» »சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2

Posted By: Udhaya

சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்வது தங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். அப்படி பெயரும்போது நம்மில் பலரது ராசிக்கு மிகுந்த சோதனையை உண்டாக்கும். சிலருக்கு அவர்களது ராசிநாதன் காரணமாக சிறப்பான வாழ்வு அமையலாம். ஆனால், சனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் அவர் தலத்திலேயே சென்று சரணடைந்திட வேண்டும்.

மேஷம், கடகம், சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் பிறக்கிறது என்கிறார்கள் ஜோதிடர்கள். அதே நேரத்தில் மற்ற ராசிக்காரர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய கோயில்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கோலியனூர்

கோலியனூர்

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம். சிம்மம் ராசியினருக்கு புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. கண்டக சனியில் இருந்து தப்பி விட்டீர்கள். இனி அலைச்சல் இருக்காது.மருத்துவ செலவுகள் இருக்காது.பணவிரயம் குறைந்து சேமிப்பு அதிகமாகும்.
wiki

கோலியனூர் செல்வது எப்படி?

கோலியனூர் செல்வது எப்படி?

1000 முதல் 2000 வருடங்கள் பழமையான இந்த கோயில், விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் விழுப்புரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. செல்லும் வழியில் ரயிலடி விநாயகர் கோயில், ஆஞ்சநேயர்கோயில், உன்னூர் மஸ்ஜித், சேவியர் திருவாலயம்,கிறிஸ்துராஜா ஆலயம், நவதுர்கா ஆலயம் உள்ளிட்ட புனிததலங்கள் உள்ளன.

புதுக்கோட்டை - எட்டியத்தளி

புதுக்கோட்டை - எட்டியத்தளி

அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

wiki

எட்டியத்தளி எப்படி செல்வது

எட்டியத்தளி எப்படி செல்வது


8000 வருட பழமையான கோயிலான இது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி.

மொரட்டாண்டி

மொரட்டாண்டி

மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் ஒரு கரத்தில் வில், மறுகரத்தில் அம்பு, மற்ற இரு கரங்கள் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள்கிறார். சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளையும் தன்னுடலில் கொண்டு நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளது.

wiki

மொரட்டாண்டி செல்வது எப்படி

மொரட்டாண்டி செல்வது எப்படி

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்து அமைந்துள்ளது மொரட்டாண்டி எனும் கிராமம். திண்டிவனத்திலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

 திருக்கோடிக்காவல் பால சனி

திருக்கோடிக்காவல் பால சனி


கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சூரியனார் கோயிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். இத்தலத்தில் சனிபகவான் குழந்தை வடிவில் தரிசனமளிக்கிறார். எந்த ஜீவராசிகளையும் நான் பார்த்தால் அதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அப்பாவம் கரைய கோடீஸ்வரன் முன் அமர்கிறேன் என சனிபகவான் அரைக்கண்ணை மூடிய நிலையில் யோக நிலையில் அபூர்வ திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.
wiki

திருக்கோடிக்காவல் எப்படி செல்லலாம்

திருக்கோடிக்காவல் எப்படி செல்லலாம்

கும்பகோணத்திலிருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கோடிக்காவல். இந்த வழியில் ஸ்ரீ அபிராமி சுந்தரேஸ்வரர் கோயில், பிரத்யாங்கிரி தேவி கோயில், இடங்கொண்டீஸ்வரர் கோயில், யோகநந்தீஸ்வரர் கோயில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில்,ரேணுகாதேவி பாளையம்மன் கோயில் என எண்ணற்ற கோயில்களைக் காணலாம்.

திருவாஞ்சியம்

திருவாஞ்சியம்

காசிக்கு நிகரான இத்தலத்தில் குப்த கங்கையில் நீராடி, எமதீர்த்தத்திலும் நீராடி, இங்கு அருளும் ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டார் சனிபகவான். மூல இறைவர்களைத் தவிர, இங்கு அருளும் யமதர்ம ராஜனையும் வணங்கினால், சனிபகவானின் அருள் நமக்கு கிட்டும்.
wiki

திருவாஞ்சியம் செல்லும் வழி

திருவாஞ்சியம் செல்லும் வழி

கும்பகோணம்-நன்னிலம்-திருவாரூர் வழியில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 17கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அரகண்டநல்லூர்

அரகண்டநல்லூர்

திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அரகண்டநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோயிலின் பிராகாரத்தில் சனிபகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்து ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார்.

Ssriram mt

அரகண்டநல்லூர் வழிகாட்டி

அரகண்டநல்லூர் வழிகாட்டி

திருக்கோவிலூரிலிருந்து 10கிமீ தொலைவில் அமைந்துள்ளது அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் கோயில். பெண்ணையாற்றைக் கடந்து திருக்கோவிலூர் வெட்டவாலம் சாலையில் பயணித்தால் 20 நிமிடங்களுக்குள் கோயிலை அடையலாம்.

திருநெல்லிக்காவல்

திருநெல்லிக்காவல்


திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.

திருநெல்லிக்காவல் செல்லும் வழி

திருநெல்லிக்காவல் செல்லும் வழி

திருவாரூரிலிருந்து 20கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருநெல்லிக்காவல்.

 இடும்பாவனம்

இடும்பாவனம்


இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தி யதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.

Sankarveeraiyan

இடும்பாவனம் செல்வது எப்படி

இடும்பாவனம் செல்வது எப்படி

முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். திருத்துறைப் பூண்டியிலிருந்து 14கிமீ தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.

ஈரோடு - குருமந்தூர்

ஈரோடு - குருமந்தூர்


நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன.
wiki

குருமந்தூர் எப்படி செல்வது

குருமந்தூர் எப்படி செல்வது

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம், குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்.

பவானி - கொடுமுடி

பவானி - கொடுமுடி

கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம்; சனிபகவான் அருள் கிட்டும்.
wiki

கொடுமுடி எப்படி செல்லலாம்

கொடுமுடி எப்படி செல்லலாம்

ஈரோட்டிலிருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த கோயில். மேலும் கரூர் வழியாக 27கிமீ தொலைவில் இருக்கும் இந்த இடத்தை 40நிமிடத்தில் அடையலாம். மேற்கில் இருந்து வருபவர்கள் காங்கேயத்திலிருந்து 45 நிமிடங்களில் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது இந்த கோயில்.

திருவைகுண்டம்

திருவைகுண்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் (ஸ்ரீவைகுண்டம் தமிழில் திருவைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது)நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனிபகவானால் ஏற்படும் திருமண தடைகள் விலக, மனம்போல மாங்கல்யம் கிடைக்கிறது. இழந்த சொத்துகளும் இந்த இறைவன் அருளால் திரும்பக்கிடைக்கிறது என்பது ஐதீகம்.

Ssriram mt

திருவைகுண்டம் செல்வது எப்படி?

திருவைகுண்டம் செல்வது எப்படி?

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 25கிமீ தொலைவில் திருவைகுண்டம் உள்ளது. அருகில் தேரிக்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்