Search
  • Follow NativePlanet
Share
» »மரண ஒலி கேட்கும் நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி! மர்மம் என்ன தெரியுமா ? #தேடிப்போலாமா 8

மரண ஒலி கேட்கும் நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி! மர்மம் என்ன தெரியுமா ? #தேடிப்போலாமா 8

மரண ஒலி கேட்கும் நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி! மர்மம் என்ன தெரியுமா ?

சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி இசை ஒலி எழுப்புகிறது என்றால் நம்புவீர்களா? இப்போதே அது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் தானே! அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரைதான். வாருங்கள் சிந்துதுர்க் மாவட்டத்தின் இந்த நீர்வீழ்ச்சி பற்றியும், அருகாமை சுற்றுலாத் தளங்கள் பற்றியும் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்குள்ளது

சிந்துதுர்க் மாவட்டத்தில், அம்போலி எனும் அழகிய நகரத்துக்கு அருகில் கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் உயரம் 40 அடி ஆகும். மிகவும் சிலிர்ப்பூட்டும் உணர்வுகளோடு இந்த அருவிக்கு பயணிக்கலாம் வாங்க.

எப்படி செல்வது

இந்த இடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருந்தாலும், கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து எளிதாக செல்லும்படியாக உள்ளது.

இந்த பதிவில், கர்நாடக மாநிலம் பெலகாம், கோவாவின் பனாஜி மற்றும் மகாராஸ்டிரா மாநிலத்தின் அம்போலியிலிருந்து எப்படி செல்வது என பாக்கலாம்.

பெலகாம் - நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி

பெலகாம் - நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி

பெலகாம் நகரத்திலிருந்து 58 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.
சுல்கா - ஷின்னோலி - சந்த்காடு - கனூர் - சதேகுதவாலி வழியாக இந்த நீர்வீழ்ச்சியை எளிதில் அடையலாம்.

இந்த வழியில் பயணிப்பதால் 1.30 மணி நேரங்கள் ஆகும்.

பனாஜி - நங்கர்த்தாஸ்

பனாஜி - நங்கர்த்தாஸ்

ஒருவேளை நீங்கள் கோவாவில் சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அங்கிருந்து 100 கிமீ தொலைவுக்குள் ஒரு இடத்துக்கு செல்லவேண்டும் என விரும்பினால் இங்கு சென்று வரலாம்.

மொத்தம் 92 கிமீ தொலைவு பயணத்தை கிட்டத்தட்ட 2.30 மணி நேரங்களில் சென்றடையமுடியும்.

அம்போலியிலிருந்து

அம்போலியிலிருந்து


அம்போலியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. 10 முதல் 15 நிமிடங்களில் நீர்வீழ்ச்சியை அடையலாம்.

அருவியின் சிறப்புகள்

நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் மிகவும் அதிக எழிலுடன் காட்சியளிக்கின்றது.

நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி 10 அடி ஆழம் கொண்ட ஒரு பாறைப்பள்ளத்தாக்கில் வீழ்வதால் ஒரு எதிரொலிக்கும் நாதம்(ஒலி) உருவாகி பிரமிக்க வைக்கிறது.

நங்கர்த்தாஸ் அருவியைச்சுற்றிலும் அற்புதமான இயற்கை எழில் நிறைந்து காணப்படுவதால் பயணிகளை சாந்தப்படுத்தி மகிழ்வூட்டும் இயல்புடன் இது அமைந்துள்ளது.

நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி விழும் பாறைப்பள்ளத்தாக்கினை பயணிகள் நன்கு வசதியாக பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு பிரத்யேக பாலமும் இங்கு கட்டப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டா, பேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து சுற்றுலாவைக் கொண்டாடுங்கள்.

அம்போலி நீர்வீழ்ச்சி

அம்போலி நீர்வீழ்ச்சி ஒரு அற்புதமான சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுவதும் ஈர்க்கின்றது. இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அபரிமிதமான நீர்ப்பெருக்குடன் அற்புதமாக காட்சியளிக்கிறது. 8

எப்போது செல்லலாம்?

சுற்றுப்புறமும் பசுமை போர்த்தி காணப்படுகிறது. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சியை புகை மண்டலத்துடன் காட்சியளிக்கும் ஒரு கற்பனாலோகம் போன்று ஆக்குகிறது.ஜுன் முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்

மாலை நேர நடைபயணம்


ஒரு மாலை நேரச்சிற்றுலாவுக்கு மிகப்பொருத்தமான தலம் இந்த ஷிர்காவ்ங்கர் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளமாகும். அம்போலி நகரத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள இது பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.

மழைக்காலத்துக்கு உகந்த சுற்றுலா


இந்த ஸ்தலத்தை மழைக்காலத்தில் விஜயம் செய்து ரசிப்பது சிறந்தது. அச்சமயம் காற்று குளுமையுடனும் தூய்மையாகவும் இருப்பதோடு சுற்றியுள்ள பிரதேசம் புதிய பசுமையழகோடு காட்சியளிக்கின்றது. மேலும் இந்த ஷிர்காவ்ங்கர் பாயிண்டுக்கு செல்லும் பாதையை சுற்றி அடர்த்தியான கானகம் அமைந்துள்ளதால் இயற்கை ரசிப்புக்கு மிக ஏற்றதாக உள்ளது. இந்த மலைக்காட்சி தளத்துக்குஅருகில் ஒரு ஷங்கர் மற்றும் தேவி கோயில் அமைந்துள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X