» »சிந்துசமவெளி நாகரிகத்துக்கு ஒப்பான ஆதிச்சநல்லூர் - ஆதித்தமிழனின் அடையாளம்?

சிந்துசமவெளி நாகரிகத்துக்கு ஒப்பான ஆதிச்சநல்லூர் - ஆதித்தமிழனின் அடையாளம்?

Posted By: Udhaya

காவிரியை அறியாதோர் யாவரும் இல்லை. அதற்கு நிகரான பெருமைகொண்ட ஒரு நதி, தற்போது வாழ்வாதாரத்தை இழந்து வருகிறது. தென் தமிழகத்தின் அதிக சுற்றுலாத்தளங்களும் இந்த நதிக்கரைகளில் அமைந்துள்ளது. இதனால் சுற்றுலாத்தளங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அச்சம்கொள்ளப்படுகிறது.

ஆண்டு முழுவதும் நீர் ஓடும் ஒரு நதி தமிழகத்தின் ஒரே நதி தாமிரபரணிதான். காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகி வருகிறது. ஆனால் தாமிரபரணி தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கிறது. இதனால்தானோ என்னவோ அக்கறையில்லாமல் கிட்டத்தட்ட 70 சதவிகித தாமிரபரணியை இழந்துவிட்டோம். இதனால் நாம் இழக்கப்போவது பல சுற்றுலாத் தளங்களையும்தான். என்னென்ன இடங்கள் தாமிரபரணியை ஒட்டியுள்ளன பார்க்கலாம் வாருங்கள்.

 தோற்றம்

தோற்றம்

தாமிரபரணி நதி, திருநெல்வேளியின் மேற்கே பாபநாசத்தின் மேலே இருக்கும் பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. இந்த மலை மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களுள் ஒன்றாகும். மேலும் இந்த நதி, பல சிற்றாறுகளுடன் இணைந்து திருநெல்வேலி, திருவைகுண்டம்,ஆழ்வார் திருநகரி, ஏரல் போன்ற ஊர்களின் வழியாக கிட்டத்தட்ட 125கிமீ தூரம் ஓடி, திருச்செந்தூருக்கு அருகிலுள்ள புன்னக்காயல் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது.

 வற்றாத ஜீவ நதி

வற்றாத ஜீவ நதி


இந்த நதி வற்றாமல் தொடர்ந்து நீர் வந்துகொண்டிருக்க காரணம், இது இரண்டு பருவமழைகளிலும் நீர் பெறுகிறது என்பதே. வடகிழக்கு பருமழையிலும் சரி, தென்மேற்கு பருவமழையிலும் சரி பொதிகை மலையில் விழும் நீர் ஓடோடி வந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் பலபகுதிகளை வளமாக்குகிறது.

Raghukraman

பண்பாடு

பண்பாடு

மனிதன் தோன்றி நாகரிகம் வளர்ந்து நதிக்கரையில் வாழத்தொடங்கியதிலிருந்து அவன் பண்பாட்டையும் ஆற்றங்கரைகளிலேயே வளர்த்து வந்தான். நதிக்கரைகளிலேயே நகரங்களும் உருவாகின. ஆறுகள் தந்த செழுமைதான் அந்த பகுதியின் வளர்ச்சியாக கணக்கிடப்பட்டது.

நாகரிகம் வளர வளர கலைகளும், கோயில்களும் வளர ஆரம்பித்தன. இதனால்தான் ஆன்மீகம், கலை, சுற்றுலா எனும் ஏதோ ஒரு வடிவத்தில் நாம் அத்தனை இடங்களுக்கும் சென்று வருகிறோம்.

asi

தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்

பாணதீர்த்தம், கல்யாணதீர்த்தம், அகத்தியர் தீர்த்தமென்று முக்கிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் வழியாக இந்த ஆறு கடந்து வருகிறது.

Abhijith VG

கல்யாணத் தீர்த்தம்

கல்யாணத் தீர்த்தம்

அகத்தியருக்கு சிவபெருமான் தனது கல்யாண தரிசனத்தை பொதிகை மலையில் தந்ததாக கருதுகின்றனர். இதனால் இந்த தீர்த்தத்துக்கு கல்யாணதீர்த்தம் என்று பெயராம். பாபநாசத்திலிருந்து சிலகிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு கல்யாணத் தீர்த்தம் என்று பெயர்.

