகளை உடன் அழைத்துக் கொண்டு புற்றடியில் பூட்டு போட்டு சாவியை உண்டியலில் செலுத்தி விட்டு செல்கின்றனர். பள்ளியறை அருகே இஸ்லாமியர்கள் அமர்ந்து இங்கு தொழுகை செய்வதை நீங்களே பார்க்கலாம். வைகாசி மற்றும் ஆடி மாதங்களில் நடைபெறும் கோவில் திருவிழாவில் இஸ்லாமியர்களும் நன்கொடை கொடுக்கின்றனர்.

நீதி வழங்கும் நாக நாதர்

நீதி வழங்கும் நாக நாதர்

இந்த கோவிலின் முக்கிய தெய்வமான நாக நாதர் பல அநீதிகளை தடுத்து நியாயம் வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலில் பல பஞ்சாயத்துகளும், வழக்குகளும் அரங்கேறுகின்றன. அதில் நியாயம் உள்ளவர் பக்கம் தீர்ப்பு கிடைக்கிறது. அதே போல வழக்கில் பொய் சாட்சி சொல்வது, பொய் சொல்லி வழக்கை ஜெயிக்கலாம் என்ற எண்ணம் கொண்டு இந்த கோவிலுக்கு நீங்கள் வருகை தந்தால் உங்களை நாகம் தீண்டிவிடும் என்றும் இந்த ஊர் மக்கள் எச்சரிக்கின்றனர்.

உடலையும் மனதையும் சுத்தம் செய்து உள்ளே செல்லுங்கள்

உடலையும் மனதையும் சுத்தம் செய்து உள்ளே செல்லுங்கள்

கோயிலுக்கு உள்ளே செல்வதற்கு முன் வாசுகி தீர்த்தம் என்றழைக்கப்படும் கோவில் குளத்தில் உங்களது கால்களை கழுவிவிட்டு செல்ல வேண்டும். அந்த குளம் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக இருக்கிறது, நீங்கள் அந்த குளத்தில் குளிக்கவும் செய்யலாம். ஆனால் ஆழம் அதிகம் போல தெரிவதால் சற்று கூடுதல் கவனமாக இருக்கவும். கோவில் குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன, அங்கே பொறி பாக்கெட்டுகளும் விற்கப்படுகின்றன. நீங்கள் அவற்றை குளத்தில் உள்ள மீன்களுக்கு வாங்கி போடலாம்.

கேட்டது கிடைக்கும்

கேட்டது கிடைக்கும்

அருள்மிகு சௌந்தர நாயகி சமேத நாக நாத சுவாமி திருக்கோயிலில் கோவிலில் ஏகப்பட்ட வேண்டுதல் இருக்கின்றன. எங்கு திரும்பினாலும் வேண்டுதலுக்கு தேவைப்படும் தொட்டில், அங்கவஸ்திரம், முட்டை மற்றும் பூஜை பொருட்கள் விற்கப்படுகின்றன. குழந்தை வரம், திருமணத்தடை, வேலை வாய்ப்பு, உடல் நலம், வீடு கட்டுதல் போன்று எதுவானாலும் இங்கு மனமுருகி வேண்டிக் கொண்டால் அனைத்தும் நடக்கிறதாம். அதன் பின்னரே வேண்டிக்கொண்ட பக்கதர்கள் தங்களால் முடிந்த வேண்டுதல்களை இங்கு நிறைவேற்றுகின்றனர்.

ரம்மியமான அழகிய பழங்கால கோயில்

ரம்மியமான அழகிய பழங்கால கோயில்

பழங்கால கோவில் என்பதால் விமானம், தூண்கள், கோபுரம் என அனைத்தும் கருங்கற்களால் ஆனது. இந்த கோவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. நாக நாதரையும் சௌந்திராம்பாள் தரிசித்து விட்டு, முருகப் பெருமான், மகாலட்சுமி, மூன்று விநாயகர், துர்க்கை, புற்றுக் கோயில் ஆகியவற்றையும் வழிபடவேண்டும். தட்சிணாமூர்த்தி சன்னதி, சூரியன் மற்றும் சந்திரன் சன்னதி, நாயன்மார்கள் சன்னதி, சப்த கன்னிகள் சன்னதி ஆகியவையும் உள்ளன. மேலும் பல வித்தியாசமான சிற்பங்களை நீங்கள் இந்த கருங்கல் தூண்களில் காணலாம்.

கோயிலில் உள்ள சிறப்பு வேண்டுதல்கள்

கோயிலில் உள்ள சிறப்பு வேண்டுதல்கள்

சிவன் சன்னதிக்கு அப்படியே பின்புறம் இருக்கும் புற்றடியில் அதிக வேண்டுதல்கள் நடைபெறுகின்றன. முட்டை, பால், கயிறு கட்டுதல், பூட்டு பூட்டுதல், வளையல் சாற்றுவது போன்ற வேண்டுதல்கள் இங்கு வைக்கப்படுகின்றன. இந்த புற்றுமண் சர்வ நோய்களை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த புற்றுக்கு மேலே கற்களால் ஆன சங்கிலிகள் உள்ளன. இந்த சங்கிலிகளில் பாம்புகள் விளையாடுமாம். அதை நேரிலே பார்த்ததாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அம்பாளிடம் எண்ணெய் வாங்கி கர்ப்பிணி பெண்கள் தடவிக் கொண்டால் எந்த குறையுமின்றி குழந்தை பிறப்பதோடு சுக பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். அதே போல இங்கு சேவல் சாத்துவது, வெள்ளியால் ஆன பொருட்கள் சாத்துவது இங்கு கடைபிடிக்கப்படுகிறது.

பல அற்புதங்கள் அரங்கேறிய ஸ்தலம்

பல அற்புதங்கள் அரங்கேறிய ஸ்தலம்

திருமருதூர் என்ற பெயர் கொண்ட இந்த ஊரில், திரிசங்கு என்ற ஒருவர் இருந்தாராம். தன் பூத உடலுடன் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்று ஆசைக்கொண்ட திரிசங்கு, தன் குருநாதர் வசிஷ்டரிடம் இது பற்றி கேக்க, இதற்கு ஒரு வருடம் நீ கடுமையான தவம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அதனை மறுத்த திரிசங்குவை வசிஷ்டர் சாபம் கொடுத்து அனுப்பி விடவே, அதனை சரி செய்ய விசுவாமித்திரை வேண்டினாராம் திரிசங்கு. 1000 முனிவர்கள் சேர்ந்து தவம் செய்தால் உன் சாபம் நீங்கி நீ சொர்க்கத்திற்கு போகலாம் என விசுவாமித்திரர் கூறி 1000 முனிவர்களையும் வரவழைக்கிறாராம். ஒரு சாபம் பெற்றவனை விடுவிக்க நாங்கள் தவம் செய்ய வேண்டுமா? முடியாது என அந்த 1000 முனிவர்கள் கூறிய உடனே, விசுவாமித்திரர் அந்த 1000 முனிவர்களையும் சபிக்கிறார். அந்த 1000 முனிவர்களும் இந்த சிவபெருமானை வணங்கி சாப விமோட்சணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

கோயில் மட்டுமல்லாமல் இந்த மாவட்டமே மத ஒற்றுமையோடு தான் செயல்படுகின்றது. இங்கு ஒரு ராமர் பாலம் கூட இருக்கிறதாம். நீங்கள் எப்பொழுது இந்த அழகிய கோயிலுக்கு செல்ல போகிறீர்கள்?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X