Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து ஒரே நாளில் பைக்கில் சென்று வரக்கூடிய அசத்தலான இடங்களின் லிஸ்ட் இதோ!

சென்னையிலிருந்து ஒரே நாளில் பைக்கில் சென்று வரக்கூடிய அசத்தலான இடங்களின் லிஸ்ட் இதோ!

என்ன தான் ஏ.சி பேருந்து, ரயில், விமானம், சொகுசு கார் என சுற்றி வந்தாலும் நமக்கு பிடித்த பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு லாங் டிரைவ் செல்வதற்கு எதுவும் ஈடாகாது. கல்லூரி மாணவர்கள் முதல், வேலைக்கு செல்லும் ஆண்கள், தம்பதியர்கள், நண்பர் கூட்டங்கள் என அனைவர்க்கும் பிடித்தமாக இருப்பது பைக் ட்ரிப் தான். நீங்கள் சென்னையில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ஒரே நாளில் பயணம் செய்து ஒரு இடத்திற்கு சென்று பொழுது போக்கிவிட்டு அதே நாளில் சென்னைக்கு திரும்பலாம். உங்களுடைய பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் இருந்து ஒரு சின்ன பிரேக் எடுத்து ஒரு நாள் இந்த இடங்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று வாருங்கள், மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் மனசும் லேசாகிடும் பயணிகளே! சென்னையிலிருந்து ஒரே நாளில் பைக் ட்ரிப் செய்யக்கூடிய இடங்களின் லிஸ்ட் இதோ!

1

தடா/ உப்பலமடுகு

தடா நீர்வீழ்ச்சி உப்பலமுடுகு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதையா மண்டேலில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும். சென்னைவாசிகள் பலரும் தடா நீர்வீழ்ச்சி பற்றி அறிந்திருப்பார்கள். எது எப்படி இருந்தாலும் சென்னையிலிருந்து தடாவிற்கு பைக்கில் செல்வது ஒரு அருமையான யோசனை.

2

மாமண்டூர் காடுகள்

சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் பைக் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். முற்றிலும் நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழலில் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகர வாசிகளுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதம் தான்.

3

புலிகட் ஏரி

இந்த ஆஃப்பீட் கெட்வே நகரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. புலிகாட் ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர் தடாகம் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாகும். இந்த ஏரி புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயத்தை உள்ளடக்கியது மற்றும் இந்தியாவின் ஒரே செயற்கைக்கோள் மையங்களில் ஒன்றான தடை தீவான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகாமையில் உள்ளது. இந்த ஏரியில் 16 தீவுகள் முகாமிட்டுள்ளன, மேலும் இது புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாகும். பறவைகளைப் பார்ப்பது மற்றும் படகு சவாரி செய்வதும் மிகவும் பிரபலமானது.

4

வேடந்தாங்கல்

சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். உலகின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக 1798-ஆம் ஆண்டிலிருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், புகலிடமாகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. சென்னையிலிருந்து ஒரு நாள் பைக் ட்ரிப் செய்து நண்பர்களுடன் இயற்கையான சூழலை குதுகலிக்க வேடந்தாங்கலுக்கு செல்லுங்கள்.

5

மகாபலிபுரம்

சென்னைக்கு அருகே கலாச்சார ரீதியாக மிகவும் வளமான நகரமாக அடையாளம் காணப்படும் மகாபலிபுரம் ஆண்டுதோறும் எண்ணற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. மூன்று பக்கமும் கடற்கரைகள், பல்லவர் காலத்து குடைவரை கோவில்கள், தேர்கள், ஷாப்பிங், சர்ஃபிங் என மகாபலிபுரத்தில் உள்ள விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்! சுற்றிப் பார்ப்பதையும் தாண்டி இங்குள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன, இந்த இடத்திற்கு சென்னையிலிருந்து பைக்கில் தான் வரவேண்டும். ECR சாலையில் ஒரு சின்ன பயணம் உங்களை நிச்சயாம் மகிழ்வூட்டும்.

6

புதுச்சேரி

பிரஞ்சு கலாச்சாரம், பழங்கால கட்டிடக்கலை, வண்ணமயமான கடற்கரைகள், வித விதமான கஃபேக்கள், பப்கள், ஷாப்பிங் என சுதந்திரமான சுற்றுலாவை பயணிகளுக்கு வழங்குகிறது நம் புதுச்சேரி. நாளுக்கு நாள் புதுச்சேரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வார இறுதிகளில் சென்னையில் இருந்து எக்கசக்கமான இஅலைக்நர்கல் புதுச்சேரி நோக்கி படையெடுக்கின்றனர். நீங்களும் உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் துணையுடன் புதுவைக்கு பைக்கில் சென்று ஒரு மறக்க முடியாத பயணத்தை உருவாக்குங்கள். முக்கியமாக அங்கே ஷாப்பிங் செய்ய மறக்காதீர்கள், மிகவும் மலிவான விலையில் அழகிய ஆடைகளை வாங்கி மகிழலாம்!

7

பிச்சாவரம்

நீங்கள் மகாபலிபுரம், புதுச்சேரி பயணத்தை சற்றே கொஞ்சம் தொடர்ந்தால் மிகவும் அழகிய இடமான பிச்சாவரத்தை அடையலாம். சென்னையை சுற்றியுள்ள இளைஞர்களும், புதியதாக திருமணமான இணைகளும் அடிக்கடி வருகை தரும் இடம் பிச்சாவரம். இங்கு செல்வது மிக எளிது என்பதாலும், இயற்கை விரும்பிகளுக்கு தனிமையுடன் கூடிய நல்ல அமைதியும் கிடைக்கும் என்பதாலும், நீண்ட நேர பைக் ரைடு மற்றும் லாங்க் டிரைவ் போக வழிவகுக்கும் என்பதாலும் இந்த இடம் அதிகம் விரும்பப்படுகிறது. பாண்டிச்சேரியில் இருந்து 66 கி.மீ தொலைவில் இருக்கும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள். இந்தியாவிலேயே இவ்வகை மாங்க்ரோவ் காடுகள் மேற்கு வங்காளத்திலும் தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தை நாம் மிஸ் பண்ணலாமா?

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+