Kamalakarthickn9

மகாபாரதத்தில் தாமிரபரணி

மகாபாரதத்தில் தாமிரபரணி

தாமிரபரணி நதி மகாபாரதத்தில்கூட குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாமிரபரணியின் இணையாறு சிற்றாறுதான் குற்றாலத்தில் அருவியாக விழுகிறது. இது தாமிரபரணியின் கிளையாறு இல்லை. தாமிரபரணிக்கு ஈடாக அதாவது இணையாக பொதிகைமலையில் உருவாகும் மற்றொரு நதி.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர்

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பழமை வரலாறுகளின்படி, இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். ஆதிதமிழர்கள் இந்த நதிக்கரையில்தான் வாழ்ந்திருக்கின்றனர். குமரி கண்டம் கடலுக்குள் சென்றபிறகு வாழ்ந்தவர்களின் பகுதி திருநெல்வேலியாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

asi

நதிகள்

நதிகள்

இங்கு உற்பத்தியாகும் நதிகள் மிகவும் சிறப்பானவை. அனைத்தும் சுற்றுலா அம்சங்களுடன் உள்ளது.
காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு என இந்த ஆறுகள் ஒவ்வொன்றும் சிறப்புவாய்ந்தவை. மேலும் அந்தந்த பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குபவை.

Karthikeyan.pandian

 களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

காரையாறு மற்றும் சேர்வலாறு ஆகிய இரு நதிகளும் இந்த களக்காடு முண்டந்துறை காடுகளில் உற்பத்தியாகி, ஓடி கடலில் அல்லது தாமிரபரணி நதியில் கலக்கின்றன.

காரையாறு அணையிலும், சேர்வலாறு பாபநாசம் சரணாலயத்திலும் சென்று முடிவடைகிறது.

Raghukraman

 முண்டந்துறை சுற்றுலா

முண்டந்துறை சுற்றுலா

புலிகள் வாழும் காடு. இந்தியாவிலேயே மிகச் சிறப்புவாய்ந்தது. 895 சகிமீ பரப்பளவு கொண்டது இந்த காடு. இங்கு புலி, சிறுத்தை, மிளா வகை இனங்கள். மான், யானை போன்ற விலங்குகளும் வாழ்கின்றன.

வனத்துறையினரின் அனுமதியுடன் டிரெக்கிங் செய்யலாம்.

 மாஞ்சோலை மலை

மாஞ்சோலை மலை

இந்தியாவில் இல்லை, தமிழகத்திலேயே பலருக்கு தெரிந்திராத இந்த மலைப்பகுதி பெயருக்கு ஏற்றார்போல சோலையாகும்.

மிகவும் அழகான இந்த மலைப்பிரதேசம் சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என்றாலும், வனத்துறையினர் இங்கு அனுமதிப்பதில்லை. இங்கிருந்துதான் மணிமுத்தாறு உற்பத்தியாகிறது. இங்கு செல்ல அனுமதி உண்டு.

Raghukrama

மணிமுத்தாறு

மணிமுத்தாறு

திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு ஆறு மணிமுத்தாறு. இங்கு மணிமுத்தாறு அணையும் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தளமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வழியாக பாய்ந்து தாமிரபரணி ஆற்றில் கடக்கிறது. மேலும் இதன் இன்னொரு பகுதி கோதையாறாக குமரி மாவட்டத்தின் வழியே ஓடி அரபிக்கடலில் கலக்கிறது.

wiki

குற்றால அருவிகள்

குற்றால அருவிகள்

குற்றால அருவிகள் என்பன மொத்தம் ஒன்பது. அவை பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழையகுற்றாலம், பாலருவி ஆகியன.

இதுதான் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. அதற்கு கொஞ்சம் தொலைவில் சிற்றருவி அமைந்துள்ளது. 2 கிமீ நடந்து சென்றால் செண்பகாதேவி அருவிக்கு சென்றுவிடலாம். இங்கு செண்பகாதேவி அம்மன் கோயில் மிகச் சிறப்பானதாக வழிபடப்படுகிறது.

ஐந்து இடங்களில் பரவி விரிந்து விழுவதால் அந்த அருவிக்கு ஐந்தருவி என்று பெயர் வந்தது. மேலும் சிறுவர்கள் குளிக்கும் புலி அருவி உள்ளது.

Raghukraman

 தாமிரபரணி என்ட் டூ என்ட்

தாமிரபரணி என்ட் டூ என்ட்

மேற்கில் பொதிகை மலையில் உருவாகி, பாபநாசம் வழி வந்து, புன்னக்காயலில் கரை சேரும் இந்நதிக்கரையில் நிறைய சுற்றுலாத் தளங்களும் உள்ளன.

அம்பை, கல்லிடைக்குறிச்சி வழி பாய்ந்து, சேரன்மாதேவி வழி சிறுவோடையாக மாறி நிற்கிறது. முக்கூடல் வழியாகப் பாயும் பெருநதி திருநெல்வேலி நகரத்தை அடைந்து, சீவலப்பேரி அருகே இரண்டாக பிரிந்து கங்கை கொண்டான் வழி ஒன்றும், முரப்பநாடு, திருவைகுண்டம் வழி மற்ற பிரிவும் ஓடுகிறது. முக்காணி அருகே பலவாறாக சிதறி ஓடும் நதி இறுதியில் கடலில் கலக்கிறது.

Read more about: travel tour forest

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்